(Reading time: 18 - 36 minutes)

தொலந்த நினைவுகளில் மறைந்துபோனது தன்உயிர்காதல்” என்பதை அறியாமல் போன ஸ்ரீராம், தன்குடும்பத்தோடு இயல்பான நிலைக்கு திரும்பியிருந்தான். சிலதினங்கள் கழிந்திருந்த அன்று அவனின் நள்ளிரவு தூக்கத்துகணவில் வந்தது ஜானகியின் அழகுமுகம். விடிந்ததுமுதல் அவள் நினைவில் தவித்தான். அவனின் மாற்றத்தை உணர்ந்த ‘கலைவாணி’, “என்ன ஆச்சு அண்ணா”? என்றாள். ஸ்ரீராம், கலைவாணி இருவரும் நண்பர்கள்போல் பழகிவத்ததால் அவளிடம், ‘இரவு கணவில் தான்ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவளை நெருங்க முயன்றபோது அவள் மறைந்ததாகவும்’ கூறினான். ஜானகியே தன்அண்ணின் கணவில் வந்திருப்பது என்பதை அறிந்த கலைவாணி ‘விடு அண்ணா, இதுவெறு கணவு’ என்று கூறி அவனின் கவனத்தை திசைத்திருப்ப முயன்றாள். அத்தருனம் அலரியது அவனின் mobile, அதை எடுத்து பேசியவாறு அவ்விடம்விட்டு சென்றான்.

 15நாட்களிக்கு பிறகு ஒருநாள் காலை தன்தங்கையைத் தேடிய ஸ்ரீராம், அவளை தோட்டத்தில் கண்டதால் அங்கு சென்றான். “வாணி ஒன்னுக்கேட்டா, உன்மைய சொல்லுவியா”? என்று கேட்க, “சொல்லு அண்ணா, நான் ஏ உன்கிட்ட பொய்சொல்ல போர”? என்றாள். எனக்கு தெரியும் நீ என்னோட best friendனு அதனாலதான் உண்கிட்ட கேக்ர, “நான் மறந்த அந்த 6மாசத்துல யாரையாவது காதலிச்சேனா”? என்றான். அப்படி ஒருகேள்வியை எதிர்பாராத கலைவாணி செய்வதரியாது மௌனமாய் நிர்க்க, சொல்லு வாணி “அவதினமு என் கணவுலவரா, அவளோட அந்தசிரிப்ப பாக்கும்போது அவகூட நாநெருங்கி பழகியமாதிரிதோனுது. அவள நெனச்சாலே மனசெல்லா சந்தோஷமா இருக்கு, அவமுகத்த பாத்துக்கிட்டே இருக்கனும்போல இருக்கு. night கணவுல நா அவள பேர்வெச்சி கூபிட அவளும் என்னதிரும்பி பாத்துசிரிச்சா, but அந்த பேர் இப்பொ ஞாபகம் வரல, இதனாலதா சொல்ற ‘கண்டிபா நா யாரையோ காதலிச்சிருக்கனும், இது அவளாதா இருக்கனும்’ என்று கூறிய ஸ்ரீராம் பதிலிர்க்காக ஆவலோடு தன்தங்கையின் முகத்தைபார்த்தான்.

 ‘அண்ணனின்மேல் கொண்டிருந்த அதீதஅன்பால் தன்பெற்றோரின் நம்பிக்கையை நிஜம் என்று ஏற்றிருந்த கலைவாணி, தன்அண்ணனின் உயிர்காக்கும் எண்ணத்தோடு முதல்முறையாய் அவனிடம் பொய்சொல்ல துணிந்து பதட்டத்தோடு “இல்ல அண்ணா, அந்தமாதிரி எதுவு இல்ல” என்றாள். வாணியின் வார்த்தையை நம்பிய ஸ்ரீராம், “அப்பொ அந்தபொண்ணு யாரு? என்கணவுல ஏ தினமுவரா?” என்று குழப்பத்தோடுக் கேட்க, “என்ன நம்பமாட்டியா அண்ணா? கணவுல வந்த ஒருபொண்ணுக்காக உன்தங்கச்சி சொல்றத பொய்யுனு நெனக்கிறியா”? என்று அழத்துவங்கிய வாணி ‘இனி அந்த பொண்ணபத்தி என்கிட்ட பேசாத’ என்று கூறியவாறு வீட்டினுள் ஓடினாள்.

 அறையில் அமர்ந்து “அண்ணா I’m sorry”, என்று அழுதுகொண்டிருந்த வாணியைக்கண்ட அவளின் பெற்றோர் “என்ன ஆச்சுமா? ஏ அழுவுர”? என்று கேட்க நடந்த அனைத்தையும் மறைக்காது கூறிய வாணியின் வார்த்தைகளை கேட்டு பதரினர். “ஸ்ரீராமனிர்க்கு நினைவுதிரும்பினாலோ அல்லது அவர்களின் தவறான நம்பிக்கையை குறித்து தெரியவந்தாலோ, ஜானகிக்கு நேர்ந்த அனியாயத்தை எதிர்த்து குறல்கொடுக்கும் முடிவோடு தன்குடும்பத்தை பிரிவானோ, என்று அஜ்ஜிய நம்பியும், சுந்தரியும் உடனடியாக அவனிர்க்கு திருமணம்செய்யும் முடிவிர்க்குவந்தனர்”. மறுதினம் காலை officeக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஸ்ரீராமனை, மாலை பெண்பார்க்க செல்லவேண்டும் என்பதால் வீட்டிற்க்கு சீக்கிறம் திரும்புமாறு கூறினாள் சுந்தரி. கணவில் வந்தவளைக்குறித்து கூறயியலாததால் மறுத்துபேச வார்த்தையின்றி மௌனமானான்.

 பலவித மனபோராட்டத்தோடு பெண்ணின் வீட்டில் அமர்ந்திருந்தான் ஸ்ரீராம். மாப்ளைக்கு coffee குடுமா என்று பெண்ணின் தாயார் கூறுவதை கேட்டு coffee cupபை கையி எடுக்கும்போது, அவளின் முகத்தைக்கண்டான். அத்தருனம் இழந்திருந்த நினைவுகளிள், ஜானகியைப் பெண்பார்த்த அன்று நடந்த அனைத்தும் நினைவிற்க்கு வந்தது. “கணவுகளிள் மட்டும் பரிச்சையமானவளை முன்பே எப்படிபார்த்திருக்க இயலும் என்னும் கேள்வி உதித்தது, வாணியிடம் இதைகுறித்து கேட்கும் என்னமும் எழுந்தது, அன்று அவள் அழுததை நினைவுகூற்ந்த ஸ்ரீராம் குழப்பத்தோடு தயங்கினான். தன்தங்கையின் வார்த்தைகளின் மேல்கொண்ட நம்பிக்கையால் இதுவும் என்கணவில் வந்ததாகத்தான் இருக்க இயலும் என்னும் முடிவிற்க்கு வந்தான்”.

 நம்பியும், சுந்தரியும் அவசரமாய் திருமணத்தேதியையும் நிச்சயிக்க அதை மறுக்கவும், ஏர்க்கவும் இயலாமல் தவித்தான். நாட்கள் வேகமாய்ஓட, கணவுப்பெண்ணாக இருந்த ஜானகி, அவனின் உயிரில் கலந்தாள். கணவுகளின் துணைக்கொண்டு ஜானகியின் முழுநினைவையும் பெற்றான் ஸ்ரீராம். ஆனால் அவைநிஜம் என்று உருதிசெய்ய எந்த ஆதாரமும் இல்லாமல் போனதால், அவற்றை தன்இனிமையான கணவுகள் என்னும் முடிவிற்க்கு வந்திருந்தான். ‘அவளின் வருகை நிஜத்தில் நேர்ந்தால் தன்வாழ்கை ஆனந்தமயமாகிவிடும், அவள்மீது தான்கொண்டிருக்கும் உயிர்காதலை சொல்லி, அவளைமணக்க வேண்டும் என்னும் என்னமும் அவனுள் இருந்தது’.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.