(Reading time: 24 - 47 minutes)

 

" மா டீ  ..... ஐ லவ் யு டி .... இன்னொருதடவை இப்படி மடத்தனமா பண்ண மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு . எனக்கே என்ன ஆனாலும் நீ தப்பான முடிவு எடுக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு.... "

" ஹ்ம்ம் ப்ராமிஸ் "

" அது  ! அழகுடி அழு மூஞ்சி நீ " என்றவன் அவளை ஆரத்தழுவினான் ....

அவன் வாங்கிய சத்தியம்தான் இன்றும் ஜானகி வாழ்வதற்கு காரணம் ஆனது ... எந்த நேரத்தில் அவன் அப்படி ஒரு வாக்கு கேட்டானோ அன்றே அவன் விதியும் அவ்வாறே விதிக்கபட்டத்தை யாரும் அறியவில்லை .

ஸ்ரீராமின் தயார் ஸ்தானத்தில் பானுமதி இருக்க ஜானகி- ஸ்ரீராமின் நிச்சயம் எளிதான முறையில் இனிதே நடந்து முடிந்தது......

தன்பிறகு,

ஜானகி அவனை பார்த்தது அவனின் மரணப்படுக்கையில் ..... சாலை விபத்தில் பெற்றோரை இழந்தவனின் விதியும் சாலை விபத்திலேயே முடிவடைய போகின்ற இறுதி நிமிடங்கள் .... மருத்துவமனை,

அவன் கைகளை பிடித்து கதறினாள் ஜானகி ...

" ஜானு .... கண்ணம்மா ... என்னால சரியா பேச முடிலடி .... நீ அழறதை என்னால பார்க்க முடில டா .. கொஞ்சமாச்சும் நீ அழறதை நிறுத்துனா தான் நான் பேசுவேன் "

(அந்த நேரத்தில் கூட என்னுடைய கண்ணீருக்காக நோகிரானே ? இவன் இல்லமால் நான் என்ன பண்ண போறேன் இறைவா ) என்று மனதிற்குள் கதறியவள்...கேவலுடன் அவனை பார்த்தாள்..

" ஜானு எதுக்கு அழுற ? உன் ஸ்ரீராம் உன்னை விட்டு போறான்னா ? என்னை பார்த்து சொல்லுடி..என்னால உன்னை விட்டுடு போக முடியுமா ? போறது என் உடல்... உயிர் இல்ல..... "

" ராம் ....நானும் செத்துடுறேன் ராம் ...உங்க கூடவே வந்திடுறேன் ....என்னை விட்டுடு போகாதிங்க"

" முட்டாள் மாதிரி பேசாதே ஜானு ... உயிர் உனக்கு அவ்வளோ ஈசியா போச்சா ? என் கடைசி நிமிஷத்துல கூட என்னால உன்னோட வாழ முடியலையேனு உயிருக்காக போராடுறேன் ... எனக்குத்தான் தெரியும் அதோட அருமை ... நீ வாழனும் எனக்காக வாழனும் ... நான் உன் கூடத்தான் இருப்பேன் ... எதாச்சும் ஒரு உயிர் மூலமா, யாரோட ஒரு அன்பு மூலமா இந்த ஸ்ரீராம் உன் லைப் ல மறுபடி வருவேன்... மறுபடி சாகுறேன்னு சொல்லாதே ...நான் போயிட்டேன்னு என் சத்தியமும் போய்டாது ... எனக்கு ப்ராமிஸ் பண்ண மாதிரி நீ உயிரோடு இருக்கணும் ...வாழனும் ...நான் உன்கிட்ட வருவேன் " என்றபடி அவன் கை நீட்ட அவள் அவனுடன் கரம்கோர்த்து தன்னவனின் மார்பில் சாய்ந்தாள்...

சென்று விட்டான் .... அவள் மீது காதல் கொண்டவன், அவளை நிழலாய் தொடர்ந்தவன், அவள் மனம் வென்றவன் , அவளில் கரம் பற்றி அவள் காண முடியாத தூரம் சென்றுவிட்டான்....

" பேசாதேடி !..... நான் வாழணும்னு ஆசை படுறேண்டி .... 100 வர்ஷம் சந்தோஷமா உன் கூட வாழணும்னு இருக்கேன் ... செத்தாலும் உன் கைய பிடிசுகிட்டு செத்துறனும்னு இருக்கேன் ... நீ என்னடான்னா? ஒரு நிச்சயத்துக்கே இப்படி சொல்லலாமா ? " அன்று அவன் சொன்ன வார்த்தைகளை மீண்டும் நினைத்து பார்த்தவள் , வெடித்து அழுதாள்...

" ராம் ? இதுக்குத்தான் அன்னைக்கு அப்படி சொன்னிங்காளா ? எப்படி என்னை விட்டுட்டு போக முடிஞ்சது ராம் .... என்னால முடியலையே ராம் !!! "

நாட்கள் அசுர வேகத்தில் நகர, ஜானகி மட்டும் எந்த ஒரு மாற்றமும் இன்றி இருந்தாள்... அவளிடம் இருந்த ஒரே மாற்றம் அவளின் தோற்றம்தான் .. !

" என்னம்மா இது ? குங்குமம் எல்லாம்  வெச்சுகிட்டு ? "

" இது என் ராம்காக அப்பா..... அவர் என் கூட இருப்பேன்னு சொல்லிட்டாரு... எங்களுக்கு மனதளவில் எப்பவோ  கல்யாணம் ஆச்சு .... இனி எல்லாரு கண்ணுக்கும் நான் திருமணமானவள் தான் ..எனக்கு நல்லது பண்ணுறேன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணாதிங்க... கடைசி வரை உங்க பொண்ணா அவரின் மனைவியா இருந்திடுறேன் " என்றவளை தடுக்கும் வழி தெரியாது தவித்தார் சண்முகம் ..சில மாதங்களில் அவரும் இறைவனடி சேர்ந்திட தனக்கென்று ஒரு தனி சிறை போட்டுகொண்டு வாழ ஆரம்பித்தாள் ஜானகி ...  தன் அத்தையின் வார்த்தையை ஏற்று அவர்கள் வீட்டை தஞ்சம் அடைந்தாலும் அவள் மனதளவில் தனித்தே வாழ்ந்திருந்தாள்....

தேற்றும் வார்த்தைகள் இன்றி அமைதியுடன் அமர்ந்திருந்தவர்களை பார்த்து இயல்பு நிலைக்கு வந்தவன் அர்ஜுனன் தான்...

" ஐ எம் சாரி ரகு  .,... அந்த ரிங் டோன் கடைசியா ஸ்ரீராம் அவளுக்காக ஆசையாய் வெச்சது .... அதுனாலேதான் இன்னைக்கு அவ உணர்ச்சி வசப்பட்டுட்டா "

ரகுவிடமிருந்து  எந்த ஒரு பதிலும் வராமல் போக அவன் புறம் திரும்பிய கிருஷ்ணன், தம்பியின் முகம் பார்த்தே அவனின் மனதை அறிந்து கொண்டான் .... 

" இட்ஸ் ஓகே அர்ஜுன் ...எங்களுக்கு புரியுது.... நாங்க .............. நாங்க முதல்ல கெளம்புறோம் ... தப்பா எடுத்துக்க வேணாம் ....."

அதற்குள் ரகு ,

" அர்ஜுன் ...நாளைக்கு நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க ... சண்டே தானே... ஏதும் பிளான் இருக்கா ? "

" அப்படியெல்லாம் இல்லை ரகு பட் திடீர்னு நாங்க வந்தா வீட்டுல உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே ...."

" கண்டிப்பா இருக்காது ..பட் ஜானு இருக்குற மனநிலையில வருவாளா தெரில "

" வருவாங்க அர்ஜுன் ...சுபக்காகன்னு சொல்லுங்க .....எனக்கு எந்த கோபமும் இல்ல அர்ஜுன் ... எதையும் மறைக்காம நேர்மையா பேசுன உங்களை நினைச்சுதான் வியந்துட்டேன்னு சொல்லலாம் .... நாமெல்லாம் ஒரே குடும்பம் தானே இனி ? ஜானுவை மாத்துறதுல எங்களுக்கும் பொறுப்பு இருக்கு .... " என்றவன் அர்ஜுனன் கரங்களை ஆதரவாக தட்டிக்கொடுத்தான்...

" நாங்க வரோம் அர்ஜுன் ...நாளைக்கு பார்க்கலாம் " என்றபடி இருவரும் செல்ல,

" அப்போ சுபி ? "

" அவ ஜானகி கிட்ட பேசிட்டு வரட்டும் ...நீங்க அப்பறமா அழைச்சிட்டு  வாங்க " என்று இருவரும் விடைபெற்றனர்  ...

( ஒரு பிரச்சனையை ஆண் எதிர்கொள்வதற்கும் பெண் எதிர்கொள்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு .... பொதுவாக ஆண் ஏன் இப்படி நடந்தது என்று வருத்தபடுவது அரிது..அதேபோல் பெண்ணும் சரி போனதும் போகட்டும் அடுத்து என்ன செய்யலாம் என்று உடனே தன் மனதை மாற்றி கொள்வதும் அரிது . ) 

இங்க நம்ம மூணு ஹீரோவும் சூழ்நிலையை சீக்கிரம் இயல்பாக மாத்திட்டாங்க .... ஆனா அங்கே ? சூழ்நிலையே தலைகீழாச்சு .... ஜானகி கண்ணீர் வற்றி அமர்ந்திருக்க அவளின் மடியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் சுபத்ரா ...

" சுபி .... பிளிஸ் டீ .... அழாதே மா "

" என்னை மன்னிச்சிரு ஜானு "

" ஹேய் என்னடி நீயென் மன்னிப்பு கேக்குற?"

" இல்லடி நான் ஏன் உன்னை இவ்வளோ லேட்டா மீட் பண்ணேன் ... எத்தனை நாள் நீ இவ்வளோ கவலைகளை மனசுக்குள்ள போட்டு வெச்சு தவிச்சுகிட்டு இருந்திருப்ப ? ஏண்டி நீ உன் பிரண்ட்ஸ் கிட்டலாம் பேசலையா? "

" இல்லம்மா ... அவங்க என்னை பரிதாபமா பார்க்குறது எனக்கு பிடிக்கலே ! "

சட்டென கண்ணீரை துடைத்துவிட்டு அமர்ந்தாள் சுபத்ரா.... அவளை பார்த்து புன்னகைத்த ஜானகி

" பயப்படாதே நீயும் எனக்காக வருந்துறேன்னு சொல்லி நான் உன்னை விட்டு விலக மாட்டேன் ... ஏனோ எனக்கு அப்போ தனியா இருக்க புடிச்சது ... அதான் ...”

“சுபி ... உன் அண்ணா என் மேல கோபமா இருப்பாங்களா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.