(Reading time: 22 - 44 minutes)

"ன்னம்மா திடீர்னு, இப்பாத்தான வந்தீங்கோ, உடனே கிளம்பி வரேன்றீங்கோ அங்க என்ன ஆச்சு மன்னி ஏதாவது சொன்னாளா?"

"அதெல்லாம் இல்லம்மா, ஸ்ரீதேவியோட அம்மா அப்பா வராளாம், அதான் நாங்க கிளம்பறோம், இங்கேயிருந்து என்ன பண்ணனும் சொல்லு...."

"அது சரிம்மா இப்ப இங்க வந்த என்ன பண்ண போறீங்கோ, எங்க மாமியார் மாமனார்லாம் இருக்காளே, எப்படிம்மா இங்க வருவேள்?"

"அது சரிதான், அப்பா இந்தியாவுக்கு போலாம்னுதான் சொன்னார், நான் தான் உன்னையும் பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன், அப்போ சரிம்மா, நாங்கோ நாளைக்கே இந்தியாக்கு போறோம் சரியா"

"சரிம்மா போயிட்டு வாங்கோ அப்பறம் மூணு மாசத்துக்கப்புறம் இங்க வாங்கோம்மா"

"தெரியல பார்க்கலாம்"

"சரி நான் போன வைக்கறேன்"

போனை வைத்து விட்டார், மனதிற்குள் தன் கணவன் சொல்வது சரியோ? என்ன செய்வது என் குழந்தைகள் என்ன சொன்னாலும் என் ரத்தம் ' என்று நினைத்துக் கொண்டார் சகுந்தலா

"சரி பூர்வா, டிக்கட்டை இன்னிக்கோ நாளைக்கோ மாத்திடுப்பா, நாங்க களம்பறோம் "

"சாரிம்மா!"

"எதுக்கு கண்ணா சாரியெல்லாம், நீ என்ன பண்ணுவ பாவம், சரிப்பா நான் போய் பெட்டியெல்லாம் ரெடி பண்றேன்"

"சரிம்மா, நான் டிக்கெட் மாத்தறதுக்கு பாக்கறேன்"

"சரிப்பா"

ன்று வந்தவர்கள்தான் அதற்கு பிறகு அமெரிக்காவுக்கு போகவேயில்லை, அவர் மனைவி சகுந்தலா ஒரு நாள் இரவு மயக்கமானாள், அவர்கள் இருப்பது ஒரு ரிட்டைர்மென்ட் கம்யூனிட்டி, அதில் சகல சவுகர்யங்களும் இருந்தது, அக்கம் பக்கம் இருக்கும் சக வயதுக்காரர்கள்,அவர்களை அழைத்தார் ராமன், "ராகவன் கொஞ்சம் வாங்கோ என் பொண்டாட்டி மயங்கிட்டா கொஞ்சம் சீக்கிரம் வரேளா?

அவரும் அதற்கு பக்கத்து வீட்டிலிருக்கும் ராவும் வந்தார்கள், "என்ன ஆச்சு ராமன்?"

அவர் மனைவி இருந்த பக்கம் கை காண்பித்தார் "ஐயோ விழுந்திருக்காங்களே? " அவர்கள் பேசிக் கொண்டேயிருந்த நேரம் ஆபிஸ் இன்ச்சார்ஜ்ஜய் கூப்பிட்டு உடனே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு, சகுந்தலாவை தூக்கி பெட்டில் படுக்க வைத்தார்கள் இன்னும் நிறைய பேர் வந்த விட்டார்கள்,  வந்தவர்கள் " சார், ஆம்புலன்ஸ் டிரைவர் வந்திட்டான், நாம கிளம்பலாமா சார்"

"கிளம்பலாம்," எல்லோருமாக சேர்ந்து சகுந்தலாவை தூக்கி கொண்டு சென்றார்கள் "நீங்க வாங்கோ ராமன்,"என்று அவர் கையை பிடித்து அழைத்து சென்றார்கள்

அங்கேயிருந்த பெண்களெல்லாம் கண்ணில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தார்கள்

ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துவிட்டு ராமனை பார்த்தார்கள், இன்னும் சுவற்றையே பார்த்துக் கொண்டு சுற்றுப் புறம் தெரியாமல் இருந்தார் ராமன்

 அவரை கூட்டு கூட்டு பார்த்து அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் , அவர் பாக்கட்டிலிருந்து போனை எடுத்து அதிலிருந்து அவர்கள் மகனுக்கு கால் செய்தார் ராகவன் " ஹலோ அப்பா சொல்லுப்பா எப்படியிருக்க?"

"நான் உங்கப்பா இல்ல, நான் அவர் பக்கத்தாத்து ராகவன், பூர்வ்வன், உங்கம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம், அவாளுக்கு ஹார்ட் அட்டாக், உங்கப்பா கொஞ்சம் ஷாக்குல  இருக்கார்.  நீ உடனே வரனும்"

"சாரி அங்கிள் என்னால வரமுடியாது, எனக்கு ப்ராஜெக்ட் டெட்லைன் இருக்கு அங்கிள் என்னால வரமுடியாது, அதனால நீங்க பார்த்துக்குங்க அப்பப்ப எனக்கு போன் பண்ணி சொல்லுகோ அங்கிள்"

"என்னப்பா இது உன்ன பெத்த அம்மா ஹாஸ்பிடல்ல ஹார்ட் அட்டாக் வந்து படுத்திருக்காங்க, நீ ஒரே பிள்ளை வரமுடியாதுன்றியே?"

"நா என்ன பண்ணட்டும் அங்கிள், வேல அப்படி இருக்கு, இப் யு டோன்ட் மைண்ட் இந்த போன அட்மின்ல யார்கிட்டயாது கொடுக்கறீங்களா? நான் டிரீட்மெணட்டுக்கு ஆற அமௌண்டை க்ரெடிட் கார்ட் கொடுத்து பே பண்ணிடறேன், ப்ளீஸ் அங்கிள்"

"குடுக்கறேன்பா, ஆனா இப்போ உங்க அப்பா இருக்கற நிலைமை சரியில்ல பூர்வன், எனக்கு பயமா இருக்குப்பா"

"சரி அங்கிள் பார்க்கறேன், எனக்கு லீவ் கிடைச்சா உடனே வறேன் அங்கிள்"

"சரிப்பா, இரு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு போனை எடுத்துண்டு போய் கொடுக்கறேன்"

"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்"

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்குப்பா, எங்களுக்கும் வயசு ஆயிண்டிருக்கு யாருக்கு எப்போ என்ன வரும்னு தெரியாது"

அவர் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் ஒருத்தரிடம் போனை கொடுத்தார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.