(Reading time: 18 - 35 minutes)

பொ..பொ...பொ..பொய் சொல்லாத எப்.எம், நீ...நீ..நீ...நீ..பாடுன ஒரு வரி பா...பா...பா...பாடவே எனக்கு பத்து நிமிஷம் வேணும்...,நீ என்ன பா...பா...பா..பார்த்தே பத்து வருஷம் ஆ..ஆ....ஆ...ஆகும்..., இ...இ...இ..இதுல லவ்வா...”

“ஏய்,அப்படிலாம் பேசாதடி...”என்று அவன் சொல்வதையே காதிலே வாங்காமல்

“நீ...நீ...நீ...லட்சுமிம்மா சொ...சொ...சொ...சொன்னாங்கனு தானா, க..க...க...கல்யாணம் பண்ணிகிட்ட...,பேசாம  என்ன டிவர்ஸ் ப..ப...ப...”என்று அவள் முடிப்பதற்குள் அவள் இதழை தனது இதழ்களால் சிறை செய்திருந்தான்.

அவனது முத்ததில் அவளும் லயித்திருந்தாள்.அவள் கணவன் அல்லவா ...

தன்னவளின்  இசைவை உணர்ந்தவனும்,மேலும் வேகமாக முன்னேறினான்.

அவனது தழுவல்கள் எல்லை மீறின,அப்பொழுது தன்னவள் தன்னை கணவன் என்ற முறையில் தான் அனுமதிக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு வரவே,அவன் தன் உணர்வுகளை வலுக்கட்டாயமாக அடக்கி அவளை விட்டு விலகினான்.

“ வாடா சாப்பிடலாம்..”என்றான் தன்னை பார்தவளிடம்.

ஒரு வழியாக சாப்பிட்டு இருவரும் படுத்தனர். இருவரின் மனமோ, வெவ்வேறு  திசைகளில் பயணித்தது.

தனது காதலை அவளுக்கு உணர்த்திய பின்பு தான் அவளை முழுவதும் தன்னவளாக்க வேண்டும் என்று அவன் நினைக்க,அவனது மனைவியோ முற்றிலும் தவறாக யோசித்தாள்.

தனது மற்றும்அவனது  குடும்பத்தினர் கட்டாயத்தில் தான் அவன் தன்னை திருமணம் செய்துக்கொண்டிருக்கிறான் என மது நினைத்தாள்.

அவள் அதை நம்ப பலமான காரணம் இருந்தது. இந்த குறையினால் பலர் அவளை நிராகரித்தனர், அதனால் அவளது பெற்றோர் இதேபோல் குறையுள்ள பெண்ணை தேடி,அந்த குடும்பத்தில் பெண் எடுத்து பெண் கொடுக்க முடிவு பண்ணி இவளது அண்ணன் கமலிடம் பேசினார்கள்.

ஆனால்,அவன் கூறிய பதில்தான் இவளை இந்தஅளவு யோசிக்க வைத்தது.

அவன் தன் தந்தையை பார்த்துக் கேட்ட ஒரே கேள்வி எப்படிப்பா ஒரு திக்குவாய் கூட வாழமுடியும்.என்னால என் நண்பர்கள எப்படி பேஸ் பண்ணமுடியும்.

தன் அண்ணன் கூறிய பதில் மூலம் அவள் தன் கூட வளர்ந்த அண்ணனே இப்படி யோசிக்கும்போது  எவன் தன்னை இக்குறையை ஏற்றுக்கொள்ள போகிறான்.

கடைசியாக எதோ ஒரு மாப்பிளையை கண்டுபிடித்து, அவனுக்கு பல பவுன் நகைபோடுவதாக கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி,நிச்சயம் நடக்கும்போது அவன் காணாமல்போக அங்கு வந்திருந்த பாலா மாப்பிள்ளை ஆனான்.

இவற்றையெல்லாம் யோசித்தவள் எப்படியாவது அவனை விட்டு பிரிந்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டு உறங்கினாள்.

அதன் பின் வந்த நாட்களில் அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தால் மது.

அவனுக்கு பிடக்காதவற்றை செய்வது, அவன் அவசரமாக எங்காவது செல்லும் போது அவனை அழைத்து பேசி நேரத்தை கடத்துவது,கடைசியாக

அவனிடம் இப்படி ஒரு திக்குவாய வச்சிக்கிட்டு எதுக்கு கஷ்டபடுற என்று அவனிடம் கேட்பாள்,அவன் அவளை பார்த்து புன்னைகைத்து “அவ்வளவுதானே பேசி முடிச்சிடியா டால் “என்று கூறி விட்டு போய்விடுவான்.

அவனது நண்பர்கள் வந்தாலும் அவள் சென்று பேச மாட்டாள்,எங்கு தன்னால் அவன் கேலிக்குட்பட்டு விடுவானோ என்று, அவன் பார்ட்டி என்று அழைத்தாலும் செல்லமாட்டாள்.

ஆனால் ஓவ்வொரு தடவையும்,”இ..இ..இ..இதுக்கு தான் சொன்னேன் ப..ப...ப..பாகவதர், பேசாம என்ன டிவர்ஸ் ப...ப..ப..பண்ணிடுனு...” என்பாள்.

அப்போதும் அவளவன் புன்னகையே பதில் அளிப்பான்.

எவ்வளவு முயற்சிசெய்தும், அவளது முயற்சிகள் எல்லாம் தோல்வியிலே முடிந்தது. அவளுக்கே தெரியாமல் அவளது மனம் அவனை நோக்கி சென்றிருந்தது. தன்னவளின் மனதின் போக்கை நன்கு உணர்ந்து வைத்திருந்தான் பாலா. அவன் மது மாறுவாள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தான்.

தோ திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது.

அன்று மிகவும் சந்தோசமாக இருந்தான் பாலா.அவனுக்கு தேசிய விருது கிடைத்து இருந்தது.

இரவு 11.00 மணியளவில் அவனுக்கு செய்திக் கிடைக்க தனது அருகினில் உறங்கியவளை எழுப்பி அதை தெரிவித்தான்.

உறக்கத்தில் இருந்தவள் அவன் சொன்னதை கேட்டு,அவனுக்கு தனது முத்தங்களை   பரிசாக வழங்கினாள்.

ஏற்கனவே சந்தோஷமாக இருந்தவன் தன்னவளின் இதழ் தீண்டல்களால் மேலும் உற்சாகமாகி அவளுடன் முத்தபோரில் ஈடுபட்டான்.

அவளை அவன் முழுவதுமாக ஆக்கரமித்து இருந்தபொழுது தன்னுணர்வு பெற்றவள்,அவனிடமிருந்து  விலகி பக்கத்து அறைக்கு சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.