(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“டேய் உன்னை பத்தியும் எனக்கு தெரியும் நந்தினியை பத்தியும் எனக்கு தெரியும் நீ வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணவே அவள் 5 நாள் டைம் எடுத்துக்கிட்டு கடைசி நேரத்தில வந்து நின்னா அவளாவது நீ கூப்பிட்டதும் ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு சம்மதிச்சி வர்றதாவது. எனக்கு நம்பிக்கையில்லை பகல் கனவு காணாம உருப்படற வழியை பாரு” என சொல்லவும் தாத்தாவை பார்த்து முறைத்தவன் ஏதோ தோண சட்டென வீட்டை சுற்றி சுற்றி பார்த்துவிட்டு தாத்தாவிடம் ரகசியமாக

   

”தாத்தா” என்றான் ஹஸ்கி வாய்சில். அவனை விநோதமாக பார்த்த தாத்தாவும்

   

”என்னடா குரல் ஒரு மாதிரியாயிருக்கு தொண்டை கட்டிக்கிச்சா”

   

“தாத்தா நான் ரகசியம் பேசலாம்னு ஹஸ்கி வாய்சில பேசறேன்”

   

”நல்லாவே பேசு இங்க யார் இருக்கா”

   

“இல்லை தாத்தா சுவத்துக்கும் காது இருக்குன்னு சொன்னீங்களே மறந்துட்டீங்களா”

   

“சரிடா இப்ப என்ன வேணும் சொல்லு”

   

“தாத்தா இப்படி சத்தமா பேசாதீங்க ஹஸ்கி வாய்சில பேசுங்க” என்றான் ரிஷி.  அவனை பார்த்து முறைத்துவிட்டு

   

”சரி சொல்லு” என அவரும் குரலை குறைத்துக்கொண்டு பேச ரிஷி அவரை நெருங்கி

   

”தாத்தா நேத்து முதல் நாள் முடிஞ்சிடுச்சே அதோட ரிசல்ட் என்ன”

   

“ரிசல்டா என்ன ரிசல்ட்”

   

“அதான் தாத்தா 4 பொண்ணுங்கள்ல எது பெஸ்ட்டுன்னு நீங்க மார்க் போட்டிருப்பீங்களே அதை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.