(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அவர் சொல்படி நடந்தான், அவரும் தனக்கு தெரிந்த வியாபார ரகசியங்கள் அனைத்தையும் ரிஷிக்கு மட்டும் கற்றுக்கொடுத்து ஒரு நல்ல தொழிலதிபராக உருவாக்கினார். தாத்தாவின் திறமையான யோசனைகள் மோகனசுந்தரத்திற்கும் சரி கேசவமூர்த்திக்கும் வரவில்லை. மாறாக ரிஷிக்கு மட்டுமே அவரின் திறமை, யோசனை, புத்திசாலித்தனம் அனைத்தும் வந்தது. அவனை அடுத்த செல்வகணபதியாகவே கம்பெனியில் இருப்பவர்களும் பிற தொழிலதிபர்களும் நினைத்து அவனை மரியாதையோடு மதித்தனர்.

  

செல்வகணபதியின் குடும்பத்தின் முக்கியமான மற்றும் பழைய அவர் காலத்து எதிரியே மாணிக்கவேல்தான், அவன் பல பிரான்ச்சுகளை ஒரு ஊரில் திறந்தான் என்பதற்காகவே வீம்பு பிடித்து தினகரனும் பல பிரான்ச்சுகளை திறந்தான்.  

  

அவன் ஆரம்பித்து முதல் நாள் பார்ப்பதோடு சரி அதோடு அவன் அடுத்த பிரான்ச்சு ஆரம்பிக்க சென்றுவிடுவான், அவன் ஆரம்பித்த பிரான்ச்சுகளை கவனிக்கும் பொறுப்பு கருணாகரனுடையது, இதனால் தினம் தினம் அவர்கள் சண்டையிட்டுக்கொள்வார்கள். அந்த சண்டையை தீர்த்து வைக்கும் கடமை தாத்தா செல்வகணபதியுடையது.

  

சென்னையை பொறுத்தவரை இந்த பிசினஸ்சில் 3வது இடத்தை பிடித்திருந்தார்கள். அதற்காக குடும்பமே உழைத்து தொழிலை பெரிதாக்கியது, புதிது புதிதாக வண்டிகளை தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலிருந்து மிஷின்கள் மற்றும் உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்வது ரிஷியின் முக்கியமான வேலை.

  

அவனுடைய தந்தை மோகனசுந்தரம் அந்த பொறுப்பான ஏற்றுமதி இறக்குமதி வேலைகளை யாரையும் நம்பி தராமல் ரிஷியை நம்பி தருவார். ரிஷியும் 6 மாசத்துக்கு ஒரு முறைதான் இந்த வேலை வரும் என்பதால் அவனும் அதை செய்ய ஒப்புக்கொண்டான்.

  

அவனும் கச்சிதமாக வேலையை செய்வான். அவன் வேலையை விட வீட்டில் இருப்பது அதிகம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்வது கஷ்டப்படுவது அவனுக்கு பிடிக்காது. தன் திறமையை காட்ட சிறிது நேரம் வேலை செய்தாலே போதும் என்பான். அதேப்போல் எப்பொழுது கம்பெனியில் மீட்டிங், டீலிங் என்றாலும் அவன்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.