(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

இந்த ஊர்லதான் இருக்காங்களா

  

இருக்காங்க நந்தினி வேற வேற இடங்கள்ல இருக்காங்க.” என கூறும் போதே க்ளீனிக் வரவும் அவன் காரை நிறுத்திவிட்டு அவளை கூட்டிக்கொண்டு உள்ளே டாக்டரிடம் சென்றான். டாக்டர் கௌதம் ரிஷியின் சிநேகிதன் என்பதால் அப்பாய்ன்ட்மென்ட் இல்லாமலே உள்ளே செல்ல அனுமதியும் கிடைத்தது

  

உள்ளே சென்றவன் டாக்டர் கௌதமை பார்த்ததும்

  

ஹாய் கௌதம்

  

ஹாய் ரிஷி வாட் எ சர்ப்ரைஸ் என்னை பார்க்க இவ்ளோ தூரம் வந்திருக்க

  

வரவேண்டிய அவசியம் இருந்ததால வந்தேன்என சொல்லிவிட்டு நந்தினியை பார்த்தவன்

  

நந்தினி இந்த சீட்ல உட்காருஎன சொல்லவும் அவளும் ஒரு இருக்கையில் அமர்ந்தாள். கௌதம் அவளையும் அவனையும் சந்தேகமாக பார்த்துவிட்டு அவனிடம்

  

யார்டா இந்த பொண்ணு

  

பேரு நந்தினி

  

சரி யார்

  

அதான் பேரை சொன்னேனே இப்போதைக்கு இவ்ளோ தெரிஞ்சா போதும் உனக்கு, அவளுக்கு கையில அடிப்பட்டிருக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுஎன அவன் சொல்லவும் அவளிடம் சென்று

  

கொஞ்சம் கையை காட்டுங்கஅவள் காட்டவும் அவன் சோதித்துவிட்டு

  

காயம் கொஞ்சம் பலமாத்தான் இருக்கு எப்படியாச்சிஎன கேட்க அதற்கு ரிஷியே பதிலளித்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.