(Reading time: 16 - 32 minutes)

ந்த அண்ணன் வெறும் காகிதம்தான் கொடுப்பான்னு தெரிஞ்சு உன் அண்ணி முன்பே அந்த நகையை பரிசா தந்துட்டா. தயவுசெய்து அதை கழட்டாதே.”

நந்தினி கண்ணீருடன் வசந்தியை கட்டிக்கொள்ள அவளோ இன்னும் திகைப்பில் இருந்து மீளவில்லை. சிவராமன் அவளை பார்த்து கண்களை சிமிட்டினான்.

அன்றே அவர்களை புது இடத்தில் சேர்த்துவிட்டு வீடு திரும்பினர்.

ன்று இரவு.

சிவராமன் இன்று புதிதாய் தெரிந்தான்.

வசந்தியின் அருகில் வந்து அணைத்துக்கொண்டான்.

“கண்டிப்பா உனக்கு ஆச்சர்யமாக இருக்கும். எனக்கு தெரியும். வார்த்தைக்கு வார்த்தை அவளை பத்தி பேசிட்டு இப்படி நடந்ததுக்கு காரணம் இருக்கு.”

செல்போனை எடுத்து காண்பித்தான். அன்று நந்தினியின் வீட்டில் நடந்தது எல்லாம் பதிவாகியிருந்தது. அன்று நந்தகுமார் விளையாட்டுத்தனமாக பதிவு செய்திருக்கிறான். அன்றைய மறுநாள் கணவன் அழுததற்கான காரணம் இன்று புரிந்தது.

“நான் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன் இல்லை. சின்ன வயசிலேயே அவளை மாதிரி ஒரு பாப்பா வேணும்னு எங்கம்மாகிட்ட சொல்லும்போதே அவ எனக்கு தங்கையாயிட்டா. அப்புறம் என்னை அண்ணான்னு கூப்பிடாதேன்னு சொல்லும்போதே அது உறுதிப்பட்டுடுச்சு. அவளை நல்லா வச்சுக்கனும்னா உரிமைக்காரனா இருக்கனும்கிற எண்ணம்தான் வந்துச்சு. கூடப்பிறந்தாதான் அண்ணனா இருக்க முடியுமா? அப்போ யோசிக்கலை. ஆனால் இன்னிக்கு யோசிக்கும்போது பைத்தியக்காரதனமா தோணுது. நான் எப்படி அவளை காதலிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டேன். அவ மேல் நான் வச்சது பாசம்னு ஏன் எனக்கு தெரியலை.”

அவன் பேசப் பேச அவளின் வியப்புதான் அதிகமானது.

“எனக்கே சரியா தெரியாத விசயத்தைப்பத்தி உன்கிட்ட சொல்லி உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்ல. இன்னொரு பொண்ணை பத்தி கணவன் பேசும்போது எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும். நீ இப்படி பேசியிருந்தா என்னால் தாங்க முடிஞ்சிருக்குமா?”

அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“நான் அவளை தங்கையா ஏத்துகிட்டதுக்கு இன்னொரு ஆதாரம் இருக்கு. என்னிக்குமே நான் அவளை இப்படி, இந்த இடத்தில் நினைச்சுப்பார்த்தது இல்லை.” சொன்னவாறே அவளை இறுக்கி அணைத்தான்.

“அத்தான்னு சொல்ற உரிமையை கூட உனக்குதான் கொடுத்தேன். அப்போதே தெரிந்திருக்க வேண்டும். நான் உன்னைதான் காதலிக்கிறேன் என்று.”

அதற்குமேல் அவளால் தாங்க முடியவில்லை. அவன் மார்பில் முகத்தை புதைத்து வெடித்து அழுதாள்.

அவளின் மனம் அவனுக்கு புரிந்தது. அவளை இறுக்க அணைத்துக்கொண்டான். அவளின் அழுகை அதிகரிக்க அதிகரிக்க அவனின் அணைப்பு இறுகியது.

அதுவே அவன் அவள் மேல் வைத்திருப்பது காதல் என்று சொல்லாமல் சொல்லியது.

வணக்கம்.

 “நாளை பார்க்கலாம்..” மற்றும் “ராட்சசியா? ரட்சகியா?” என்ற என் இரு கதைகளுக்கும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தோழமை நெஞ்சங்களுக்கு நன்றி.

குறிப்பாக எனது கதைகளுக்கு பொருத்தமாக புகைப்படங்கள் போட்டு அசத்திய ChillZee Team –க்கு மிகவும் நன்றி.

 

This is entry #88 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.