(Reading time: 24 - 47 minutes)

 

" ஹ்ம்ம் தல கலக்கிட்டாரு ! " என்றான் ரகு .....

" சரி ரகு இப்போ தோட்டத்துல என்ன நடந்துச்சுன்னு சொல்லு "

(இங்க ரகு நடந்ததை சொல்லும்போது நம்ம சுபி கிட்ட ஜானுவும் என்ன நடந்துச்சுன்னு சொன்னங்க .... நாம இப்போ தமிழ் சினிமால வர்ற மாதிரி ரெண்டு சீனையும் ஒண்ணா பார்க்க போறோம் ..காம் ஆன்!)

ரகு : ஆபீஸ் நம்பர்ல இருந்து கால் வந்திச்சு .....நான் லைன் கிடைக்கலன்னு நடந்துகிட்டே பேச ட்ரை பண்ணேன்.

ஜானு : நான்  உனக்கு பிடிக்குமேனு முல்லை பூ பறிச்சு தோட்டத்துல இருந்த ஊஞ்சல்லே உட்கார்ந்து சரம் பின்னிட்டு இருந்தேன்...

சுபி : பட் நாங்க வந்த இடத்துல ஊஞ்சல் இல்லையே!

ஜானு : மக்கு அன்னைக்கு தோட்டத்துக்குள்ள ஒரு குட்டி ஊஞ்சல் இருந்ததே மறந்துட்டியா ?

அர்ஜுன் : சரி அப்பறம் என்ன நடந்துச்சு ?

ரகு : கால் கட்டாச்சு ..... நான் மறுபடி ட்ரை பண்ணிகிட்டே உங்க தோட்டம்  பக்கம் நடந்து வந்தேன் .... அப்போ மறுபடி கால் வந்திச்சு ........

ஜானு : அப்போ ஒரு பாட்டு சத்தம் கேட்டுச்சு..அது உங்க அண்ணா போனோட ரிங் டோன்.....

ரகு : அப்போதான் ஜானகி "ராம் " நு சொல்லிகிட்டே ஓடி வந்தாங்க

அர்ஜுன் : உங்க ரிங் டோன் என்ன ? ( இதை கேட்ட அர்ஜுனனின் குரல் இறுகி இருந்தது ?)

சுபி : அது என்ன பாட்டுடி ?

ரகு & ஜானு  : சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா !

அர்ஜுன் : ஹ்ம்ம் பாரதியார் பாட்டு ...... அவ ஏன் அழுதான்னு இப்போ புரியுது ........

சுபி : நல்ல பாட்டுதானே ? பாரதியார் பாட்டு .. ரஹ்மான் சார் மியூசிக் ல ஹரிஹரன் பாடிருப்பார்....அண்ட் ரகுவுக்கு பாரதியார் கவிதைன்னா உயிர்..... இதுக்கு ஏன் அழுதே நீ ?

ஜானகி  & அர்ஜுன் : ராம் !

மற்றவர்   : யாரு ராம் ???????

ரகுராம் கிருஷ்ணனின் கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனித்த அர்ஜுன் ஒரு பெருமூச்சு விட்டு , ஜானகியின் பற்றி சொல்ல ஆரம்பிக்க , ஜானகியோ மறுபடி அழ தொடங்கி விட்டாள் ....

" ஜானு ..... உனக்கு சொல்ல கஷ்டமா இருந்தா சொல்ல வேணாம் பட் மனசு விட்டு பேசுனா யு வில் பீல் பெட்டெர் "

" ம்ம்ம்ம் சொல்லுறேன் சுபி ..... எனக்கும் மனசு விட்டு பேசணும் போல இருக்கு " என்று கண்ணீரை துடைத்து விட்டு பேச ஆரம்பித்தாள்....

( நீங்க எல்லாரும் கேட்ட பிலாஷ் பேக்  இதோ ....  இதை அர்ஜுன், ஜானு சொல்ற மாதிரி இருந்தா குழப்பம் ஆகிடும்ன்னு கதை மாதிரி எழுதி இருக்கேன் ... ஐ மீன்  கதைக்குள்ள கதை )

சில மாதங்களுக்கு முன்பு,

" ஜானு ....மணி ஆச்சு டா...எழுந்திரிக்கலையா ? "

" ஐயோ அப்பா இன்னும் அஞ்சு நிமிஷம் பா.........."

" அஞ்சு நிமிஷம் ஓவர் ஜானு குட்டி "

" சரி அப்போ ரெண்டு நிமிஷம் பா "

" சரி டா நீ தூங்கு .....  கவியா, தேவி  இன்னைக்கு அந்த பெயிண்டிங் எக்சிபிஷன்னுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் போய்ட்டு வாங்க ..ஜானு வர மாட்டா" என்றார் சண்முகம் , ஜானகியன் தந்தை ....

" அச்சோ ரெண்டு பிசாசுங்களும் வந்துருச்சா ? ஏன்பா முன்னாடியே சொல்லல? " என்று துள்ளி எழுந்த மகளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவர் ,

" அவங்க ரெண்டு பேரும் நிஜம்மா வரும்போது சொல்லிக்கலாம்னுதான் இப்போ சொல்லலைடா " என்றார்.

" வர வர உங்களுக்கு குறும்பு ஜாஸ்தியா போச்சு பா. அவங்க வரும்போது எழுப்பி இருக்கலாம்ல .... இப்போ என் தூக்கம் போச்சு " என்று குறை சொன்னவள் தன் தந்தை கையிலிருந்த காப்பியை எடுத்து குடிக்க

" அய்யே உனக்கு இதே வேலையா போச்சு மா....  போய் முதல்ல குளிச்சிட்டு வா ...நான் தோசை சுட்டு வைக்கிறேன் " என்றபடி நகர்ந்தார்.... தன் தந்தையை பார்த்துகொண்டிருந்த ஜானகி வழக்கம் போல மானசீகமாக இப்படி ஒரு தந்தை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்... சிறு வயதிலேயே தாயை பறிக்கொடுத்தவளுக்கு தாயுமனவராய், நல்ல நண்பனாய் இருந்தவர் சண்முகம். தந்தையை நினைத்து முகம் கனிந்தவள் வாசலில் தன தோழிகளின் அரவம் கேட்க குளியறைக்கு ஓடி விட்டாள்...

தனக்கு பிடித்த  கருநீல நிற புடவை அணிந்து, நீண்ட கூந்தலை எப்போதும் போல் நுனி வரை பின்னலிடாமல் விரித்து விட்டு, மிதமான ஒப்பனையில் தேவதையாய் மிளிர்ந்தாள் ஜானகி...

அழகே ஓவியமாய் இருந்த மகளை பார்த்து மனதிற்குள் பூரித்து கொண்டார் சண்முகம்...

" என்னப்பா என்னையே வெச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருக்கீங்க? "

" நீ அப்படியே உன் அம்மா சாயல் டா " என கண் கலங்கினார் .... பேச்சை மாற்றுவதற்காக தன தோழிகளிடம் பார்வையை திருப்பியவள்,

" ஏண்டி வாயில தான் தோசை இருக்கே ? அப்பறம் என்னை வேற ஏண்டி திங்குற மாதிரி பார்க்குறிங்க? " என்றாள்....

" ஹ்ம்ம்ம்ம் என்ன அழகு எத்தனை அழகு " என்று கோரசாக பாட

காவியாவோ " ஹ்ம்ம் அங்கிள் நான் மட்டும் பையனா இருந்த உங்க பொண்ணை உங்க கண்முன்னாடியே தூக்கிடு போயி  கல்யாணம் பண்ணிக்குவேன் " என்றாள்..

" நீ ஏன்மா தூக்கிட்டு போகணும் ? ஜானுவுக்கு பிடிச்சா நானே கட்டி  வெச்சிட போறேன் ... அவளுக்கு யாரையாச்சும் பிடிச்சா என்கிட்ட சொல்லுங்க " என்றவர் முடிபதற்குள்

" யாரு இவளா ? இவ பாரதி கண்ட புதுமை பெண் அங்கிள்..... மேடம் நிறைய கண்டிஷன் வெச்சிருக்காங்க .... அதுல ரூல் நம்பர் ஒன்னே அவளோட ஹீரோவுக்கு பாரதியார் கவிதை தெரிஞ்சிருக்கனுமாம் " என்றால் தேவி .

" என்ன ஜானு இப்படிலாம் ரூல்ஸ் இருக்கா ? "

"  அதெல்லாம் சும்மா அங்கிள் ... அவ உங்களை விட்டு போக கூடாதுன்னு  தான் இப்படிலாம் ரூல்ஸ் வெச்சிருக்கா " என்று தன் தோழியை காவியா பார்க்க

" அட அதெல்லாம் இல்ல பா..... இந்த லூசுங்க இப்படிதான் பேசுவாங்க ..... எனக்கு யாரையும் புடிச்சா நானே சொல்லுறேன் " என்று அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்து தன் உள்மனதின் கேள்விகளை தொடக்கி வைத்தாள்...

( நான் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பாவை யாரு பார்த்துப்பா ? அம்மா இறந்தப்போ அப்பா அவருக்காக ஒரு துணையை தேடாமல் எனக்காக வாழ்ந்தாரே? நானும் அந்த மாதிரி வாழ முடியாதா ? நான் பெண்ணியம் பேசுற பெண் இல்லைதான் ..ஆனா அதே நேரம் எல்லா ஆண்களும் நம்ம அப்பா மாதிரி இருப்பாங்களா? தெரியாத ஒருத்தரோடு எப்படி வாழ முடியும் ? பாரதியார் கண்ட புதுமை பெண்ணாக  நான் இருந்த அப்போ எனக்காக பாரதியார்தான் பிறந்து வரணும் ) என நகைத்தவள்..... முருகா , அப்படி யாரும் என் லைப் ல வரவேணாம் ... எனக்கு என் அப்பா போதும் என வேண்டிகொண்டாள்..

அவளின்  வேண்டுதல் அன்றே பலிக்காமல் போகும் என்று அவள் அறியவில்லை..... அறிந்திருந்தால் ???

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.