(Reading time: 22 - 44 minutes)

வாளுக்கு எவ்வளவோ டென்ஷன் பாவம்”

“எப்படித்தான் பாவம் பொம்மனாட்டிகள் எல்லா த்தையும் இவ்ளோ ஈஸியா எடுத்துக்கறீங்களோ….ம்ம்...பகவானே……”

தூங்க ஆரம்பித்தார்

சுப்ரஜா, நாங்கோ  பூர்வனாத்துல கொஞ்ச நாள் இருந்துட்டு அப்றம் கௌசியாத்துக்கு போறோம், நீ என்ன சொல்ற?”

“நீ போய்டா எனக்கு யார் பண்ணுவா?”

“உங்க மாமியார் மாமனார் வரான்னாரே மாப்ள”

“அவா வந்தா, அவாகிட்ட நான் என்ன உரிமையா இத பண்ணு அத பண்ணுன்னு கேக்க முடியுமா?”

“இல்லடாம்மா, அவா வரச்சே நாங்க இங்க இருந்தா நன்னா இருக்காது, நீ அவாகிட்ட அட்ஜஸ்ட் பண்ணின்டிரு”

வர் மனைவியின் இரும்பல் சத்தத்தில் நினைவுலகத்துக்கு வந்தார், எழுந்து போய் தன் மனைவியை கவணித்து விட்டு, இழுத்து போர்த்திவிட்டு வந்து உட்கார்ந்தவர் மனது மறுபடியும் பழைய நினைவுகளிலேயே உழன்றது

பூர்வனோட பொண்ணுக்கு பதினோரு வயது, இவர்கள் அங்கு போயிருந்த சமயம், அவள் பருவ வயதை அடைந்திருந்தாள்,

ஒருநாள் அவர்கள் மகனும் மருமகளும் ஆபிசிலிருந்து வந்ததும், மகளிடம், "இன்னிக்கு உன் பிரென்ட்ஸ்  யாறானா வீட்டுக்கு வந்தார்களா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள்

"யா! ஒய் ஆர் யு ஆஸ்கிங்?"

"ஹு வாஸ் தட்? வாஸ் தட் பிராண்டன் "

"எஸ், ஓய்?டஸ் இட் மாட்டார்?"

"எஸ், நோ மோர் அமெரிக்கன் பிரெண்ட்ஸ் வென் வி ஆர் நாட் அரௌண்ட், அம் ஐ க்ளியர்?"

"ஒய் மாம்? ப்ளீஸ்.... யு நோ ஹி இஸ் மை குட் பிரென்ட், ஹவ் கேன் ஐ டெல் ஹிம் நாட் டு கம்... திஸ் இசின்ட் ஃபேர் மாம்.... டாட் ....டாட் , வேர் ஆர் யு?"

"எஸ் சுவீட்டி வாட் இஸ் இட்?" அவன் தன் மனைவி பின்னாடியே கோபமாக வருவது தெரிந்தது, "என்ன நடந்தது ஸ்ரீ ?"

"டாட், ஐ வில் டெல் யு, மாம் ஸேஸ்...."

"ஸ்டாப் இட் சுவீட்டி, ஐ வில் டெல் யு லேட்டர் பூர்வ் "

"ஓக்க்கே!!" அவன் ‘என்ன’ என்று கேள்வி கேட்கும் வகையில் புருவத்தை உயர்த்தினான்

அவர்கள் பெண் சுவீட்டி, அவள் பாட்டியின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் "பாட்டி, டெல் மாம், ஹௌ ஸ்வீட் பெர்சன் ப்ரண்டன் வாஸ் ? டெல் ஹர்"

"வாட்ஸ் கோயிங் ஆன் ஸ்ரீ?"

"பூர்வ், ஐ டோல்ட் யு டு ஸ்டே அவே ஃபிரம் திஸ், ஐ வில் டீல் வித் ஹர்"

"கேன் யு கம் இன்சைட் பார் அ மினிட் ஸ்ரீ, வி நீட் டு டாக் " சொல்லி கொண்டே தங்கள் ரூமுக்குள் சென்று விட்டான்

அவர் கள் பேசி முடித்து வெளியே வந்த பூர்வன், தன் மகளை அழைத்து,  அவளை அணைத்து தலை உச்சியில் முத்தம் கொடுத்து, “லுக் சுவீட்டி, நானும் அம்மாவும் சேர்ந்து டிசைட் பண்ணியிருக்கோம்,"

'வாட் டாட்?"

"நாங்க இருக்குறப்போ ப்ரண்டன் வீட்டுக்கு கூட்டிட்டு வா, வி கேன் ஆல் ஹவ் பன் டுகெதர்"

"டாட், யு ஆர் ஸோ ஸ்வீட்"

"ஜஸ்ட் லைக் மை சுவீட்டி" என்று அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினான்

அவன் மகள் சந்தோஷத்துடன் சென்றவுடன், அம்மாவை பார்த்தான் "என்னம்மா, இன்னிக்கு ப்ரண்டன் வீட்டுக்கு வந்தானா?"

"ஆமாம்பா, ஆனா குழதைகள் இங்கதான் லிவிங் ரூம்ல உக்காந்து பேசிண்டு சிரிச்சுண்டு இருந்ததுங்கோ, கொஞ்சம் டிவியும் பார்ததுங்கோ"

"ஹ்ம்ம்..." என்றான்

"போதும் நீங்கோ உங்க பேத்திக்கு சப்போர்ட்டா பேசினது, பெரியவாத்தானே, அவளை கண்டிக்கக் கூடாது,? இதே உங்க பொண்ணுன்னா இப்படி ஒரு பையனோட பழகட்டும்னு விடுவீங்களா?"

ஆக்ரோஷத்தோடு வெளியே வந்த ஸ்ரீதேவி, தன் மாமியாரிடம் கோபத்தோடு கேட்டாள்

'நான் என்ன பண்ணட்டும்மா  ஸ்ரீதேவி?" என்று பூர்வனின் அம்மா சகுந்தலா கேட்டார்

"அம்மா நான் பேசிக்கறேன் சும்மா இரு"

'என்ன நீங்கோ?"

"நீ உள்ள போ"

‘ம்..’ என்று தோளில் இடித்துக் கொண்டு சென்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.