(Reading time: 17 - 34 minutes)

நீ என் வாழ்க்கை டீ நிலாபொண்ணு! அவினி என் தேவதை.. வாழ்க்கைக்கு அழகு சேர்க்க வந்த தேவதை... என் வரம் அவள்!

ரொம்ப தான் ஓவரா இருக்கே இது!

எது?? நீ என் வாழ்க்கைனு சொன்னதா?? நீ வேற நான் வேறையா நிலாபொண்ணு.. சொல்லு?

இந்த டயலாக் எல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு... ஆனா என்னைவிட அவதான் முக்கியமா??

பெத்த பொண்ணு மேலேயே பொறாமை படற பாரு...!' என்று நிலாவின் மூக்கை பிடித்து ஆட்டியவன்... 'நான் சில விஷயங்கள் கேட்கறேன் அதுக்கு பதில் சொல்லு... உன் கேள்விக்கு நான் பதில் சொல்லறேன்!' 

சரி கேளுங்க!

ஏன் அவினி என்னை 'டாடீ' நு கூப்பிடக்கூடாது சொன்ன??

ஏன்னா... நான் என் அப்பாவை டாடீனு தான் கூப்பிடுவேன்... யாரு யாரை டாடீனு கூப்பிட்டாலும் எனக்கு என் அப்பா நியாபகம் வந்திடும்... அந்த அப்பாவையும் பிள்ளையும் பார்க்கும் போது... மனசு ஒரு மாதிரி பாரமா ஆகிடும்... ஏக்கம்...

சோ பொறாமை படுவ??

தெரியல ப்ரபு! ஆனா அந்த ஏக்கம் தப்புனு தெரியும்...தடுக்கமுடியல...அப்படி ஒரு ஏக்கம் உங்களை பார்த்து வந்துடக்கூடாதுனு தான் பிள்ளைகளை கண்டிச்சேன்! அதுவும் இல்லாம நீங்க என் டாடீ எப்படி என்னை பார்த்துகிட்டாரோ அதைப்போல்.......தான் பிள்ளைக்களை நீங்க பார்த்துக்கறீங்க!

நமக்கு திருமணமாகும் போது நீ என்ன சொன்ன நினைவிருக்கா?? என் அப்பா என்னை எப்படி பார்த்துகிட்டாரோ.. அதைப்போல்... அதைவிட ஒரு படி மேல போய் என் பிள்ளைகளை தாங்கும் கணவன் வேணும்னு சொன்னியா... இல்லையா?? இப்போ அதைபோல நடந்துகிறேனா இல்லையா??

ஆமாம்...

உனக்கு நான் முக்கியமா இல்ல உங்க டாடீ முக்கியமா?? யாரவது ஒருத்தர் தான் சொல்லனும்!

எனக்கு ரெண்டு பெருமே முக்கியம் ப்ரபு!

அதேல்லாம் தெரியாது! டாடீயா??? புருஷனா???

என் டாடீதான்!

சோ... இப்படி ஒரு பொண்ணு அப்பா மேல பைத்தியமா இவ்வளவு அன்பு வைத்து இருக்குற போது எந்த அப்பாவுக்கு பொண்ணு முதல்லா இல்லாம இருப்பா?? அப்புறம் அவளைவிட அவ அம்மா எப்படி முக்கியமானவளா தெரிவா??

அப்படினா உங்களுக்கு உங்க பொண்ணுதான் முக்கியம்!

ஆமாம்!!! நிச்சயமா..! குழந்தைங்கனா அம்மாகளுக்கு இஷ்டம்னு தெரியும்! புருஷனை விட அவங்க ரொம்ப முக்கியம்...அதுவும் முதல் குழந்தைனா கேட்கவே வேண்டாம்! அதேபோல தான் தந்தைகளுக்கும்னு புரிஞ்ஜிக்கனும்... என் அவினி என் மேல வெச்சிறுக்க பாசத்துக்கு முன்னால் உன் பாசம் எல்லாம் தூசு... அவளோட முழு அன்புக்கும் பாத்திரமானவன் நான்...மாமா எப்படி உனக்கோ அப்படிதான் என் பொண்ணுக்கு நான்... அந்த கர்வம் தான் காரணம்... அதனால தான் அவளுக்கு முதல் உரிமை எதிலும் எப்பவுமே!

நிலா... உனக்கு என் மேல இருக்குற காதல் உனக்கு இரண்டாம் பட்சம் தானே... என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னை அப்படியே விரும்பறது என் பொண்ணு தான்! என் அப்பா அம்மாவிற்கு பிள்ளையா, தம்பி தங்கைகளுக்கு அண்ணனா, நண்பனா.. உனக்கு காதலனா கணவனா... முதலாளியா... இப்படி எத்தனையோ பரிமானங்கள் இருந்தாலும் என்னை ஒரு ஆண்மகனாய் கம்பீரமாய் உணர வைத்தது என் தேவதை மகள் தமிழிசை அவினி தான்!

ஆனந்த யாழை.. படத்துல சொல்லறது போல...  என்னை போன்ற அப்பாக்களுக்கு தெரியும் முத்தம் மட்டும் காமத்தை சேர்ந்தது இல்லை... இந்த மகள்களின் காதலும் நேசமும் கூட காமத்தை சேர்ந்தது இல்லைனு!!!

கண்களில் நீர் மல்க இதழில் புன்னகையுடன் தன் காதல் கணவன் கையை பற்றிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

இப்படி ஒரு அன்பு.. நேசம்.. காதல் இருக்கும் அப்பா என் மகளுக்கு கிடைச்சது... நான் ரொம்ப லக்கிங்க... நம்ம பொண்ணு ரொம்பவும் லக்கி...என் டாடீ இருந்தா அவரையே பொறாமை பட வெச்சிடுவீங்க போல??

இருக்காதா பின்னே... கண்டிப்பா பொறாமை வரும் மாமாவுக்கு ... ஏன்னா எனக்கு இப்படி ஒரு இளவரசிய கொடுத்தது அவருடைய பிரின்சஸ்...என் குஈன் நிலாபொண்ணு...

அது மட்டும் இல்லாம் அவருடைய இளவரசி நீலாம்பரியும் எனக்கு இப்போ ஒரு பொண்ணு தானே!' என்று மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டான் ப்ரபு.

மண்ணில் இந்த காதலின்றி.. யாரும் வாழ்தல் கூடுமோ??

This is entry #46 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.