(Reading time: 24 - 47 minutes)

நான் ஒன்னும் ரொம்ப பெருந்தன்மையா எல்லாம் இல்லப்பா. அந்த சண்டையை பத்தி பேசவே வேண்டாம்ன்னு எல்லாம் நான் சொல்லலைப்பா. இதனால நான் உன்னை மன்னிச்சி விட்டுட்டேன்னு எல்லாம் அர்த்தம் கிடையாது. எனக்கு அதை பத்தி பேசும் போது உன்னை திட்டு சண்டை போட்டு கேட்கணும், இப்ப அந்த சண்டையை நான் விரும்பலை, அவ்வளவு தான். மத்தபடி நான் ஒன்னும் அவ்வளவு நல்லவன் எல்லாம் கிடையாது எல்லாத்தையும் மரக்கற அளவுக்கு. நான் ரொம்ப கேட்டவன் தெரிஞ்சிக்கோ” என்று நம்பியார் போல் கையை பிசைந்தவாறே கூறினான்.

இனியா அவளையும் மீறி சிரித்து விட்டாள்.

அவளை மேலும் அதை பற்றி சிந்திக்க விடாமல் “அது சரி. உனக்கு சாரி கேட்கறது எப்படின்னு கூட தெரியலையே, உன்னை எல்லாம் வச்சிட்டு நான் என்ன பண்ண போறேன்னு தெரியலையே” என்றான்.

“என்ன. எப்படி கேட்கணும்” என்றாள்.

“ம்ம்ம். உனக்கு நான் நிறைய டீச் பண்ணணும் போல இருக்கு. சரி விடு” என்றவாறே

“இப்படி கிட்ட வந்து கட்டிபிடித்து” என்று கூறிவிட்டு அவளை அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு “இப்படி தான் சாரி சொல்லணும்” என்றான்.

அவள் முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு, அவனை தள்ளி விட்ட இனியா “ராஸ்கல், பிராட். யூ சீட். ரொம்ப தான் ஓவரா போறீங்க. இன்னைக்கு என்ன ரொம்ப டூ மச்சா போயிட்டு இருக்கீங்க. நானும் லூஸ் மாதிரி இருக்கேன் பாருங்க” என்றாள்.

“ஹாஹஹஹா”

“சிரிக்காதீங்க”

“சரிங்க மேடம். நீங்க சொன்னா சரிங்க. நான் சிரிக்கலை” என்றான்.

திரும்ப ஏதோ சீரியஸான இனியா “இளா நீங்க சொன்ன மாதிரி நாம எதை பத்தியும் இப்ப பேச வேண்டாம். ஆனா நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி தரனும்” என்றாள்.

“என்ன ப்ராமிஸ்”

“இல்லை. நமக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் நான் போன் பண்ணா நீங்க எடுக்காம இருக்க கூடாது, அதே மாதிரி நீங்க பண்ணா நான் எடுக்காம இருக்க மாட்டேன். ஓகே வா. ப்ராமிஸ் பண்ணுங்க” என்றாள்.

இளவரசனும் ஏதும் யோசிக்காமல் “ப்ராமிஸ்” என்றான்.

“தான்க் யூ வெரி மச்”

“ஐயய்யோ. உனக்கு தேங்க்ஸ் கூட எப்படி சொல்லணும்ன்னு தெரியலை பாரேன்” என்றான்.

“அப்படியா” என்ற இனியா பக்கத்தில் இருந்த பிளவர் வாஷை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வர, அவனோ ஓடினான்.

சிறிது நேரம் அந்த அறைக்குள் இருவரும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் இளவரசனின் செல் போன் அலற, அவன் அதை நோக்கி சென்றான்.

போன் பேசிவிட்டு வந்த இளவரசன் “ஒரு சின்ன ப்ராப்லம் டா. நான் இப்பவே சென்னைக்கு கிளம்பணும்” என்றான்.

“என்ன இப்படி சொல்றீங்க. நாளைக்கு நான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சேனே. ப்ளீஸ் போகாதீங்க” என்றாள் சோகமாக.

“இல்லடா. அங்க கொஞ்சம் ப்ராப்லமாம். நான் போயி தான் ஆகணும்”

“ம்ம்ம்.” என்று யோசித்தவாறு “சரி. எல்லாருமே அப்ப கிளம்ப வேண்டியது தானே, எங்களுக்கு மட்டும் இங்க என்ன வேலை.”

“இல்ல. உங்க மாமாக்கு நாளைக்கு இங்க அந்த கம்பெனில சின்ன வேலை இருக்கு. சோ நீங்க என் கூட கிளம்பி வர முடியாது. நான் இப்பவே கிளம்பி ஆகணும்”

“என்ன இளா இப்படி சொல்றீங்க என்றவள் ஐடியா. அப்ப நான் மட்டும் உங்க கூட வரேன்” என்றாள் ஆர்வமாக.

“நோ வேண்டாம்.”

“ஏன். ப்ளீஸ். நானும் வரேன்ப்பா”

“இல்லை. இன்னும் எந்த பிரச்சனையும் சால்வ் ஆகலைன்னு தெரியும் இல்லை. நீ எப்படி என் கூட வர முடியும். உங்க அக்கா இல்லாம நீ மட்டும் வந்தா அத்தை என்ன சொல்வாங்கன்னு யோசிச்சி பார்த்தியா”

“அதுக்குன்னு இப்பவேவா கிளம்ப போறீங்க. லேட் நைட் ஆகிடுச்சி”

“பரவால்ல. நான் காலைல அங்கே இருந்தே ஆகணும். சோ நான் கிளம்பறேன். உங்க அக்கா, மாமா எல்லாம் தூங்கிட்டாங்க. இப்ப நான் அவங்களை எழுப்பறது சரியா இருக்காது. சோ நீ சொல்லிடு. ஓகே” என்றவாறு பேக் செய்ய ஆரம்பித்தான்.

அவன் பேக் செய்ய செய்ய அதை பார்த்துக் கொண்டிருந்த இனியாவிற்கு தான் வருத்தமாக இருந்தது.

பேக் செய்து விட்டு திரும்பிய இளவரசன் இனியாவின் சோர்ந்த முகத்தை கண்டான்.

“என்னடா” என்றான்.

“எனக்கு உங்க கூட வரணும் போல இருக்கு”

“ஐயய்யோ. என்னென்னவோ அதிசயம் எல்லாம் நடக்குது. முன்னாடி எல்லாம் நான் கம்பெல் பண்ணி கூப்பிட்டா கூட யாரோ என் கூட வர மாட்டங்க. பட் இப்ப அவங்களே வந்து என் கூட இருக்கணும் போல இருக்குன்னு சொல்றாங்களே”

“போதும் உங்க காமெடி எல்லாம். நிஜமாவே எனக்கு உங்களை இப்படி தனியா அனுப்ப பிடிக்கலை. அதுவும் இல்லாம உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்ன்னு ஆசையா இருக்கு”

“ஹ்ம்ம். எனக்கும் ஆசையா தான் இருக்கு. பட் இதுல என்னென்ன பிரச்சனை இருக்கு தெரியுமா. அதனால இதெல்லாம் வேண்டாம்” என்றான் சிரித்துக் கொண்டே.

“என்ன பிரச்சனை”

“இல்ல. லேட் நைட் வேற. பக்கத்துல நீ வேற இருந்தினா. என் மூட் எப்படி சேன்ஜ் ஆகும்னு தெரியாது. அப்புறம் எப்படி சேபா போக முடியும். அதான்” என்றான் மந்தகாசமாய் சிரித்துக் கொண்டு.

“உங்களை” என்றவாறே திரும்ப அவள் அவனை துரத்திக் கொண்டு வந்தாள்.

சில நிமிடங்கள் அவளை ஓட விட்டவன் கடைசியில் நின்று அடிக்க வந்த அவள் கையை பிடித்து “ஓகே. இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும். ஓகே வா” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.