(Reading time: 22 - 44 minutes)

பூர்வன் கிரெடிட் கார்டு நம்பரை கொடுத்து 'எவ்வளோ ஆறதோ அதை இந்த கார்டில் சார்ஜ் பண்ணிக்கோங்கோ ' என்று கூறி விட்டு ராகவனிடம்

"அங்கிள் கொஞ்சம் பார்த்துக்குங்க, எனக்கு லீவ் கிடைச்சா கண்டிப்பா வறேன்"

"சரிப்பா, நான் போன வச்சுடறேன்"

போனை வைத்து விட்டு ராகவன், ராமன் இருக்கும் இடத்திற்கு சென்றார்

அங்கு ராமன் இருந்தபடியே இருந்தார், டாக்டர் எங்கே" என்று நர்ஸிடம் கேட்டார்

"டாக்டர் இன்னும் மத்த டாக்டரசோடு பேசிட்டிருக்கார் சார்"

"நான் அவரை உடனே பார்க்கணுமே"

"இருங்க சார் கேட்டுட்டு வறேன்"

"தேங்க்ஸ் மா"

அவள் சென்றவுடன் கூட வந்திருந்த மற்றவர்களுடன் பூர்வன் கூறியதை பகிர்ந்துக் கொண்டார் , பேசிக் கொண்டிருந்த போதே நர்ஸ் வருவதை பார்த்து அருகே சென்றார்

"சார் டாக்டர் வர சொன்னார்"

"ராமன் வாங்க டாக்டரை போய் பார்க்கலாம் "

அவர் எழுந்து அவர்களுடன் சென்றார் ஆனால் யாரிடமும் எதுவும் பேசாமலே இருந்தார்

டாக்டரின் ரூமுக்கு போனவுடன் , டாக்டர்  அவர்களை உட்கார சொன்னார்  "உக்காருங்க சார், எப்படியிருக்கார் சார்? எப்படியிருக்கீங்க ராமன்?"

"அவர் அப்படியே தான் டாக்டர் இருக்கார், மேடம் பத்தி சொல்லுங்க டாக்டர்?"

"அவங்களுக்கு ஹார்ட் அட்டாக், ப்ரெஷர் ரொம்ப ஹை சார், ரொம்ப மனக் கவலையா இருக்கும்னு நினைக்கறேன், ப்ரெஷர் குறையவே மாட்டேங்கிறது, நாங்க ட்ரை பண்ணிண்டிருக்கோம் பாப்போம், ப்ரெஷர் கொறைஞ்சாதான் மத்த ட்ரீட்மென்ட் பண்ண முடியும் "

" அது எப்போ குறையும் டாக்டர்?"

"என்ன சார், படிக்காதவங்க கேக்கற மாதிரி கேக்கறீங்க?"

"நாங்க எங்களால முடிஞ்ச அளவு பிரஷரை குறைக்க ட்ரை பண்றோம், ஆனா அவங்களோட கோஆபரேஷனும் வேண்டும்... அதுதான் இல்லை, நாங்கள் ரொம்ப ட்ரை பண்ணியும் ப்ரெஷர் மருந்துக்கு கட்டுப்படல.... பாக்கலாம் ..."

"அப்ப  அவங்க தற்போதைய நிலைமையை சொல்லுங்க டாக்டர் ?" என்று ராகவன் கேட்கவும்,

"அதான் சொன்னேனே ராகவன், அவங்க ப்ரெஷர் கொறையனும், அதுக்கு அவங்க மனசு கட்டுப்பாட்டுக்கு வரனும், அப்பறம்தான் சொல்லமுடியும், இப்போதைக்கு அவங்க சீரியஸ்தான், எவ்வளவு நாள், எப்போன்றது எதுவும் இப்ப சொல்ல முடியாது"

"அவங்க பிள்ளை யு எஸ்லேர்ந்து  கார்டு கொடுத்திருக்கார் டாக்டர், ராமன் இப்போ இருக்கற நிலைமைல அவரால எதையும் புரிஞ்சு செய்யற நிலைமைல இல்ல அதனால அவர் கிட்ட பேசியிருக்கேன், இப்போ அவருக்கு நான் என்ன சொல்லட்டும், ரொம்ப சீரியஸ்னா அவரை வர சொல்லனுமா?"

"எவ்வளவு நாள் இப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது ராகவன், நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆனா, நாங்க நல்லா முயற்சி செய்யறோம்  ஆனா அவங்க எப்படி ரெஸ்பாண்ட் பண்ணுவாங்க எப்போ ரெஸ்பாண்ட் பண்ணுவாங்கன்னு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்"

"சரி, இத நான் அவர் கிட்ட சொல்றேன்"

"சரி "

"அப்போ நாங்க கிளம்பறோம் டாக்டர்"

பூர்வன் தன் தங்கைகள் சுப்ரஜாவையும் கவுசல்யாவையும் கூப்பிட்டு விஷயத்தை கூறியதும், இரண்டு பேரும் "ஐயோ என்னால இப்ப போக முடியாது," என்று கூறிவிட்டார்கள்

"கவுஷி நீ போயேன், என்னோட ப்ராஜெக்ட் டெட்லைன் இப்போ, என்னால லீவ் எடுக்கவே முடியாது"

"இல்லண்ணா, என்னால போக முடியாது, எனக்கும் ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்கனும், என்னால போகமுடியாதுண்ணா"

"எனக்கும் முடியாது பூர்வ், என் மாமியாரை நம்பில்லாம் குழந்தைகளை உட்டுட்டு போகமுடியாது, நீ வேண்ணா மன்னிய அனுப்பேன்"

"மன்னி போக மாட்டா... சரி ஒங்களுக்கு விஷயத்தை சொல்லிட்டேன், பாக்கறேன் என்னால முடிஞ்சா போறேன்" என்று போனை வைத்து விட்டான்

ராமன், தன் மனைவியை கண்ணுக்குள் வைத்து தாங்கினார்.

இப்போதோ அவர் மனைவி கிழிந்த நார் போல படுத்துக் கிடப்பதை பார்த்து மிகவும்

வேதனைக்குள்ளானார், பதினைந்து நாட்கள் ஆகி விட்டது…..

அவர், மானசீகமாக தன் மனைவியுடன் பேசிக் கொண்டார். ‘என்ன சகுந்தலா, என்ன தனியா விட்டு போயிடாதடி’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.