(Reading time: 17 - 34 minutes)

'ம்மம்மா... நான் நல்ல பொண்ணு தான்... வேணா என் அப்பாகிட்ட கேளுங்க' என்றாள் பெண். 

அத்தை... அவினிய அவ போக்குல விட்டுறுங்க... தானா பொறுப்பு வந்திடும் அவளுக்கு... இன்னும் சின்ன பொண்ணு தானே அத்தை... பெரிய பொண்ணுங்களே பொறுப்பு இல்லாம நடக்கறாங்க...' என்று மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான் ப்ரபு!

நீங்க கொடுக்கற இடம் தான் மாப்பிள.. அடக்க ஓடுக்கமா இருக்கறாளானு பாருங்க...எப்படி ஆட்டம் போடறா பாருங்க...'

அண்ணி... ஆட்டம் போடுற வயசு தானே... இன்னும் கொஞ்ச நாள் போனா தான கத்துக்க போறா..விடுங்க அண்ணி...இப்போவே இசை எல்லாரையும் எவ்வளவு பொறுப்பா பார்த்துக்கறா பாருங்க...  நிலாவுக்கு பொண்ணை வளர்க்க தெரியாதா என்ன?' என்று பரிந்து வந்தார் நிலாவின் மாமியார்.

என்னவோ அண்ணி... நிலாவையும் இப்படி தான் ஃப்ரீடம் கொடுக்கறேனு சொல்லி அவங்க அப்பா கெடுத்து வெச்சார்... இப்போ அதையே மாப்பிள்ளையும் செய்யறார்.... இத்தனைக்கும் அவர் இவங்க அப்பாவை பார்த்தது கூட கிடையாது...

நிலா அண்ணி இசை அப்படியே உங்கள மாதிரி இருக்கா பாருங்களேன்... ஆப்பீஸ்ல நீங்க நடந்துக்கற மெனரிசம்.. உங்க லீடர்ஷிப் குவாலிட்டீஸ் எல்லாம் உங்களை மாதிரியே இருக்கு...பார்ன் லீடர் அண்ணி உங்க பொண்ணு...' என்று தமிழிசை விளையாடிக்கொண்டிருந்த திசையை காட்டினான் சந்தோஷ்.

அவ பார்ன் லீடராய் இருக்கலாம் சந்து... ஆனா எனக்கு லீடர்ஷிப் குவாலிட்டீஸ் வந்தது சூழ்னிலையினால... அக்குவயர்ட் குவாலிட்டீஸ்.... என்னை நானே தக்க வைத்துக்க... வாழ்க்கையில எதிர் நீச்சல் போட... காலூன்றி நிற்க... என் டாடீயின் இழப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்தை போக்க... இப்படி பல விஷயங்களுக்காக நான் சில குவாலிட்டீஸை அக்குவயர் செய்துக்க வேண்டியிருந்தது... ஆனா இசை அவ அப்பா மாதிரி...' - நீலா

அத்தை...'இப்போ அவளுக்கு இப்படி ஒரு கேங்கை லீட் செய்யும் ஆர்வத்தை தூண்டினால் தான் அவளோட உண்மையான திறமைகள் வெளியில வரும்... அவளுக்கு எந்த மாதிரி விஷயங்கள்ல ஆர்வம் இருக்கு.. என்ன திறமையிருக்கு... அதை எப்படி ட்யூன் செய்யலாம்... எதை ஊக்குவிக்கலாம்... எவற்றை நாசுக்காக கிள்ளி எறிய வேணும்... இப்படி பல விஷயங்களை அப்சர்வ் செய்யலாம் அத்தை... அதனால் தான் அவ இஷ்டத்துக்கு அவளை விட்டிருக்கேன்... அவளை அப்சர்வும் செய்யறேன்...' என்றான் ப்ரபு.

'இங்க.. எங்க சாம்ராஜ்யத்தின் இளவரசி அத்தை... தமிழிசை அவினி! சக்தி குழுமத்தின் அடுத்த நிலை வாரிசு அவ...என் கைக்குள்ள இருக்கற வரை அவ இப்படிதான் இருப்பா... அவளை கல்யாணம் கட்டிக்கொடுக்கற வீட்டுல எப்படி வெச்சிருப்பாங்களோ?? நீங்க என்ன கேட்க வரீங்கனு புரியுது அத்தை...என் பொண்ணு தகுதிக்கு குறைவா நானும் பார்க்க மாட்டேன்.. உங்க பேத்தியும் பார்க்க மாட்டா.. பணம் ஒரு பொருட்டு இல்ல அத்தை... குணம் வேணும்...

என் மாமாவை நான் பார்த்தில்லை அத்தை... ஆனா அவர் வளர்ப்புகளை பார்த்திருக்கேன்... எப்படி வளர்த்திருப்பாரு ஒரு வியூகம் இருக்கு... அவரைப்போல... அவரைவிட இன்னும் மேலா என் பிள்ளைகளை வளர்க்கனும்னு ஆசைப்படறேன்... அதற்கான சிறு முயற்சிகளையும் செய்துட்டு வரேன்...எதையேல்லாம் உங்க பொண்ணு அடிப்பட்டு கத்துகிட்டாளோ... அதையேல்லாம் என் பொண்ணும் கத்துக்கனும்... அவளுக்கான அடிகளை தூணாயிருந்து நான்... நாங்க தாங்கிக்குவோம்!'

என் டாடீயை போல யாராலையும் வர முடியாது... முயற்சி செய்தாலும் முடியாது..' என்றாள் நீலாம்பரி. ஆனால் அவளுக்கு தெரியும் அப்படியே அவள் தந்தையை போல் தன் கணவன் நடந்துக்கொள்கிறான் என்று! 'என் டாடீயும் இப்படிதான் என் போக்கில விட்டு... என் திறமைகளை வளர்க்கவிட்டார்...அவர் இல்லாம இருந்து... சில திறமைகளை வளர்த்துவிட்டார்.... மை ஃபர்ஸ்ட் ஹீரோ... மை ஃபர்ஸ்ட் லவ்... ஐ மிஸ் மை டாட் வெறி பேட்லீ!!!' என்றாள் தன் கணவன் ப்ரபுவிடம் தனிமையில்!

அவள் மன நிலையை புரிந்த ப்ரபு 'வா... நிலா டார்லிங்க்.. ஜாலியா ஒரு ரொமேண்டிக் ரைட் போயிட்டு வரலாம் வா...' என்று இழுத்து சென்றான் ப்ரபு.

வளை இழுத்துக்கொண்டு பைக்கில் பறந்தான் ப்ரபு. கடற்கரையில் கால்களை நனைத்தவாறு நின்றிருந்தனர் இருவரும்.

இல்ல ப்ரபு...ஐ மிஸ் மை டாட் வெறி பேட்லீ... என்று அழுதாள் நீலாம்பரி.

என்னால முடிஞ்ச வரைக்கும் அவர் விட்டு போன ஸ்பேசை நிரப்ப முயற்சி செய்யறேன். ஆனாலும் என்னால முடியல போல.. ஹம்ம்ம்ம் என்ன செய்ய...

உங்களால முடியாது ப்ரபு...அவர் மை ஃபர்ஸ்ட் ஹீரோ... ஆனாலும் நீங்க உங்க பொண்ணுக்கு கொடுக்கற இடத்தை தான் தாங்க முடியலை... முதல்ல நான் தான் பைக் ரைட் கேட்டேன்... ஆனா அவளுக்கு தான் முதல் ப்ரிவரன்ஸ் கொடுக்கறீங்க??

ஆமா..அவளுக்கு தான் ஃபர்ஸ்ட்  ரைட்... ஏன்னா ஷீ ஸ் மை பிரின்சஸ்...  மை லவ் ஃபார் லைவ்...

அப்போ நானு??? என்னதான் ஏதோ லவ் செய்யறதா... அது இதுனு ஏகப்பட்ட வசனம் பேசனீங்க அப்போ?? நான் யாரு அப்போ??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.