(Reading time: 24 - 47 minutes)

 

விய கண்காட்சி ,

இங்கு வருவதற்கு முடிவு செய்தது ஜானகியாக இருந்தாலும் , ஏனோ அங்கு சென்றதும் அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை...அஷ்டகோணலாய் பார்த்தவளை கண்டு தோழியர் இருவரும் சலித்து கொள்ள,

" நீங்க போய் பாருங்கடி ... எல்லாம் போர் அடிக்கிது ... மாடர்ன் ஆர்ட் நு சொல்லி எல்லாம் வரைஞ்சிருகாங்க,,, எனக்கு எதுவுமே கேட்சியா ஈர்க்கல " என்றவள் எதிரில் இருந்த  ஓவித்தை பார்த்து அசந்துவிட்டாள்...

(நம்ம ஜானகியையே மயக்கிய அந்த ஓவியம் எப்படி இருந்துச்சுனு நான் விவரிக்கிறேன் ...நீங்களே இடையிலே மானே தேனே பொன்மானே போட்டு கற்பனை பண்ணி பார்த்துகோங்க )

ந்த ஓவியத்தில் மொத்தம் இரண்டு காட்சிகள். அழகான செண்பக தோட்டத்தில் காதலன் ஏக்கத்துடன் அமர்ந்திருக்க, அவன் பார்வையில் விரியும் காட்சியாய் அங்கே ஒரு மாளிகை. மாளிகையில் காதலி சுடர்விளக்கு அருகில் அமர்ந்து, எதையோ சிந்திக்க, அவளின் சிந்தையில் தூண்டிலில் மாட்டிய ஒரு புழுவின் காட்சி இருந்தது ....

இருக்கும் இடம் மறந்து " ஹேய் பாரதியார் கவிதையை வெச்சு இதை வரைஞ்சிருகாங்க டீ" என ஜானகி துள்ளி குதிக்க அங்கிருந்த பலரின் பார்வை அவள் மீதே திரும்பியது. அந்த ஓவியத்தை வரைந்த ஸ்ரீராமும் அங்கே அவளின் முகபாவனையை தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டிருந்தான்.....  ஜானகியோ சுற்றி நடப்பதை மறந்து வழக்கம்போல் தனது தோழிகளிடம் அந்த ஓவியத்தின் கவிதையை விளக்கி சொல்லிகொண்டிருந்தாள் ....எத்ததனைmani நேரம் அங்கிருந்தார்களோ ? காவியாவின் தந்தை அவர்களை அழைத்து செல்ல வந்துவிட,  ஏதோ உற்ற தோழியை பிரிவதைபோல் அந்த ஓவியத்தை  ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே வீடு திரும்பியவளை அத்தனை மணி நேரமும் தூரத்தில் இருந்து ரசித்து கொண்டிருந்தான் ஸ்ரீராம் ....

றுநாள்.

" ஜானுமா உனக்கு பார்சல் "

" என்னம்மா இது ? "

"அப்பா இதுதான் பா நேத்து நான் சொன்ன அந்த ஓவியம் .... ஆனா இப்போ  அந்த கவிதையை கூட பக்கத்துலேயே எழுதி இருக்காங்க பாருங்க .........

இது பாருங்க இந்த பையன் சொல்ற கவிதை

தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே,

பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே

பாங்கியோ டென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!

மார்பு துடிக்கு தடீ!

பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே

பாவை தெரியு தடி!

இது அந்த பொண்ணு  சொல்ற கவிதை :-

தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே

சுடர் விளக்கினைப் போல்,

நீண்ட பொழுதாக -எனது

நெஞ்சத் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை

கொண்டு மிகவும் நொந்தேன்;

வேண்டும் பொருளை யெல்லாம்-மனது

வெறுத்து விட்ட தடீ! "

" இதெல்லாம் சரி தான்மா ...ஆனா இதை யாரு உனக்கு அனுப்பினது ? "

" தெரிலப்பா இங்க ஒரு நம்பர் இருக்கே ? "

" கொடு போன் போட்டு பார்ப்போம் .." என்றவருக்கு அந்த எண் மிக பரிட்சயமாக இருந்தது  !

" இது நம்ம ஸ்ரீ நம்பர் ஆச்சே மா ! "

" ஆமா மாமா என் நம்பர் தான் " என்றபடி உள்ளே நுழைந்தாய் ஸ்ரீராம் .

சீகர புன்னகையுடன் அந்த வீட்டுக்குள் மட்டும் அல்ல ஜானகியின் மனதிலும் காலடி எடுத்து வைத்தான் அவளின் ராம் ! ( நம்புங்க பாஸ் நம்ம சுபியின்  ரகுராம் அண்ணா ரொம்ப..... நல்லவரு !)

" அடடே மாப்பிளை எப்போப்பா இங்க வந்திங்க ? ஒரு வார்த்தை கூட சொல்லலையே ? இப்போ எங்க தங்கி இருக்கீங்க.... ஜானு இவருதான் ஸ்ரீராம் ...உன் அம்மாவோட அண்ணா பையன் ..ஸ்ரீராம் ..ஞாபகம் இருக்கா ? " என்று கண்ஜாடை காட்ட .......

(மகிலா அத்தையோட மகன் ஸ்ரீராம் இவர்தானா? ஒரு 5  வர்ஷத்துக்கு முன்னாடி விபத்துல அம்மா அப்பா ரெண்டு போரையும் பறிகொடுத்திட்டு தனியாவே இருந்தானே ...அவன் தானே இவன் ? ஏனோ அவளுக்கு தாய்மை உணர்வு மேலோங்கியது .... முதல் தடவை பார்த்த உணர்வே இல்லாமல் அவனை அரவணைத்துக்கொள்ள துடித்த அவள் மனதை கண்டு திடுக்கிட்டவள் , சமாளிக்கும்படி புன்னகைத்தாள்)

" வாங்க அத்........................... மாமா "

அவள் " அத்தான் " என்று அழைக்க வந்ததை கண்டுகொண்டவன் அவள் புறம் ஆழமான  பார்வை ஒன்றை வீச தடுமாறிப்போனாள் ஜானகி...

" நான் ஒரு ரெண்டு நாள் முன்னாடிதான் இங்க வந்தேன் மாமா ...உங்களுக்குத்தான் தெரியுமே  எனக்கு ஓவியம் வரையுரதுன்னா பிடிக்கும்னு ... அது விஷயமா தான் வந்தேன் "

" அப்போ இந்த ஓவியம் ? "

" நான்தான் வரைஞ்சேன் ஜானகி! "

" உங்களுக்கு பாரதியார் கவிதை "

" மூச்சு மாதிரின்னு வெச்சுக்கோயேன்"

அவளுக்கு  அந்த பதில் தேனாய் இனிக்க சண்முகம் நேற்று அவளின் தோழி சொன்னது ஞாபகம் வந்தது.... யோசனையுடன் இருவரையும் பார்த்தவர் அதை பற்றி எதையும் கேட்கவில்லை ... அதே நேரம் அவர்களை கண்காணிக்கவும் மறக்கவில்லை!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஜானகி - ஸ்ரீராமின் உறவு உணர்வில் கலந்து வளர்ந்துகொண்டே வந்தது...

அத்தை மகன் என்ற உறவா? நேர்மை நிறைந்த அவனது குணமா? வசீகரிக்கும் அவனது தோற்றமா ? அல்லது தனிமையில் வாழ்பவன் மீது கொண்ட கருணையா ? ஏதோ ஒன்று அவளை அவனின்பால் ஈர்க்க வைத்தது.  அப்படியிருக்க ஒரு நாள்,

" ராம் ..."

" சொல்லுடா ...."

" ரெண்டு நாள் ராம் "

" ரெண்டே ரெண்டு நாள் தான் டா"

" உங்க ஆபீஸ்ல மனுஷங்க வேறு யாருமே இல்லையா .....கண்டிப்பா நீங்கதான் போகனுமா ? "

" ஆமா கண்ணம்மா " ( நம்ம பாரதி பிரியர்கள் காதலில் " கண்ணம்மா " என்ற வார்த்தைக்கு விலைமதிப்பே இல்லை... அவன் கண்ணம்மா என்றழைத்ததும் அனைத்தும் மறந்தவளாய் அவன் மட்டும் மனதில் வியாபிக்க அழுதே விட்டாள் ஜானகி "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.