(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அவள் பெரும்பாலும் தன் கம்பெனிக்கு போன் பண்ணி கம்பெனி வேலைகளை செய்யச்சொல்லி கட்டளை போடறா. 

   

அவளோட கவனம் இந்த வீட்லயும் இல்லை உன்னை கல்யாணம் பண்ணிக்க போறதிலயும் இல்லை நான் சொல்லிட்டேன்ங்கறதால நேரத்துக்கு சமையல் செஞ்சிட்டு லேப்டாப்பும் போனுமா உட்கார்ந்து கம்பெனிக்கு போன் பண்ணி பேசறா அவளுக்கு அவள் வாழ்க்கையை விட கம்பெனிதான் முக்கியம் ஒரு நல்ல பிசினஸ்வுமென் ஆகற திறமையிருக்கு ஆனா ஒரு நல்ல மருமகளா ஆகற குணம் அவளுக்கு இல்லை எனக்கென்னவோ அவள் ரொம்ப நாளைக்கு இந்த வீட்ல இருப்பாள்ன்னு எனக்கு தோணலை”

   

“சரி மிருதுளா பத்தி என்ன நினைக்கிறீங்க”

   

“அவளுக்கு அருந்ததியிருக்காள்ன்னு திமிரு யாராவது எப்படியாவது போங்க நான் எனக்கு புடிச்சத தான் செய்வேன்னு இருக்கா அதுவும் தப்புதான் அவளோட திறமையை காட்டாம அவள் இப்படி நடந்துக்கறதால சீக்கிரமா அவள் தோத்துபோயிடுவா”

   

“அப்ப நந்தினி”

   

“அவள் உன்னை விரும்பறா நீ வேணும்னு அவள் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் இந்த போட்டியை போட்டியா நினைக்காம ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து தங்கியிருக்கற மாதிரி நடந்துக்கிறா”

   

“அவள் இயல்பா நடந்துக்கிறா இதுல என்ன தப்பு”

   

“தப்பிருக்கு. இப்படியிருந்தா அவள் உங்கம்மா மாதிரி அருந்ததிகிட்ட மாட்டி கஷ்டப்படுவா புரியுதா”

   

“ஏன் வந்தனா கஷ்டப்படமாட்டாளா”

   

“அவளோட எண்ணங்களே வேற நந்தினியோட எண்ணங்கள் வேற வந்தனாவை பொருத்தவரைக்கும் நல்ல பேர் எடுக்கனும் இந்த போட்டியில ஜெயிக்கனும் அதுக்காக என்ன 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.