(Reading time: 22 - 44 minutes)

டுத்தநாள், ஸ்ரீதேவி பூர்வனிடம் 'ஏன்னா, என்னோட அம்மா திடீர்னு, இப்போ வந்துடறேன், அப்பறம் என்னோட கஸினுக்கு கல்யாணம் அவாளுக்கு ஹெல்ப் பண்ணணுமாம்,  அதனால அம்மா இப்பவே இங்க வந்துடறேன், அப்பறம் என்னால வர முடியாதுன்னுட்டா, அதனால இப்ப வந்துடட்டும், உங்க அம்மா அப்பாவை இப்பவே போயிட சொல்லுங்கோ, எங்க அம்மா நாளைக்கே இங்க வரேன்டிறா"

"என்னடி இப்பவே போக சொல்லுன்ற?

"ஆமான்னா"

"நா எப்படிடி அவாகிட்ட சொல்றது? அதுவும் எங்கப்பா ரொம்ப ரோஷக்காரர்"

"ஹா ஹாஹா... ரொம்ப  ரோஷக்காரர்....உங்கப்பா"

ஐயோ ஆரம்பிச்சுடுவா, ‘ என்று தனக்குள் கூறி கொண்டே

"சரி வுடு நான் பாத்துக்கறேன், எங்கம்மாகிட்ட எப்படியாவது சொல்றேன்"

"அது..., இதான் எங்காத்துக்காரர்" என்று அவன் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தாள்

அதில் கொஞ்சம் மயங்கினாலும் தன்னை சுதாரித்துக் கொண்டான் பூர்வன்

வெளியே வந்த பூர்வன் தன் அம்மாவிடம் சென்றான் " அம்மா, சமையல் ஆயிடுத்தா, உன்னோட கொஞ்சம் பேசனும்"

"ஹ்ம், சமையல் ஆயிடுத்து, சாபிடறியா?"

"இல்லம்மா அப்பறம் சாப்பிடறேன், உன்னோட கொஞ்சம் பேசணுமே"

"என்னடா? என்ன சமாச்சாரம்?"

"அது வந்து........"

"பரவாயில்லடா எதுவாயிருந்தாலும் சொல்லு"

"அம்மா, அது வந்து... ஸ்ரீதேவியோட அம்மா வராளாம், அதனால......"

"அதனால? நாங்க வீட்ட விட்டு போகணுமா?" பின்னாலிருந்து ஒரு குரல் அதுதான் அவன் அப்பா ராமனின் குரல்

"அப்பா!!!"

"ஆமாம் நான் அப்பா, இவ உன்னோட அம்மா.... பரவாயில்லையே உனக்கு ஞாபகம் கூட இருக்கே?"

"அப்பா என்ன சொல்ற நீ? ஏன் இப்படி பேசற ?"

"எப்படிடா பேசறேன், நாங்களா வரேன்னு சொன்னோம், நீதான வா வான்னு சொன்ன, வந்தவாள கொஞ்ச நாள்லயே , என் மாமியார் வாரா, நீ கிளம்புன்ற, இதுக்கு உன் மாமியார பெர்மனண்டா இங்கயே வந்த இருக்க சொல்லாமே, எங்களுக்கும் வரதும் போறதும் மிச்சமாகும், நாங்க என்ன ஆசப் பட்டோமா ஆறு மாசத்துக்கு ஒரு முற அமெரிக்காவுக்கு வரணும்னு....."

"அப்பா மெல்ல பேசுப்பா... அவ காதுல விழ போறது, அப்பறம் ஒரு பிரளயமே வெடிக்கும்"

"ஏன்னா கொஞ்சம் சும்மாயிருங்களேன்"

"இப்படியே சொல்லி சொல்லி என்ன அடக்கி வச்சுடு" என்றார் கோபமாக

அவள் கணவன் ராமன்

"அதுக்கில்லேன்னா...."

"வாய்மூடு... நம்ம ஏமாளின்னு நினைச்சிண்டிருக்காண்டி உன் பிள்ளை... இனிமே நாம இங்கேயிருக்கக்கூடாது, இனிமே இங்க  வரக்கூட கூடாது"

"பேசாம இருங்கோன்னா,  அவன் நம்ம புள்ள தான எதுவும் பேசாதீங்கோ, அவனே பாவம் ....."

"என்னடி பாவம், நாம தாண்டி பாவம், பிள்ளைங்க பிள்ளைங்கன்னு அவாளுக்காக விட்டு கொடுத்து நாம என்னத்த கண்டோம், வெறும் அவமானத்தைத்தான் பார்த்தோம் "

"அப்பா, என்னப்பா ஏதேதோ பேசற, நான் என்ன இப்ப சொல்லிட்டேன்"

"சும்மா இரு பூர்வா, நாங்க நாளைக்கே கிளம்பறோம், டிக்கட்டை அட்வான்ஸ் பண்ணிடு "

"அப்பா ஏம்ப்பா கோவிச்சுக்கறேள்?"

"நான் கோவிச்சுக்கறேனா, இல்லடா இல்ல, சந்தோஷமா இருக்கேன், ஏன்னா உங்கம்மாக்கு விடுதலடா விடுதல "

"என்னன்னா பேசாம இருக்க மாட்டீங்களா?"

"ஏன் நான் பேசாம இருக்கணும், நமக்கு பொறந்த பசங்கள்லாம் அவாவா சவுகரியத்தை பாக்கறப்போ, இவ்ளோ வருஷம் உன்னோட குடும்பம் நடத்திய நான் உனக்காக பேசக் கூடாதா?"

"உடுங்கோ நாம கவுசி ஆத்துக்கு போலாம்"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், நாம நேர இந்தியாக்கு போறோம் அவ்வளவுதான் "

"சும்மாயிருங்கோன்னா, நான் கவுசிக்கு போன் செய்ஞ்சு பேசறேன்"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், நாம நேர போலாம்" என்று கூறிவிட்டு உள்ளே போய் விட்டார்

தன் மகனிடம் "பூர்வா, கவுசிக்கு போன் பண்ணி குடேன் நான் பேசறேன்"

கவுசிக்கு போன் செய்து கொடுத்தான் பூர்வன் "கவுசி நாங்க இங்கேர்ந்து இன்னிக்கே உங்காத்துக்கு வரலாம்னு இருக்கோம், நீ என்ன சொல்ற?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.