(Reading time: 18 - 36 minutes)

 “யலாது தினமும் தன்காதலனைத் தேடும் நிலவுப்பெண், அன்றும் மேகங்களில் ஒளிந்தும், மறைந்தும் வந்தாள்”. ஸ்ரீராமனின் அழைப்பிர்க்காக கையில் mobileலுடன் மொட்டைமாடியில் காத்திருந்தாள் ஜானகி. வெள்ளைநிற காரொன்றை கண்ட ஷங்கரன், அதுதன் தோழனின் காரென்று அறிந்து தன்மனைவியை அழைத்தார். வீட்டில் நுழைந்த நம்பி, சுந்தரி தம்பதியினரை வரவேற்று அமரக்கூறினர் ஜானகியின் பெற்றோர்.

 சத்தம் கேட்டு ஓடிவந்தாள் ஜானகி. “என்ன ஆச்சு சம்மந்தி, night 10மணிக்கு வந்திருக்கீங்க” என்று பதட்டத்தோடு வினவினாள் உஷா. “இன்னு என்ன ஆகனு, அதா எல்லா முடிஞ்சிப்போச்சே, இனி சம்மந்தினு கூபுடாதிங்க” என்று கூறியவாறு அழத்துவங்கினாள் சுந்தரி. “ஏன்டா, சுந்தரி அழுவுரா, ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டவாறு தன்தோழனின் தோல்களில் கைவைக்க முயன்றார் ஷங்கரன்.

 தன் கைகளை கூப்பிய நம்பி “என்ன எல்லாறு மன்னிச்சிடுங்க, நான் நேராவே சொல்லிட்ர இந்த கல்யாணம் நடக்காது” என்று கூறினார். ‘அதிர்ச்சியில் உறைந்தாள் ஜானகி.’ “ஜாதகப்பொருத்தம்கூட பாக்காம கல்யானத்துக்கு நாள் குறிச்சது என்னோட தப்புதான், அதுக்கு இந்த தண்டனையேபோது எனக்கு, அதனால நடக்க இருந்த கல்யானத்தையு, எங்க குடும்பத்தையு தயவுசெஞ்சி மறந்துடுங்க, எங்க பைய்யனுக்கு வேரஒரு பொண்ணபாது கல்யாணம் பண்ணிகுறோ” என்றார் நம்பி.

 “இடைவிடாது மண்ணில் இடிப்பாய்வதைபோல் நம்பி, சுந்தரியின் பேச்சும் ஜானகியின் மனதில் பாய்ந்தது.” ‘தன்னை அல்லாது வேறொறுவளை கணவிலும் தன்னவன் மணக்கமாட்டான்’ என்னும் நம்பிக்கை இருந்ததால் தன்தலர்ச்சியை வெளிக்காட்டாது நின்றாள் ஜானகி. “என்னடா பேசுரா, அப்படி என்ன நடந்துடுச்சுனு இப்பொ கல்யாணத்தையே நிறுத்தசொல்ற”? என்றார் ஷங்கரன். “எங்களுக்கு எங்கமக உயிரோடவேணும் அதனாலதா சொல்றொ இந்த கல்யாணத்த நிருத்திடுங்கனு, please அண்ணா” என்று அழுதுக்கொண்டே கூறினாள் சுந்தரி. “அய்யோ, ஏ இந்தமாதிரி பேசரிங்க”? என்று கதரினாள் உஷா.

 “எங்களுக்கும் ஒருபொண்ணு இருக்கா, ஆனாலும் சொல்ற உங்கபொண்ணோட ராசி எங்கமகனுக்கு ஒத்துவரல நிச்சயம் பண்ணதுக்கே இப்புடின்னா, கல்யாணம் பண்ணா? அய்யோ! வேண்டவே வேண்டா” என்றார் நம்பி. அவர்களின் வார்த்தையைகொண்டு ஏதோ தவராக நடந்துள்ளதை அறிந்த ஷங்கரன் ‘என்ன நடந்ததுனு சொல்லாம, கல்யாணம் வேண்டானு சொன்னா என்ன அர்த்தொ? வாய்விட்டு சொன்னாதான எங்களுக்கு தெரியவரும்’ என்றார். “காலை officeகு சென்ற ஸ்ரீராமன், signalலில் ஏதோ ஒருவிபத்தினை கண்டு மயங்கியதாகவும், அங்கிருந்தவர்கள் அவனின் மூற்ச்சையை கலைக்கமுயன்று அது பலன்தராது போனதால் அவனை பக்கத்திலிருந்த hospitalலில் சேர்த்து, அவனின் பெற்றோறை வரவழைத்து நடந்ததைகூறி உதவியதையும்.

 சிலமணிநேர சிகிச்சைக்குபிறகு வந்த மருத்துவர்கள் ஸ்ரீராம் அதிர்ச்சியில் மயங்கியதால் அது ‘அவனின் மூலையையும், மனதையும் பாதித்திருப்பதாகவும் அதலால் அவனின் சித்தம் இப்பொழுது கலங்கியிருப்பதாகவும்,’ சில மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால் அவனின் மனநிலையில் நல்லமாறுதல்வர வாய்பிருப்பதாகவும் கூறி அவனை வீட்டிற்க்கு அழைத்து செல்ல அறிவுறித்தியதாகவும். விஷயமறிந்து வீட்டிற்க்கு வந்த சொந்தங்கள், ‘ஜாதகப்பொருத்தம் பாராது நிச்சயித்ததின் விளைவுதான் இது, இப்பொழுதே கல்யானத்தை நிருத்துவதுதான் ஸ்ரீராமனின் உயிர்காக்கும் ஒரேவழி’ என்று கூற, மகனின் நிலைக்கண்டு பதரியிருந்த அவனின் பெற்றோர், செய்வது தவறு என்று அறிந்தும், சொந்தங்களின் வார்த்தையை நிறைவேற்ற இங்கு வந்துள்ளதாகவும் கூறினார் நம்பி.

 அதைகேட்ட ஜானகி, ‘கொடிவிட்டு சரிந்த மலராய் நிலத்தில் சரிந்தாள்.’ ‘தாமரைமொட்டின் மேல் விழுந்த மழைத்துளிகளாக அவளின் கண்ணத்தை தழுவி நிலம் நனைத்தது கண்ணீர்.’ “இப்பொ எப்படி இருக்காரு மாப்ள?” என்று உஷா கேட்க, “எனக்கு ஒரு hospital தெரியும் அங்கபோன எல்லா சரியாயிடும், வாங்க மொதல்ல மாப்ளைய பாக்கலாம்” என்று ஷங்கரன் கூறினார். “உங்களுக்கு ஒருதடவசொன்னா புரியாதா? இனி இந்தகல்யாணம் நடக்காது, இதுக்கு அப்புறமுநீங்க கல்யாணத்தப்பத்தி பேசிகிட்டு வீட்டுக்கு வந்தாலோ, இல்ல எங்களையோ, எங்கமகனையோ சந்திக்க முயற்சி செஞ்சாலோ ‘நாங்க இரண்டுபேரும் தர்க்கொலை செஞ்சிகிட்டு செத்துடுவோம்’ என்று கூறிய நம்பி அழுதுக்கொண்டே நின்ற தன்மனைவியின் கரம்பிடித்தவாறு வீட்டைவிட்டு வெளியேறினார்.” “போகாதீங்க, நாங்கசொல்றத கொன்சொகேளுங்க” என்று கதரினர் ஜானகியின் பெற்றோர்.

 ‘ஜானகி, ஸ்ரீராமனின் துர்நிலையைகண்டும் கருனையின்றி நில்லாது ஓடியதுகாலம்.’ நண்பர்ஒருவரின் அறிவுறையை ஏற்ற ஸ்ரீராமனின் பெற்றோர் அவனை சித்தமருத்துவத்திர்காக கேரளா அழைத்துசென்றதின் பலனாக 1வருடகாலம் கழித்து தன்னிலையை அடைந்தான் ஸ்ரீராம். ஆனால் அந்த விபத்தை பார்த்ததர்க்கு ‘முன் 6மாத நினைவை இழந்திருந்தான்.’ நடந்ததை தொடர்ந்து நினைவு படுத்துவதன் மூலம் என்றாவது அவை நினைவில்வர சாத்தியம் உள்ளதாக கூறியிருந்தனர் சித்தமருத்துவர். ஜானகியின் ஜாதகபலனின் விளைவே ஸ்ரீராமனின் துர்நிலைக்கு காரணம்மென்று மூடத்தனமாக நம்பிய அவனின் பெற்றோர்க்கு வரமாய் ஆனது அவன் மரதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.