(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

அண்ணனை பார்த்து தானும் டீலீங் மீட்டிங்கில் தன் திறமையை காட்டி ரிஷியை போல பாராட்டு பெற வேண்டும் என நினைப்பான். என்ன இருந்தாலும் ரிஷிக்கு இருக்கும் புத்திசாலித்தனம் திறமை கருணாவுக்கு பாதி கூட இல்லை. தினகரனுக்கு சுத்தம். அவனுக்கு மீட்டிங் என்றாலே ஓடிவிடுவான். ஆனால் பல பிரான்ச்சுகளை மட்டும் திறந்துக்கொண்டே இருப்பான்.

  

மோகனசுந்தரத்திற்கும் வேறு வழியில்லாமல் ரிஷியையே எல்லா விஷயத்திலும் நம்ப வேண்டியதாகி விட்டது. அவருக்கும் சிறு வருத்தம் இருந்தது. தன் அப்பா செல்வகணபதிக்கு அடுத்து தன் மகன் ரிஷிக்குதான் இந்த புத்திசாலித்தனம் சாதூர்யம் இருக்கறது தனக்கு கூட இந்தளவிற்கு வரவில்லையே என அவர் அடிக்கடி ஆதங்கப்படுவார். இன்றுவரையிலும் அந்த கம்பெனி மற்றும் வீடு  பிற சொத்துக்கள் அனைத்தும் செல்வகணபதியின் பெயரிலேயே இருக்கிறது.

  

குடும்ப ஒற்றுமைக்காக அவரும் இன்றுவரை சொத்தை பிரித்து தரவில்லை. அவருடைய மகன்களும் சொத்தை பிரித்து கொடுக்க சொல்லவில்லை. அண்ணன் தம்பிகள் இருவரும் மிகவும் ஒற்றுமையாக வீட்டிலும் சரி கம்பெனியிலும் சரி மற்ற இடங்களிலும் அவர்கள் தன் தந்தையின் பேச்சை மீறாமல் இருக்கிறார்கள். வீட்டிற்கு வந்த மருமகள்களும் எந்த பிரச்சனையும் செய்யாமல் ஒற்றுமையாகவும் அவர்களும் கூட்டுக்குடும்பமாக மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

  

ஒருமுறை ரிஷியால் பெரிய ஆபர் வர அந்த காரணத்தால் பல மடங்கு லாபம் வந்தது கம்பெனிக்கு. அந்த விசயத்துக்காக தாத்தா ரிஷிக்கு ஒரு பங்களாவை பரிசாக தந்தார். வீட்டில் இருக்கும் நேரம் தவிர கம்பெனிக்கு மீட்டிங்குக்காக செல்வான். என்றாவது போரடித்தால் அப்படியே தாத்தா வாங்கி தந்த பங்களாவை கெஸ்ட் ஹவுஸ் போல பாவித்து அங்கு ரெஸ்ட் எடுப்பான். அவனை யாரும் தடை சொல்லமாட்டார்கள்.

  

வீட்டில் இருக்கும் யாராவது அவனை கண்டிக்க வந்தாலும் சட்டென அவன் பேசியே அவர்களை சமாதானமாக்கிவிடுவான். அந்த திறமையால் அவன் அந்த வீட்டில் செல்ல குழந்தையாகவே வலம் வந்தான். தாத்தாவின் அன்பு முழுவதும் பெற்ற ஒருவன் யாரென்றால்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.