(Reading time: 18 - 35 minutes)

ச்சர்யமாக திரும்பி வந்த பெண்ணை பார்த்தான். பளிச்சென்ற புன்னைகை பூசிய முகம், கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு மட்டுமே அணிந்திருந்தாலும் மகிழ்ச்சியாக நின்றிருந்த அந்த பெண்ணை பார்த்து கை கூப்பி வணக்கம் சொன்னான்.

பிறகு அம்ருவின் புறம் திரும்பி கேள்வியாக நோக்க... கணவன் மனைவி இருவரும் அவர்கள் பேச இடம் கொடுத்து உள்ளே சென்றனர்.

 அவனை பார்த்து புன்னகைத்தவள் “இவர்களை எனக்கு இருபது நாளைக்கு முன் யாரென்றே தெரியாது” என ஆரம்பித்தாள்.

“நம்ம சென்னையை புரட்டி போட்ட வெள்ளம் இருக்குல்ல... அதில் தான் இவர்களின் அறிமுகம் கிடைத்தது. Nov – 22 ல் நமக்கு வெத்தலை கை மாத்துனாங்கல்ல, அதுக்கு உடனே ட்ரீட் வேணும்னு  கேட்டு என் ப்ரெண்ட்ஸ் ரொம்ப அடம்பிடிக்க, சரி கார்ல தான போறோம்னு நானும் லேசா மழை பெய்யும் போது ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போனேன். ஜாலியா பேசிக்கிட்டே இருந்ததில் நேரம் போனது தெரியலை. பிறகு மழை வலுக்க ஆரம்பிச்சிருச்சு, சரி மழை வெறிக்கட்டும்னு காத்துக்கிட்டு இருந்ததில் மேலும் நேரம் போனதே ஒழிய மழை விட்ட பாடில்லை.... இதுக்கு மேல காத்திருக்க முடியாதுன்னு முடிவு செய்து மழையோட கிளம்பிட்டோம். என் ப்ரெண்ட் சந்தோஷ் தான் வண்டியை ஓட்டினான். ரோடெல்லாம் ரொம்ப தண்ணீர் ஓடுச்சு. இவங்க ஏரியாகிட்ட வரும் போது டயர் மூழ்கற அளவுக்கு தண்ணீர் அளவு அதிகமாகிடுச்சு. இது ஒன்வேன்-றதால எங்களால ஒண்ணும் பண்ண முடியலை. சரி அடுத்து ஏதாவது டர்ன் வரும் போது திரும்பி போயிடலாம் இல்லைன்னா எங்கேயாவது வண்டியை ஒதுக்கி நிறுத்திட்டு நாங்களும் பாதுகாப்பா ஒதுங்கிடலாம்னு முடிவெடுத்து போய்கிட்டு இருக்கும்போதே வண்டி ஆப் ஆகிடுச்சு. வேற வழியில்லாம வண்டியை அப்படியே விட்டுவிட்டு நாங்க ஒதுங்க போனப்ப, ராஜன் அண்ணா அவங்க வீட்டு வாசலில் நின்னுகிட்டு இருந்தவங்க என்ன பிரச்சனைன்னு பார்க்க வந்தாங்க. வண்டி ஓடலை நின்னுடுச்சுனு தெரிஞ்ச உடனே அவங்க வீட்டுக்கு எங்க அஞ்சு பேரையும் கூட்டிட்டு போய் அன்றைக்கு நைட் தங்க சொல்லி இடம் தந்தாங்க. நாங்களும் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டு அங்கேயே தங்கிட்டோம். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதில் அவங்க வீட்டுக்குள்ளும் தண்ணீர் வர ஆரம்பிச்சிருச்சு. கணுக்கால் அளவு தண்ணீர் வந்தப்ப கூட நாங்கெல்லாம் சிரிச்சுக்கிட்டு யாருக்கு நீச்சல் தெரியும்,தெரியாதுன்னு கேலி பண்ணிகிட்டு இருந்தோம். எங்களுக்கு நிலைமையோட தீவிரம் தெரியாது. இந்த பகுதியில யாரும் தண்ணீர் திறந்து விடப்பட்டதை பற்றி அறிவிக்கலை. அப்படியே அறிவிச்சிருந்தாலும் நாங்க பெருசா எடுத்திருந்திருக்க மாட்டோம். அதுக்கும் இந்த பகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைச்சிருந்திருப்போம்.. ஆனா தண்ணீர் அளவு தாங்காம அடையாறு ஆறு உடைஞ்சு இந்த பகுதியில தண்ணீர் வர ஆரம்பிச்சிருச்சு.

அண்ணி கீழே இருந்த பொருளெல்லாம் எடுத்து பரண் மேல வைக்க ஆரம்பிச்சாங்க நாங்களும் உதவினோம். பீரோவுல உள்ளதெல்லாம் மூட்டை கட்டி கட்டிலில் வச்சுட்டு நாங்களும் அதில் உட்கார்ந்து கொண்டோம், மிஞ்சி மிஞ்சி போனா ஒரு அடி தண்ணீர் வருமா அப்படின்னு நினைச்சு அசால்டா இருந்துட்டோம். அரைமணி நேரத்துக்குள்ளே தண்ணீர் கட்டில் அளவு வந்துடுச்சு. நாங்களும் பயந்து போய் மூட்டைகளை மட்டும் எடுத்துக்கிட்டு மாடியில இருந்த வீட்டுக்கு போயிட்டோம். ஆனா சிலமணிநேரத்துக்குள்ளே தண்ணீர் மாடிவீட்டுக்குள்ளேயும் வர ஆரம்பிச்சிருச்சு. வேறுவழியில்லாம மாடிவீட்டுகாரங்களும், நாங்களும் மொட்டை மாடியில போய் மழையில நெனஞ்சுகிட்டு இருந்தோம். நல்லவேளை முதல் மாடி வரை தான் தண்ணீர் வந்தது, இல்லையினா அன்றைக்கு தண்ணீரில் மூழ்கி இறந்திருப்போம். கொட்டுற மழையில பாத்ரூமுக்கு கூட போக வழியில்லாம, சாப்பிடாம கிட்டத்தட்ட ஒன்றரை நாள் இருந்தோம். டோட்டலா கரண்ட் வேற கட். நெட்வொர்க் கிடையாது. சோ வெளியே இருந்தவங்களுக்கு எங்க நிலைமை தெரியாது. மாடிவீட்டு அண்ணா BSNL போன் வச்சிருந்தாங்க. அவங்க போன் மட்டும் எடுத்தது. அதை வச்சு சில பேரண்ட்ஸ்க்கு மட்டும் எங்க நிலைமை தெரிவிக்க முடிந்தது. 38 மணிநேரம் கழிச்சு மீட்புகுழு வந்துச்சு. அப்படி வரலைன்னா நாங்க பசியிலே செத்திருப்போம். வாழ்வா? சாவா? என்ற நிலைமை வந்தப்ப தான் மனிதம் பத்தி புரிஞ்சது. வாழ்க்கை பத்தி புரிஞ்சது.

மீட்புகுழு வந்தப்ப முதல்ல எங்களை பத்திரமா அனுப்பி வச்சாங்க. கேட்டா நீங்க எங்களை நம்பி வந்தவங்க, அதுவுமில்லாம நாங்க எல்லாம் குடும்பத்தோட இருக்கோம் உங்க குடும்பத்தினர் தான் தவிச்சு போயிருப்பாங்க. முதல்ல நீங்க போங்க நாங்க பின்னாடி வர்றோம்னு எங்களை அனுப்பி வச்சாங்க. அவங்களோட அந்த நேயம், நான் நிறைய பணக்காரங்க கிட்ட பார்க்கலை. அதுக்கு அப்புறம் கூட... தங்கள் உடைமை எல்லாத்தையும் இழந்தும் கூட... எங்க உதவியை ஏற்க மறுத்திட்டாங்க. அப்படி ஏத்துக்கிட்ட அது அவங்க செய்த உதவியை... ஏன் மனிதத்தையே விலைபேசின மாதிரி ஆகும்னு சொல்லிட்டாங்க” என்று நீளமாக நடந்ததை கூறி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டாள்.

அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தவனை பார்த்து லேசாக புன்னகைத்து “இதை ஏன் இப்ப சொல்றா... அதுவும் இங்க வரவழைச்சு சொல்றா என்று நினைக்கறீங்களா” என்றவள் அவன் மெளனமாக தலையாட்டவும் அதையே ஆமோதிப்பாக ஏற்று தலையசைத்து தொடர ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.