(Reading time: 18 - 35 minutes)

ன்னை  கரம் பிடித்தேன் 

வாழ்க்கை  ஒளிமயமானதடி   

உன்னை  கரம் பிடித்தேன் 

வாழ்க்கை  ஒளிமயமானதடி   

பொன்னை  மணந்ததனால் சபையில்

புகழும் வளர்ந்ததடி

உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணில் பாவை அன்றோ

கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ....”

என்று அவன் பாடி முடிக்க அவள் முழுவதுமாக தன் வசம் இழந்து அழதொடங்கினாள்.ஏனெனில் அவன் அந்த பாடலின் மூலம் அவளுக்கு தன் நிலையை கூறியிருந்தான்.

அவள் அருகில் வந்த பிரபா ” ஏய், அழாதடி...,இப்பவாது என்னோட அண்ணனை புரிஞ்சிக்கோ, அவன் உன் மேல பைத்தியமா இருக்கான்,உனக்கு தெரியுமா  உனக்கு நிச்சயம் நடக்குற அன்னைக்கு அத்தை,மாமாகிட்ட பேசி, அவனோட நிச்சயம் பண்ண வச்சான் அந்த எப்.எம்...

 அவன் பாவம்டி உன்ன ரொம்ப லவ் பண்றான், நீ என்னான அவன் கிட்ட டிவர்ஸ் கேட்ருக்க,என்ன பாக்குற உனக்கு நான் எப்படி பெஸ்ட் ப்ரண்டோ அதே மாதிரிதான் அவனுக்கும்...”என்று பேசிக்கொண்டே போனவனை பே..னு பார்த்துக் கொண்டிருந்தாள் மது.

“ சூடு போட்டுகிட்டியாமே..,அப்படியே உடைஞ்சி போய்ட்டான் அந்த எப்.எம், அவனுக்கு பாடுறதுனா  எவ்வளவு உயிர்னு உனக்கு தெரியும்ல,இன்னைக்கு அதையும் உனக்காக விட்டுகொடுக்க போறான்.அதுக்காக அவன் எவ்வளவு சோதனைகளை சந்திச்சிருப்பான்,நாளைக்கு அவார்ட்ஸ் பங்ஸன்ல அத சொல்லபோறான், இனிமே அவன் பாட மாட்டானாம்,அதுதான் உன்ன அவன் கிட்டயிருந்து பிரிக்குதாம் சொல்லுறான் அந்த எப்.எம்,இது அப்பா,அம்மாவுக்கு கூட தெரியும்...”என்று முடித்து அவளை பார்த்தான் பிரபா.

“க...க..க..கவலப்படாதடா,உன்னோட அ..அ...அ...அண்ணன் பாடுவாரு, அ...அ...அ...அப்புறம் என்னோட பு...பு...பு..புருஷனை எப்.எம்.னு இனிமே கூப்பிடாத...”என்று சிரித்துக்கொண்டே செல்பவளை பே..னு பார்பது இவனது முறையாயிற்று.

பின்ன என்னங்க காலேஜ் படிக்கிறபோது அவனது அண்ணனுக்கு இந்த பெயரை வைத்தவளே அவள் தான்.அவனது பாடலே அனைத்து எப்.எம்.களிலும் ஓட அந்த பெயரை வைத்தாள்.

டுத்தநாள் மாலை அந்த அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடக்கும் அரங்கமே ஜொலித்துக் கொண்டிருந்தது. அங்கு வந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது,அவனை தவிர.

என்னதான் பாடுறதை விடுறதுக்கு அவன் முடிவு எடுத்திருந்தாலும், அவனுக்கு அது கஷ்டமாகவே இருந்தது.

ஒவ்வொரு பிரிவாக வெற்றியாளர்களை அறிவித்து அவர்களுக்கு அவார்ட் அள்ளித்துக் கொண்டிருந்தனர்.

அவனது பிரிவும் வந்தது ,அவன்தான் நாமினிகளில் அனைவரையும் ஓரம்தள்ளி வெற்றிபெற்று இருந்தான்.

அவனது பெயரை அழைக்க மேடை ஏறி அந்த அவார்டை வாங்கியவன் ஒரு அறிவிப்பு அறிவிக்க போவதாக குறிப்பிட,அதற்குள் இடைபுகுந்த தொகுப்பாளர் அவனுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி இருப்பதாக கூற,என்ன என்று அவர் காட்டிய திசை நோக்கி பார்த்தான்.அவனது மனைவி அவன் முதன்முதலில் வாங்கிதந்த புடவையில் அழகு பதுமையாக அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

அவனது கண்களில் பல உணர்வுகள் வந்து சென்றது. தன்னவளை  அங்கு சற்றும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியும்,அவளது அழகை பருகியவனின் கண்களில் காதலும்,அவள் எதற்கு வந்துள்ளால் என்று தெரியாததால் பயமும் வெளிபட்டது .

அவளை விழா தொகுப்பாளினி வரவேற்று அவனது மனைவி என்று அறிமுகப்படுத்த அரங்கமே அதிர  கரகோஷம் எழுந்தது.

அவளிடம் மைக்கை தந்து பேச சொல்ல,அதுவரை வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன்,அவளை நெருங்கி மைக்கை வாங்க முயற்சிக்க ,அவள் பேச ஆரம்பித்தாள்.

“எ...எ....எ....எல்லார்க்கும் வணக்கம்.உ..உ...உ..உங்க எல்லார்க்கும் இது அதிர்ச்சியாய் இருக்கும், த...த...த..த கிரேட் சிங்கர் பா...பா..பா...பாலாவோட மனைவி ஒ...ஒ..ஒ...ஒரு திக்குவாய்.இ..இ...இ...இதனால்தான் , அவர் எ..எ...எ..என்னால அடுத்தவங்க கேலிக்கு ஆளாக கூடாதுன்னு தா...தா...தா...தான் நான் அவர ...”என்று பேசமுடியாமல் நிருத்தியவளை அருகில் இழுத்து அணைத்தவன்,”போதும்டா வேணாம்..”என்று கூற

“போ..போ....போ...போடா,நீ உ..உ..உ.உன் காதலா பெருசா கா.....கா..காட்டிட்ட, நான் உன் மே..மே..மே...மேல எவ்வளவு காதல் வச்சிருக்கேன்னு நிருபிக்க வே..வே....வே..வேணாம்” என்று அவள் கூற வாயடைத்துப்போனான் பாலா.

“சா..சா...சா..சாரி,இந்த பா..பா...பாலாக்கு அவனோட வா..வா...வா...வாயாலதான்  அவனுக்கு வாழ்க்கைனா,எனக்கு அ..அ...அ...அதுதான் எதிரி..”

“போதும்டா டால்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.