(Reading time: 22 - 44 minutes)

கொஞ்ச நாள் பொறுத்து பார்த்த நான், என் மனைவிக்கு எங்களுக்கு என்று ஒதுக்கப் பட்ட ரூமிற்கு எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வந்து அசந்து தூங்கும் போது, நான் அவள் காலை எடுத்து என் மடியில் போட்டு பிடித்து விடுவேன், நான் கால பிடிப்பது கூட தெரியாத அளவு தூங்கி கொண்டிப்பாள், பாவம் அந்த அளவு அசதி. என் கண்ணிலிருந்து கண்ணீர் வடியும், அவள் மேல் தெறித்து விடுமோ, அவள் எழுந்து விடுவாளோ என்று உடனேயே அதை துடைத்து விடுவேன்

காலை ஆறரை மணிக்கு மாப்பிள்ளை வேலைக்கு போகவேண்டுமென்று விடி காலை எழுந்து தன் மாப்பிள்ளைக்கு சமையல் செய்து கொடுத்தனுப்புவாள் அப்போது ஆரம்பித்தால், நாள் முழுதும் போய்க்கொண்டே இருக்கும்...

"என்ன சகுந்தலா, ஏதாவது ஹெல்ப் வேணுமாம்மா?" என்று ராமன் வந்து அவளை கேட்கும்போது, ஆச்சர்யத்தில் அவரை நிமிர்ந்து பார்த்தாள் அவர் மனைவி சகுந்தலா

"என்ன பார்க்கற, இத்தனை வருஷமா இல்லாத கரிசனம் இப்ப என்னன்னு பார்க்கறியா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லங்க, எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன், சுப்ரஜா கூட்டா மட்டும் வந்து சொல்லுங்க, நான் போய் அவளுக்கு என்ன வேணுமோ பார்த்துக்கறேன் , இந்தாங்கோ உங்களுக்கு ரெண்டு மூணு தடவ காப்பி சாப்பிட பிடிக்குமே"

"இல்ல வேணாம்"

"உங்களுக்கு வேண்டியதை செய்யறதுனால எனக்கு ஒன்னும் வேலை அதிகமாயிடாது " என்று காப்பி டம்பளரை அவர் கையில் திணித்தார்

குழந்தைக்கு மூன்று மாதம் ஆகும் போது பூர்வனும் அவன் மனைவியும் குழந்தையையும், சுப்ரஜாவையும் பார்க்க தங்கள் பிள்ளைகளுடன் வந்தனர்.

"என்னம்மா எப்படியிருக்க?" என்று அவர் தோள் சாய்ந்தான் மகன் பூர்வன்

உடனே அவன் மனைவி ஸ்ரீதேவி அவனருகில் வந்து "பாவம், உங்க பிள்ளைக்கு அம்மா நினைப்புதான் எப்பவும், இல்ல, பூர்வ்?" என்று அவள் பொடி வைத்து கேட்க, அவன் மெதுவாக விலகிக் கொண்டான் தன் அம்மாவிடமிருந்து

சகுந்தலாவிற்கு வலித்தது, பாசத்தோடு வந்த தன் பிள்ளையை இப்படி தள்ளி போக வச்சுட்டாளே '

இதெல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தார் ராமன்

மாப்பிள்ளை சுரேஷும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்  

சகுந்தலாவிற்கு வேலை இன்னும் அதிகமாகியது, மருமகளுக்கும் சேர்த்து அவள் பணிவிடை செவ்வனே நடந்துக் கொண்டிருந்தது

இதை பார்த்த மாப்பிள்ளை சுரேஷ், தன் மாமியாருக்கு உதவியாக எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். அவர் கறிகாயை எடுத்து கட் செய்தார் "மாப்ள நான் அதெல்லாம் பார்த்துக்கறேன், நீங்க போங்களேன் அவாளோட உக்காருங்கோ "

"இல்ல ஆன்டி, நீங்க தனியா எல்லாம் செய்யவேணாம் நானும் உங்களுக்கு சின்ன ஹெல்ப் செய்யறேன் "

"சுரேஷ் இங்க வா, இந்த குழந்தைக்கு டயப்பர் மாத்தனும் "

அவனுக்குத் தெரியும் அவள்,  தான் இங்கே வேலை செய்யக் கூடாது என்று தான் தன்னை கூப்பிடுகிறாள் என்று

"நீங்க போங்கோ, நான் எல்லாம் பார்த்துக்கறேன்"

ஆனால் சுரேஷ், அங்கேயும் இங்கேயும் மாறி மாறி எல்லா உதவியும் செய்தான்

"அம்மா அப்பா, எங்களோட வாங்களேன் ஊருக்கு போறதுக்கு முன்னாடி கொஞ்சநாள் எங்களோட இருந்துட்டு போலாம் "

ஆச்சர்யத்தோட அவன் அம்மா சகுந்தலா அவனை பார்த்தாள்

இரவு படுக்கைக்கு போகுமுன் ராமன் "என்ன சக்கு, பூர்வனோடு போகப்போறியா?"

"பாவங்க கொழந்த கூப்பிடறான் "

அவர் புன்னகைத்துவிட்டு "அங்கேயும் இதே கதைதான் சக்கு, நம்ம பசங்க ஆசையா கூப்பிடறாங்கன்னு நினைக்காத "

"ஏங்க பாவம் அவனுக்கு நம்ம மேல பாசமில்லன்னு சொல்றீங்களா?"

"இல்ல சக்கு, அவனுக்கு தன் குடும்பத்து மேல பாசமதிகம்னு சொல்லவறேன்"

"இருக்கட்டும்ங்க, நம்ம பசங்கத்தானே"

"உன்ன திருத்தவே முடியாது, நான், நாம சீக்கிரமாவே இந்தியா போயிடலாம்னு நினச்சேன், ஆனா உன்னோட எண்ணம் வேற போல இருக்கு?"

"எனக்குன்னு ஒரு எண்ணமும் இல்லேன்னு உங்களுக்கு தெரியாதா? ஆனா நம்ம குழந்தைகளோட கொஞ்ச நாள் இருந்துட்டு போலாமே?"

"நான் சொன்னா நீ கேக்கவா போற, அங்கேயும் போய் உன் புள்ள மாட்டுப்பொண்ணுக்கு  சிஷ்ருஷ பண்ணப்போற "

"இருக்கட்டும்பா நம்ம குழந்தைகளுக்கு நாம செய்யாம யார் செய்வா?"

இவாத்துல ஒரு மாசம் இருந்துட்டு, நம்ம கௌஷியாத்துக்கு போலாம் "

இன்னும் அது வேறயா”

“அலுத்துக்காதீங்கோ, எல்லாம் நம்ம குழந்தை கள் தான்”

“அது தான் வருத்தமா இருக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.