(Reading time: 24 - 47 minutes)

ங்களை” என்ற இனியா பக்கத்தில் ஏதாவது கிடைக்கிறதா என்று வழக்கம் போல் தேட ஆரம்பித்தாள்.

“அடிப்பாவி. வீட்ல மாதிரி கைக்கு அடிக்க எதாச்சி கிடைக்குதான்னு தேடுறியே, உனக்கே இது நல்லா இருக்கா. ஏதும் பண்ணிடாதம்மா. ஏதோ எனக்கு இருக்கற ஸ்டேடஸ கொஞ்சம் காப்பாத்தி குடும்மா”

“ம்ம்ம். அந்த பயம் இருக்கட்டும். ஒழுங்கா சீக்கிரம் வந்து சேருங்க. நான் உங்களை எதிர்பார்த்திட்டே இருப்பேன். மாக்ஸிமம் டூ டேஸ். ஓகே”

“டூ டேஸ்ல வரர்து கொஞ்சம் கஷ்டம் தான். பட் நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர ட்ரை பண்றேன். ஓகே”

“கொஞ்சம் சீக்கிரம் வாங்க. ப்ளீஸ்”

“நான் தான் சொன்னேன்ல முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வரேன்னு. அதுக்காக போன வேலை முடியாம வர முடியுமா. சொல்லு”

“சரி சரி.”

ளவரசன் சென்ற பிறகு இனியாவிற்கு தான் ஏதோ பொழுதே போகாதது போல் இருந்தது.

ஏன் தனக்கு இப்படி இருக்கிறது. இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லையே என்று எண்ணி எண்ணி குழம்பிக் கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிடலுக்கு போய் விட்டு தன் அக்காவின் வீட்டிலேயே இருந்தாள். அங்கு போனால் அபியுடன் விளையாடியாவது தன் மனதை மாற்றி கொள்ளலாம் என்று. ஆனால் அவளால் அதுவும் இயலவில்லை.

ஆனால் அவள் தாயால் தான் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியலவில்லை.

வலிய போய் அன்னையே பேசினாலும், அவளால் சரியாக பேச இயலவில்லை. அவள் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. இருந்தாலும் அவளால் அவள் அன்னை என்று மட்டுமில்லாமல் யாரிடமும் அவளால் சரியாக பேச இயலவில்லை.

அவளின் நினைவு எல்லாம் இளவரசன் மட்டுமே இருந்தான்.

அவனிடம் இருந்து எப்போது போன் வரும் என்பது மட்டும் தான் அவளின் எண்ணமாக இருந்தது.

வள் கவுன்சல்லிங்கில் இருந்ததால் இவள் மொபைல் சைலென்ட்டில் இருக்கும் போது அவன் அழைத்திருப்பான். இவள் பார்த்து அழைக்கும் போது அவனால் எடுக்க இயலாது. கடைசியாக இரவும் வெகு நேரம் ஆகிறது என்று அவன் அழைப்பதில்லை. மெசேஜ் மட்டும் வந்திருக்கும்.

இரண்டு நாட்களாக இதே தான் நடக்கிறது.

இன்னைக்கு மட்டும் இப்படி ஆகட்டும் பார்த்துக்கறேன். நல்ல வேலை இன்னைக்கு சனிக்கிழமை. சீக்கிரம் வந்துடுவோம். அதனால எனக்கு போன் வரும் போது நான் அட்டென்ட் பண்ணாம இருக்க மாட்டேன் என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் இளவரசனால் இன்று முழுவதுமே போன் செய்ய இயலாமல் போனது. இனியா போன் செய்யும் போதும் அவன் எடுக்கவில்லை.

இனியா மிகவும் ஒடிந்து போனாள். இன்னைக்கு மட்டும் போன் பண்ணட்டும். நைட் இருக்கு கச்சேரி. இன்னைக்கு நான் தூங்கறதா இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

ன்று இரவு 12.00க்கு இளவரசன் “சாரி டா. இன்னைக்கு மொபைல் இங்கேயே வச்சிட்டு போயிட்டேன். வெரி சாரி. நாளைக்கு கன்பார்மா பேசறேன். குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று மெசேஜ் செய்தான்.

இனியா இதற்காக தானே காத்திருந்தேன் என்று எண்ணியவாறு உடனே போன் செய்து விட்டாள்.

இளவரசனுக்கே கூட ஆச்சரியம் தான்.

போனை எடுத்து உற்சாகமாக “ஹாய் செல்லம் என்றான்”

“ம்க்கும். இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”

“வேற எதுக்கு டீ குறைச்சல்”

“என்ன சார் ரொம்ப ஓவரா பேசறீங்க”

“ஆமா என் செல்லம் எனக்காக முழிச்சிட்டு இருந்து பேசறா. இருக்காதா பின்ன”

“போதும் போதும். இந்த செல்லம் கொஞ்சனது எல்லாம். நான் என்ன சொன்னேன். போயிட்டு சீக்கிரம் வர சொன்னா இப்படி வராம லேட் பண்ணதும் இல்லாம என் கூட பேச கூட இல்லாம என்னை இப்படி அலைகழிக்கறீங்க இல்ல”

“ஹேய் இல்லடா. இங்க ரொம்ப வொர்க். நான் சாப்படரதுக்கு முன்ன எப்படியும் உன் கிட்ட பேசிடனும்ன்னு போன் பண்ணா நீ அப்ப தான் வொர்க்ல இருக்கிற. என் கால் எடுக்க மாட்ற. சோ நான் என்ன பண்ணுவேன். சொல்லு”

“ஆமா சாப்பிடறதுக்கு முன்னாடி போன் பண்ணாராம். எப்ப மதியம் சாப்பிடனும் சார். நாலு மணிக்கு இல்லை. அத முதல்ல தெரிஞ்சிக்கோங்க. இதுவே பெரிய குற்றம். இதுக்காகவே இனிமே உங்களை வெளி ஊருக்கு அனுப்ப மாட்டேனாக்கும் தெரிஞ்சிக்கோங்க”

இளவரசன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“என்ன சிரிப்பு”

“இல்ல நீ நேர்ல இத என் கிட்ட சொன்னா எப்படி கைய கைய ஆட்டிக்கிட்டு சொல்லுவன்னு யோசிச்சி பார்த்தேன். அதான் சிரிப்பு வந்துடுச்சி”

“வரும் வரும். ஐயாவுக்கு என் கிட்ட பேசலன்னு பீலிங்க்ஸ் எதுவும் இல்லை. நானே பேசும் போது மட்டும் இப்படி கிண்டல் பண்ண வேண்டியது”

“ஏண்டி யாருடி சொன்னது. உன் கிட்ட பேசாம எனக்கு எந்த கஷ்டமும் இல்லைன்னு. பட் என்ன பண்றது. இந்த வொர்க் முடிஞ்சா தானே அங்கே சீக்கிரம் வர முடியும்ன்னு பல்ல கடிச்சிட்டு இருக்கேன் தெரியுமா” என்றான்.

அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அமைதி ஆக்கியது.

“என்ன மேடம் இப்ப பேசாம அமைதியாகிட்டீங்க”

“ஒன்னும் இல்லை”

“என் செல்ல குட்டிக்கு என்னாச்சி. ஏன் அமைதியாகிட்டா”

“இளா. நீங்க இல்லாம ஒண்ணுமே பிடிக்கலை இளா. என்னண்ணே தெரியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியுமா”

“தெரியும் டீ பொண்டாட்டி”

இனியாவிற்குள் ஏதோ ஒரு பரவசம் தோன்றியது.

“இளா”

“திரும்பவும் அழுக ஆரம்பிச்சிடாதடீ அழுமூஞ்சி”

“ரொம்ப தான்”

“ம்ம். ரொம்ப தான் ஆசையா இருக்கு உன்ன பார்க்கறதுக்கு. ஆனா எங்கே முடியுது”

“இளா. எனக்கும் உங்களை பார்க்கணும் போல இருக்கு. எப்ப வருவீங்க இளா”

“சீக்கிரம்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.