(Reading time: 17 - 34 minutes)

ங்க மாமா பண்றதை பார்த்தா... எனக்கு டாடீ நியாபகம் வருதுடா... அவரும் இப்படிதான் உன் கையை பிடிச்சு சொல்லிக்கொடுத்தார்... ஆனா எனக்கு என் போக்கிலேயே விட்டு ரூல்ஸ் கத்துக்கொடுத்து என்னை தயார் செய்தார்.... பையனையும் பெண்ணையும் ஹாண்டில் செய்யற விதம்... அப்படியே இருக்கு உங்க மாமாகிட்ட...

அப்பாவை போல மாமாவுக்கும் தன் பொண்ணு மேல தான் அவ்வளவு ப்ரியம்..' என்றான் சிரித்துக்கொண்டே

இருக்கலாம்... ஆனா என் டாடீ மாதிரி யாராலேயும் வர முடியாது... ஏன் அவர் பிள்ளை நீ... உன்னாலேயும் வர முடியாது...

என்கிட்ட ஸ்டரிக்டா இருந்த அப்பா உன்னை தூக்கி வெச்சிதான் கொண்டாடினார். நீனா எப்பவுமே அப்பாவுக்கு ஸ்பேஷல் தான்...

அப்படியேல்லாமில்லடா... ' என்று சொன்னாலும் அவளுக்கு தெரியும் அவள் டாடீக்கு அவள் என்றால் உயிர் என்று! 

அவர் உடலைவிட்டு உயிர் போகும் தருவாயிலும் யாரையும் தேடாமல் அவர் கண்கள் நீலாம்பரியிடமே நிலைத்து நின்றது கண்ணீருடன். அவர் கையை பிடித்துக்கொண்டு 'ஒன்னுமில்ல டாடீ... தம்பி இப்போ வந்திடுவான் காலேஜ்லயிருந்து... நீங்க இப்படி பேசாம ஹாஸ்பிட்டல்ல இருந்தா தம்பி கோவிச்சுக்வான்பா... தைரியமா இருங்க... சீக்கிரமா எழுந்துவாங்க..'என்று கூறியது நினைவு வந்து தம்பி மடியில் படுத்துக்கொண்டாள்.

த்ச்... அக்கா... என்ன இது சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு...' என்று சமாதானம் செய்தான் தம்பி.

சந்தோஷின் பிள்ளைகள் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்க தனக்கும் சைக்கிள் வேணும் என்று அடம்பிடித்தாள் அவினி. அன்றே மகளின் ஆசையை நிறைவேற்றி வைத்தான் தந்தை. அப்பா எனக்கும் சைக்கிள்...' என்று மகன் கேட்க இன்னும் த்ரீ இயர்ஸ் கழிச்சுதான் உனக்கு சைக்கிள் என்றுவிட்டான் ப்ரபு.

அம்மா... அப்பாவை எனக்கும் வாங்கி தர சொல்லுங்கமா..' என்று கெஞ்ச அம்மாவோ...'அப்பா சொன்னா க்ரக்டா தான் இருக்கும்... அப்பா சொல்றத கேளூ சுந்தர்' என்றுவிட்டாள்.

பார்த்து பார்த்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தான் ப்ரபு அதுவும் தங்கள் வீட்டு தோட்டத்திலேயே உள்ள ஜாகிங் டிராக்கில்...

அன்று சந்தோஷ் அவர்கள் கார் ஷேட்டில் இருந்து தன் அண்ணனது பழைய பைக்கை வெளியே எடுத்தான். ப்ரபு அவன் பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது அடம்பிடித்து வாங்கிய பைக் அது. சக்தி கம்பெனிஸின் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு அதை தொடுவதற்கே நேரமில்லாமல் போனது. சந்தோஷ் அதை எடுத்து சுத்தம் செய்ய ப்ரபு பரபரப்புடன் வந்து சுத்தம் செய்ய தொடங்கினான். மெக்கானிக்கை வைத்து சரி செய்து ஓட்டி பார்த்த போது அவினி ஆர்பரித்து தந்தையை கட்டிக்கொண்டாள்.

டாடீ... என்னை வெளியே ஒரு ரைட்... உங்க பைக்குல கூட்டி போங்க ப்ளிஸ்...' என்று கெஞ்ச தந்தை மனம் இளகிவிட்டது. 

அண்ணா.. அண்ணியை கூட்டி போங்க முதல்ல... அவங்க எத்தனை வருஷமா கேட்கறாங்க...' என்றான் சந்தோஷ்.

இல்லடா.. என் அவினி செல்லம் கேட்டுட்டா.. அப்படி இல்லைனாலும் அவதான் முதல்ல எனக்கு...நீ வாடா செல்லம் நாம போகலாம்..' என்று ஹெல்மட்டை எடுத்து அணிந்துக்கொண்டு இருவரும் புறப்பட்டனர். அரை மணி நேரத்தில் திரும்பி வந்து சுந்தரையும் அழைத்து சென்றனர் இருவரும். அப்பாவும் பிள்ளைகளும் ஊர் சுற்றிவிட்டு திரும்ப கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமானது!

அப்பா.. அந்த ஆடீ க்யூ5 ஹைபிரிட் வேண்டாம் பா நமக்கு... ஒரு பைக் வாங்கிடலாம் பா... நீங்க அதையே டரைவ் செய்துகிட்டு ஆப்பிஸ் போங்க பா..' என்றவாரே தான் உள்ளே நுழைந்தாள் அவினி.

ப்ரபு நிலாவை பார்க்க அவளோ முகத்தை திருப்பிகொண்டு சென்றுவிட்டாள். மறு நாள் முதல் இந்த தந்தையும் மகளும் செய்யும் அட்டகாசத்தை பொருத்துக்கொள்ள முடியவில்லை. தோட்டம்... செடி.. கொடி என்றால் பத்து அடி ஓடும் ப்ரபு அன்று மகள் அவினியுடன் சேர்ந்து ஏதோ செடியை சீர் செய்துக்கொண்டிருந்தான். சுந்தரையும் உடன் இருத்தி!

தற்கு மறு நாள் ஷெட்டில் விளையாட்டு என்று அந்த வீடே களேபரமானது. 

மறு நாள் பேஸ்கட் பால் என்று நாள் ஒரு வண்ணமாய் ஒரு வாரம் பறந்தது. 

வீட்டில் எல்லா பிள்ளைகளையும் விட மூத்தவள் அவினி தான். இத்தனை நாள் வேடிக்கையாய் இரட்டை வாலாய் சுற்றி திரிந்த மகள் இந்த பத்து வயதிலேயே தன் சகோதர சகோதரிகளை பாசமுடன் பார்த்துக்கொண்டாள். காரணம் ப்ரபு! எல்லோரும் அக்கா அக்கா என்று அவள் பின்னால் சுற்றி வர இவள் ஏதோ கேங்க் லீடர் போலவும் அவர்களை பார்த்துக்கொண்டாள்.

சுற்றுலா சென்றிருந்த ப்ரபுவின் பெற்றோரும் சம்மந்திகளும் அன்று வந்து சேர்ந்தனர். பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு எல்லோரும் உணவு உண்டு ஓய்வு எடுத்தனர்.

அவினி யின் வாலுத்தனத்தை அறிந்த நிலாவின் தாய் அவளை அழைத்து அட்வைஸ் மழை பொழிந்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.