(Reading time: 24 - 47 minutes)

போடா. உன் கிட்ட போய் சொன்னேன் பாரு. எனக்கு வேணும்”

“சரி சரி. விடு செல்லம்.”

“போங்க போனை வைங்க. இப்ப கோவமா போறேன். இதையே நினைச்சி பீல் பண்ணுங்க”

“அடிப்பாவி. இப்படி எல்லாமா பழி வாங்குவ”

“ஆமா இப்படி தான் பழி வாங்குவேன்”

“ஹிஹிஹி. போடி போடி. உன் பழி வாங்கலும் உன்னை மாதிரியே சின்ன புள்ள தனமா இருக்கு”

“அப்படியா. உங்களை ஒரு நாள் பெருசா பழி வாங்கலை என் பேரு இனியா இல்லை”

“வேணாம் செல்லம். இந்த பேரே நல்லா தான் இருக்கு. வேற பேரு எல்லாம் வேணாம்.”

“கொழுப்பு ரொம்ப ஏறிடுச்சி. பார்த்துக்கறேன். ஏற்கனவே லேட் ஆகிடுச்சி. கீழ போறேன். சொன்ன மாதிரி கோபமா தான் போறேன். நல்லா பீல் பண்ணுங்க”

“போடி போடி. எனக்கு இந்த பேஸ் எல்லாம் நியாபகம் இருக்காது. நேத்து வீடியோ சேட்ல வெட்கப்பட்டியே அது தான் நியாபகம் இருக்கும்.”

ஏதும் பேச இயலாதவளாக “போங்க. நான் போறேன்” என்றாள்.

“ஹேய் ஹேய் பொண்டாட்டி. ஒரு நிமிஷம்”

“என்ன. சீக்கிரம் சொல்லுங்க”

“ஐ லவ் யூ டீ பொண்டாட்டி”

“ம்ம்ம்”

“என்னடி வெறும் ம்ம்ம் மட்டும் சொல்ற”

“பின்ன என்னவாம். எனக்கு ஏற்கனவே கீழ போக மூட் இல்லை. இப்ப சுத்தமா மூட் இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சி போகவா”

“அடிப்பாவி. நான் இப்ப தான் சாப்பிட போறேன். சரின்னு உன் கிட்ட பேசிட்டிருக்கேன். எனக்கு டைம் இல்லப்பா”

“போங்க. நான் நிஜமாவே கோவமா போறேன்” என்று சொல்லி கட் செய்து விட்டு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கீழே வந்திருந்தாள்.

ஆனால் அம்மாவின் முகத்தை வைத்து அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று ஊகிக்க இயலவில்லை. எனவே சாப்பாட்டை கையால் அளந்துக் கொண்டே அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இனியா தன்னையே பார்ப்பதை கண்ட லக்ஷ்மி “என்னடா. சாப்பிடாம ஏன் என் முகத்தை பார்த்திட்டிருக்க” என்றார்.

இப்போது தான் இனியாவால் சரியாக மூச்சு விட முடிந்தது.

“ஒன்னும் இல்லம்மா. டிபன் நல்லா இருக்கு” என்றாள்.

லக்ஷ்மிக்கு ஒரே சந்தோஷம். இத்தனை நாளாக ஒழுங்காக பேசாமல் இருந்த மகள் இன்று வலிய வந்து தன் சாப்பாட்டை நன்றாக இருக்கிறது என்று கூறவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

முகத்தில் புன்னகையுடன் “இரு. நான் சட்னியும் செஞ்சிருக்கேன். எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே போனார்.

“அப்பாடா” என்று இனியா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

அப்போது சரியாக ஸ்வேதா உள்ளே வந்தாள்.

வந்ததும் நேராக இனியாவிடம் வந்து “அக்கா. நான் நேத்து நைட் உங்களுக்கு போன் பண்ணேன். லைனே கிடைக்கலை என்றாள்”.

இனியா அவசரமாக திரும்பி சமையலறையை பார்த்தாள்.

சரியாக லக்ஷ்மி சட்னியுடன் வந்துக் கொண்டிருந்தார்.   

தொடரும்

En Iniyavale - 22

En Iniyavale - 24

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.