(Reading time: 18 - 36 minutes)

ஸ்ரீராம் அழைப்பதை கேட்ட நம்பியும், சுந்தரியும் அவனிர்க்கு மறந்தநினைவுகள் திரும்பியது என்பதை உணர்ந்தனர். முகூர்த்த நேரம் முடிந்து 10நிமிடமிடங்கள் ஆகிவிட்டதால் இனி இந்த கல்யாணம் நடக்காது, எனவே வேறு முகூற்த்தநேரம் குறித்தால்தான் உண்டு என்று கூறினார் ப்ரோகிதர். அதை கேட்ட கலைவாணி சிரித்தவாறு “எல்லா உண்மையையும் இப்பொ சொல்ற அண்ணா” என்று கூற, வாயிலிருந்து இரத்தம் பொங்கியவாறு, இரும்பிக் கொண்டே நிலத்தில் சரியமுயன்ற ஜானகியை, ‘ஜானு, ஜானு’ என்று அலரியவாரு தாங்கிப்பிடித்தான் ஸ்ரீராம். “அண்....ண்ணீ என்ன ஆச்சு”? என்று அழுதால் வாணி. நடப்பதை கண்டு உறைந்து நின்றனர் வாணியின் பெற்றோர்.

 “என்ன பாரு ஜானு, என்ன ஆச்சு உனக்கு”? என்று கதரிய ஸ்ரீராமனை பார்த்துக்கொண்டிருந்த ஜானகி, சுவாசிக்க சிரமம் இருந்தும் “ராம்” என்று அழைக்க முயன்று மயங்கினாள். அவளை கைகளில் அள்ளிய ஸ்ரீராம் hospitalலில் சேர்த்தான். நடந்ததைக்கூறி அவளின் பெற்றோரை hospitalலிற்க்கு வரவழைத்தாள் வாணி. தன்அண்ணனிடம், ‘ஜானகி, ஸ்ரீராமனின் வாழ்வில் இதுவரை நடந்த அனைத்தையும் கூறி, இத்தனை நாட்கள் மறைத்ததிர்க்காக மன்னிப்பு கேட்டாள் வாணி. 2மணிநேர சிகிச்சைக்கு பிறகு வந்த docter, ‘patient poison குடிச்சி தர்க்கொல செய்ய முயற்சி பண்ணியிருக்காங்க’ என்று கூறியதை கேட்ட உஷா, “அய்யோ ஜானுமா” என்று அழுதாள். ‘பதராதிங்கமா, இப்பொ அவங்க நல்லாயிருக்காங்க, கொஞ்ச் நேரம்கழிச்சி போயிபாருங்க’ என்று கூறிசென்றார்.

 “பைக்கில் ஒருவனோடு நெருக்கமாக பயணம் செய்த யாரோ ஒருபெண்ணை, நீ என்று தவறாக நினைத்த எனக்காகவா, உன் உயிரை விடத்துணிந்தாய் ஜானு” என்று கதரிஅழுதான் ஸ்ரீராம். சிலமணிநேரத்திர்க்கு முன்புவரை உங்களை போல் நானும் தவராக நினைத்திருந்தேன். ஆனால் “உண்மை அறியாது, கணவு காதலிக்காக காத்திருந்த அண்ணனின் தவிப்பும்”, “காதலனை பிரியும் வலியை கண்களில் மறைத்திருந்த அவளின் மௌனமும்”, அவர்களின் “உயிர்காதலை” எனக்கு உணர்த்தியது. நான் சொல்வதை கேட்கும் சூழலில் நம்குடும்பத்தார் இல்லாததால்தான், ‘அண்ணனின் வாழ்வில் தவறாக ஏதும் நேர்ந்துவிடகூடாது என்று கல்யாணத்தை நிருத்தும் என்னத்தோடு அந்த தாலியை எடுத்தேன்’ என்று தன்பெற்றோரிடம் கூறினாள் வாணி.

 உண்மையறிந்து, செய்த தவறிர்க்காக மனதில் மருகினார்கள் நம்பியும், சுந்தரியும். ‘திருமணத்தை நிருத்தி தான் விரும்பிய வாழ்வை அடையவழியிறுந்தும், காதலனின் பிரிவிற்க்காக தன் உயிரையே விடத்துணிந்த ஜானகியின் ராசியா, நம் ஸ்ரீராமனை கொன்றுவிடும் என்று நினைக்கின்றீர்கள்’? என்று வாணி கேட்க, “தாம் இதுவரை நினைத்தது, செய்ததனைத்துமே தவறு” என்பதை உணர்ந்தனர் ஸ்ரீராமனின் பெற்றோர். இதுவரை நடந்த அனைத்திர்க்காகவும் ஷங்கரன், உஷா, ஸ்ரீராம், ஜானகி என அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட நம்பியும், சுந்தரியும் தம்தவறை திருத்தும் வகையில் அடுத்த முகூர்த்த நாளிள் “ஸ்ரீராம், ஜானகியின் திருமணத்தை முடித்தனர்”.

எவருடைய ஜாதகமோ/ராசியோ இன்னொருவறை பாதிப்பது இல்லை, அவரவர்களின் நேரமும், சுழலும்தான் அனைத்திர்க்கும் காரணமாகிவிடுகிறது என்பதை இக்கதையின் மூலம் உணரலாம். பொருமையாக இருப்பதும், தெலிவான முடிவெடுப்பதும் வாழ்வில் வெற்றியைத்தரும் என்பதே உண்மை. இவர்களின் வாழ்க்கையே உண்மை/உயிர்காதல் அழிவதில்லை என்பதர்க்கான உதாரணம். நாம் எந்தகாலத்திலேயே வாழ்ந்தாலும் ‘ஒருவனிர்க்கு ஒருத்தி என்ற தமிழர் பண்பாட்டை மறவாது’ “சீதாராமனை” போல் உண்மையாக வாழவேண்டு என்பதை எடுத்துறைக்கும் முயற்ச்சியே இக்கதை.

 

இந்த கதையிலோ, கருத்திலோ, வாக்கியத்திலோ, வார்த்தையிலோ, எழுத்துப்பிழையோ இருந்தால் என்னை மன்னியுங்கள். 

 

This is entry #51 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.