(Reading time: 18 - 36 minutes)

லமாதங்களிர்க்கு பிறகு தன்நண்பன் தம்பதிசமேதராய் வீட்டினுள் நுழைவதைக்கண்ட ஷங்கரன் அதிர்ச்சியில் உறைந்தார். ஆர்வத்தோடு வாங்க, வாங்க என்று அழைத்தாள் உஷா. தம்வருகை அவர்களின் மனதில் தவறான நம்பிக்கையை விதைத்துவிடுமோ என்று என்னிய சுந்தரி, “நாளை மறுநாள் ஸ்ரீராம்கு கல்யானம் வெச்சியிருகோம் வந்துடுங்க அண்ணா” என்று பத்திரிக்கையை நீட்டினாள். தவிர்க்க இயலாததால் பத்திரிக்கையை வாங்கிய ஜானகியின் பெற்றோர் மௌனமாக நின்றனர். ‘ஜானகிக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாமே இப்பதான் தெரிஞ்சது, அதனால, நீங்க மட்டு கல்யாணத்துக்கு வாங்க’, என்று கூறிய நம்பி நிலம் நோக்கியவாறு நின்றார். ஷங்கரனும், உஷாவும் பதில் ஏதும் பேசாது நிற்ப்பதைக் கண்ட நம்பி ‘sorryடா’ என்று கூறி தன்மனைவியுடன் வீட்டிலிருந்து வெளியேறினார்.

 அவர்களின் தவறான வார்த்தைகள் தன்மகளின் உடைந்த மனதை மேலும் காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சிய ஷங்கரன் அவர்களின் வருகையை மறைக்கும் எண்ணத்தோடு நாற்புறமும் அவளைதேட, மாடியில் நின்றிருந்தாள் ஜானகி. அவள் அனைத்தையும் அறிந்ததை உணர்த்தியது அவளின் கண்ணீர். மாப்பிள்ளைக் கோலம் பூண்டிருந்தாலும், “தன்கணவு காதலிக்காக தாலிகட்டும்வரை காத்திருப்பதில் தவறில்லை” என்னும் எண்ணத்தோடு அவளின் வருகைக்காக காத்திருந்தான் ஸ்ரீராம். நின்றுபோன தன்கல்யணத்திர்க்காக ஸ்ரீராம் விரும்பியெடுத்த சிவப்பு பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு மாடியிலிருந்து இரங்கினாள் ஜானகி. “பொன்சிலையே உயிர்த்தெழுந்து வந்ததோ என்று பார்ப்பவரை உறையவைக்கும் அவள் அழகு.” பலநாட்களிர்க்கு பிறகு அளங்கரித்து வந்தமகளை கண்ட உஷா மகிழ்ச்சியில் அழத்துவங்கினாள். ‘அழாதிங்க அம்மா, அழுவுரதால எதுவும் சரியாகிடாது’ என்றாள் ஜானகி.

 ‘கல்யாணம் நின்ற நாள்முதல் பேசாது போன தன்மகள் அதிர்சியில் ஊமையானாளோ’ என்னும் தவிப்பில் இருந்த ஷங்கரன், இன்று அவளின் பேச்சைக்கேட்டு மகிழ்ந்தார். அன்றுமுதல் வீட்டில் அடைந்துகிடந்த ஜானுவின் வெளியேசெல்லும் முடிவைகண்டு நிம்மதி கொண்ட ஷங்கரன். ‘எங்கமா ஜானு கோவிலுக்கா?’ என்று கேட்க “இல்லபா, ஸ்ரீராம் கல்யாணத்துக்கு” என்றாள். அவளின் முடிவை ஊக்கப்படுத்தும் எண்ணத்தோடு, ‘நாங்களும் வரொ இருமா’ என்றாள் உஷா. “இல்லமா, நான் மட்டும் போர, please”, என்று கூறி வீட்டிளிருந்து கிளம்பினாள் ஜானகி. மண்டபத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஜானகியை கண்ட கலைவாணி, அதை தன்பெற்றோரிடம் கூறினாள். இத்தருனம் அவளிடம் பேசுவதுகூட ஸ்ரீராம் அவளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுட்த்திவிடும் என்று அஞ்சிய நம்பி திருமணத்தை அவசரமாக நடத்துமாறு ப்ரோகிதரை அறிவுறித்தினார்.

 நம்பி, சுந்தரியின் தவிப்பை தனிக்கும்வகையில் அனைத்தும் வேகமாய் நடந்தது. வந்திருந்த பெரியவர்களின் ஆசியை பெற்றுவருமாறு அங்கிருந்த ஒருவரிடம் தாலியை கொடுத்தனுப்பினார் ப்ரோகிதர். சிரிதுநேரத்தில் மண்டபத்தின் மத்தியப்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் இடையில் சலசலப்பு ஏற்பட அங்கு சென்று “என்ன ஆச்சு”? என்றார் நம்பி. “தாலியை காணவில்லை” என்னும் பதில்கேட்ட சுந்தரி, “எங்கு போனது? எவர் எடுத்திருக்கூடும்? என்னும் கேள்விகளை எழுப்பாது அதை ஜானகியே செய்திருக்ககூடும்” என்று அவள்மீது பழிசுமத்தினாள். ‘என்ஸ்ரீராமனின் வாழ்வில் சுபநிகழ்வு நேரவிருப்பதால் மண்டபாத்தில் எக்காரணம் கொண்டும் அழக்கூடாது என்னும் முடிவோடு வந்திருந்து இதுவரை அதைகாத்த ஜானகி, சுந்தரியின் அவசொல்கேட்டு கண்ணீர்மழை பொழிந்தாள்’.

 முகூர்த்த நேரம் முடிய இன்னும் 5நிமிடங்கள் மட்டுமே இருப்பதால் தாலியை எடுத்துவருமாறு கூறினார் ப்ரோகிதர். திருமணம் நின்றுவிடுமோ என்னும் அய்யம்கொண்ட நம்பியும், ஜானகியே இதைசெய்திருக்க கூடும் என்னும் முடிவோடு “உன்னோட ராசிக்கு பயந்துதான், அவசர அவசரமா கல்யாணத்த நடத்திகிட்டு இருக்கொ, அப்படி இருந்து ஏமா ப்ரச்சனபன்ற? மரியாதையா தாலியகுடுத்துட்டு மண்டபத்த விட்டு வெளியபோ” என்றார். “நா எடுக்கல” என்று கூறியவாறு அழுத ஜானகியை கண்ட கலைவாணி, “அப்பா…. ஏ அவங்கள சந்தேகப்படறீங்க”? என்று பரிந்து பேசினாள். அதைகண்ட சந்தரி, “இந்த கல்யாணத்த நிருத்த அவதா எடுத்திருப்பா” என்று கூறினாள்.

 ‘யாரோ ஒருபெண் எதர்க்காக என் கல்யாணத்தை நிருத்த தாலியை எடுக்க வேண்டும்’? என்ற கேள்வி உதித்ததால், திருமணம் முடியும்முன் மணமேடையை விட்டு எழக்கூடாது என்று அங்கிருந்தவர்கள் கூறுவதை பொருட்படுத்தாது, அவளைகாண சென்றான். அவ்விடத்தை நெருங்கிய நேரம்முதல் அவனின் மனம் மகிழ்ச்சிகடலில் மூழ்கியது. “இதுவரை கணவுகளில் மட்டும் என்னை சந்தித்துக் கொண்டிருந்த என் காதல் தேவதை, நான் அவளிர்க்காக காத்திருப்பதை அறிந்து நிஜத்தில் வந்துவிட்டாள் என்று மனதில் துள்ளினான் ஸ்ரீராம், அவனை அறியாது சந்தோஷத்தில் ‘ஜானு’ என்று அழைத்தான்”. இதுவரை அவன் அழைப்பை கேட்டு வெட்கத்தில் மட்டும் தலைகுனிந்த ஜானகி, முதல்முறை அவனை பார்ப்பதால் தன்முடிவில் தடுமாற்றம் வந்துவிடுமோ என்று என்னி நிலம்நோக்கியவாரு கதரினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.