(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

இந்த உலகம் நீ நினைக்கற மாதிரியில்லை நந்தினி, உன்னை யாராவது ஏமாத்திடுவாங்க

  

அதான் நீங்க இருக்கீங்கள்ல என்னை யாரும் ஏமாத்த மாட்டாங்க என்னை ஹாஸ்டல்ல விட்டுடுங்க அத்தான்என்றாள் அவளின் சொற்களை கேட்டு

  

சரி ஹாஸ்டலுக்குப் போய் என்ன செய்வ

  

வேலையை தேடிக்கறேன் அத்தான்

  

வேலையா

  

ஆமாம் அத்தான் சும்மாயிருந்தா என் மனசுல தேவையில்லாத யோசனைகள் வரும். ஏதாவது வேலை செஞ்சா நானும் நடந்ததை மறந்துடுவேன் அதான்

  

ம் நல்லாதான் பேசற நந்தினி, அப்ப நீ தெளிவா இருக்க தற்கொலை எதுவும் செஞ்சிக்க மாட்டல்ல

  

இல்லை அத்தான் சத்தியமா இல்லை, நான் அப்படி செய்ய மாட்டேன் என்னை நம்புங்க அத்தான்

  

என அவள் உறுதியாக சொல்லவும் அவளது முகத்தை பார்த்தான். அதில் இருந்த தைரியத்தைக்கண்டு உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவன்

  

சரி என்ன படிச்சிருக்க

  

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன் அத்தான்

  

என் ப்ரெண்ட் ஐடியில வேலை செய்றான் அங்க வேலையில உன்னை சேர்த்துவிடவா

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.