(Reading time: 18 - 35 minutes)

றக்காதே கிடைக்காது

நினைக்காதே நடக்காது

கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப்பேச

கோதை நான் மானல்ல வலையை வீச

உனக்காக பிறந்தேனா எதற்காக வருகின்றாய்..என்று வரிகள் ஒலிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் மது.

பாடலை நிறுத்தியவன் தன் வாயால் பாடினான்

பறந்தாலும் விடமாட்டேன்

பிறர் கையில் தரமாட்டேன்                                       

அன்று நான் உன்னிடம் கைதியானேன்

இன்று நான் உன்னையே கைது செய்வேன்

எதற்காக வருகின்றேன் உனக்காக தொடர்கின்றேன் என்று பாடியபடி அவளது கைகளை தனது கைகளில் பிடித்தான்.அடுத்த நிமிடம் அவனை அடிதிருந்தாள் அவள்.அவ்வளவு கோபம் அவன் மீது வாய்பை அவன் அமைத்து தர தனது கோபத்தை அரையாக வெளிப்படுத்திவிட்டாள். எவ்வளவு திமிரு அவனுக்கு இருக்கும், நானே கல்யாணம் பண்ணிகிட்டானு கோபத்தில இருந்தா,இவன் விசில் அடிக்குறான்,கையை பிடிக்குறான்.

அவள் அடித்ததும் காரை ஓரமாக நிறுத்தியவன் அவளை இழுத்து அணைத்து அவளது முகம் எங்கும் முத்திரையை பதித்து,கடைசியாக அவளது இதழ்களில் தனது காவியத்தை முடித்தான்.அவள் மூச்சு வாங்க விடுவித்தவன் அவளது காதுகளில்,” தேங்க் யு டால்..” என்றுக் கூறி,அவளை முற்றிலுமாக தனது அணைப்பிலிருந்து விடுவித்தவன் எதுவும் சொல்லாமலே காரை செலுத்த ஆரம்பித்தான்.

இதை சற்றும் எதிர் பாராத மதுதான் திரு திரு வென முழித்தாள்.எதுவும் சொல்லாமல் அமைதியாக கண் மூடி சாய்ந்தவள் உறங்கியும் விட்டாள்.

அவளது உறக்கத்தை களைக்காமல் வண்டியை செலுத்தினான்.(பாவம் பாலாவுக்கு தெரியல புயலுக்கு முன் அமைதி..)

தனது வீட்டை அடைந்ததும்,அவளையும் எழுப்பி அவர்கள் உள்ளே செல்ல எத்தனிக்கும் பொழுது,அவனது நண்பர்கள் குழு அவர்களை சூழ்ந்துகொண்டது.

அவன் தனது திருமணத்தை யாரிடமும் சொல்லவில்லை எல்லாம் மதுக்காக...காலையில் தான் அவன் சோசியல் மீடியாகளில் தனது திருமணத்தை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தான்.

அனைவரும் சென்ற பின்பு,அவனது உதவியாளர் மட்டும் நின்று வாழ்த்துக் கூறிவிட்டு அவள் அவனுடன் சண்டையிட காரணத்தையும் எடுத்துக்கொடுத்துவிட்டு சென்றார்.

அவன் ரிசப்ஸன் கூட வேண்டாம் என்று கூறி இருந்தான்,அதைதான் அவர் சொல்லி விட்டு போய்விட்டார்.

சாதாரணமாகவே ஒரு காரணத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, சொல்லவா வேணும்...

அவரையும் அனுப்பிவிட்டு ,அவர்களுக்கு சாப்பாடு வாங்கிவந்தான். சாப்பாடை இருவருக்கும் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றான்.

அமைதியாக அமர்த்திருந்த மதுவிடம் சென்றான்.

“மதும்மா சாப்பிடு...என்று அவன் கூறிய அடுத்த நொடி, அவன் கையிலிருந்த  தட்டை தட்டிவிட்டாள்.

அவளது மனதில் இருந்தது ஒன்றே ஒன்று,அவள் அவனுக்கு ஏற்றவள் அல்ல..,அவன் கட்டாயத்தின் பேரில்தான் திருமணம் செய்து உள்ளான்.

கோவமாய் எழுந்தவள்,அவனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள்.

“நா...நா...நா... நான் எத்தனை தடவ சொன்னேன்,இந்..இந்...இந்..இந்த கல்யாணத்த நி..நி...நி...நிறுத்திடுனு,கே...கே..கே..கேட்டியா ....” என்று,அவள் பேசிக்கொன்டிருக்கும்போதே

“மதும்மா...,வேணாண்டா ..,இப்ப எதுவும் பேச வேணாம்....” என்று அவன் பேசிமுடிப்பதற்குள், அவனின் சட்டையை பிடித்தாள் மது.

“எ...எ...எ...என்ன, ஒரு நி..நி...நி...நிமிஷம் கூட,இ...இ...இ..இந்த திக்குவாய் பேசுறத கேட்க மு..மு..மு..முடியலையா...,அ...அ....அ...அப்பறம் எப்படிடா...” என்று அவள் பேசும்பொழுதே அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்துக்கொண்டிருந்தது.

தன்னவளின் கண்ணீரை பொறுக்க முடியாதவனாய்,அவளை இழுத்து அணைத்தான்,அவனது பிடியில் இருந்து விடுபட நினைத்தவளை மேலும் இருக்கி அணைத்தான்.

“ நீ எவ்வளவு வேணும்னாலும் பேசுடா நான் கேட்குறேன்..”என்று கூறியவனின் குரலில் தெரிந்தது அவனது வேதனை. 

“டே..டே..டே..டேய் ஏன்டா, பொய் சொ..சொ..சொல்லுற..,நீ...எ...எ...எ...எவ்வளவு பெரிய சிங்கர்,ஆனா..உ...உ...உன்னால உன்னோட மே...மே..மேரஜ்க்கு யாரையாவது கூப்பிட முடிஞ்சுதா,ஒ..ஒ..ஒ..ஒரு ரிசப்ஸன் கூட உன்னால வைக்க மு..மு..மு..முடியல...,நா..நா..நா...நான் எத்தனை தடவை சொன்னேன்,கே...கே...கேட்டியா..”

“அப்படிலாம் இல்லமா...,நான் உன்ன லவ்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.