(Reading time: 21 - 42 minutes)

சுபத்ராவுக்கு தன் தமையனை எப்படி சமாளிப்பது ? ரகுவின் சீண்டலுக்கு ஆளாவோமா ? என்ற பதட்டம் ..

ஜானகிக்கோ ரகுவிடம் பேச வேண்டுமா? அவன் கோபமாக இருப்பானா? அவர்கள் இருவரையும் எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டம் ..... )

" அப்படின்னா நான் கார்லேயே இருக்குறேன் மாமா "

" ஏன் ஜானு ? "

" இது என்ன புதுசா கேக்குறிங்க மாமா ? நான் இங்கலாம் வர்றதை விரும்ப மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா ? யாரவது பார்த்தா வீண் வம்பு பேசுவாங்க ! "

" எதுக்கு வீண் வம்பு ஜானு "

" தப்பா பேசுவாங்க மாமா ரொம்ப தப்பா பேசுவாங்க ..... என்னுடைய இந்த   கோலம் ( அதாவது திருமணமானவள் மாதிரி  இருக்குறது  ) பார்த்து உங்களையும் என்னையும் தப்ப நினைக்கலாம் ..... நாளைக்கு நமக்கு வேண்டியவங்க நம்மளை ஒண்ணா பார்த்தா அது உங்க ரெண்டு பேரோட வாழ்கையை பாதிக்கலாம் .... அத்தைகூட போறதும் உங்க கூட போறதும் வித்தியாசம் இருக்கு மாமா "

( ஜானகி பேசிய விதத்தில் சுபாவுக்கே  கொஞ்சம் கோபம் வந்தது ? ஏன் இப்படி அடுத்தவங்களுக்காக பயப்படுறா இவ? இவ கஷ்டபட்டப்போ எந்த சமுதாயம் இவளுக்கு தோள் கொடுத்துச்சு ? அவ தப்பு பண்ணல .... யாரையும் ஏமாத்தல.... அவ மனசுக்கு நேர்மையா இருந்தா போதாதா?  ஜானகி மட்டும் இல்ல, சமுதாயத்துக்கு பயப்படுறேன்னு  சொல்லி தன்னுடைய நியாயமான கொள்கைகளை விட்டு கொடுக்குரவங்க பல பேரு இருக்காங்க... எங்கே அர்ஜுன் கோபத்தில் திட்டிவிடுவானோ என்று அவள் அவனை பார்க்க, அவனோ அவளை பார்த்து கண் சிமிட்டினான் )

" ஜானு நான் பாட்டு பாடவா? "

" நான் அப்படியே இறங்கி ஓடவா? மாமா ? "

" ம்ம்ம்கும்ம் என் பாட்டை குறை சொல்றதுன்னா மட்டும் உனக்கு பேச்சு வருமே ..... சுபி நீ சொல்லுடா நான் பாடவா? "

அவன் கண்களில் ஏதோ செய்தி தெரிய "ம்ம்ம்ம்ம் பாடுங்க" என்றாள்....

யார் சிரித்தால் என்ன?

இங்கு யார் அழுதால் என்ன?

தெரிவது என்றும் தெரிய வரும் ?

மறைவது என்றும் மறைந்துவிடும்

இன்று நேற்று வந்ததெல்லாம்

நாளை மாறலாம்

நீரில் தோன்றும் நிழல்களை போலே

நிலையில்லாமல் போகலாம்

நான் பார்த்து ஒன்றாக காணலாம்

நீ பார்த்து வேறாக மாறலாம்

தெரிவது ஒன்று புரிவது ஒன்று

மெய் ஒன்று பொய் என்று தோன்றும்போது

சுபி அவன் குரலில் லயித்துவிட .... ஜானகியோ அவன் பாடல் வரிகளை அசைபோட்டு கொண்டிருந்தாள்... அந்நேரம் அர்ஜுனனின் செல்போன் ஒலிக்க

" வாவ் சூப்பர் ...... நல்ல இண்டேரப்ஷன் ....என் காது தப்பிச்சது !. போன் பண்ண கைகளுக்கு பூமாலையே போடலாம் " என்று ஜானகி வார, செல்போன் திரையில் " ரகுராம் " என்று இருந்தது .... ஒரு நிமிடம் ஜானகி ரகுராமிற்கு மாலை போடுவதை போல் எண்ணி பார்த்தவன் சட்டென தன் எண்ணத்தை  மாற்றிக்கொண்டு செல்போனை உயிர்ப்பித்தான் ...

" யா சொல்லுங்க ... வந்துட்டோம் ....பக்கத்துலதான் .. ஓகே வெச்சிடுறேன் "

" யாரு அர்ஜுன் "

" உன் அண்ணாதாண்டா  !"

( ரகுவாக இருக்குமோ என்று நினைத்த ஜானகி அதன் பிறகு அமைதியாகவே இருந்தாள்..... ஜானகியே இப்படின்னா நம்ம சுபியை  சொல்லவா வேணும் ? )

" என்னாச்சு சுபி "

" பயம்மா இருக்கு அர்ஜுன் "

" ஹா ஹா ஏன்டா "

" அண்ணா என்ன சொல்லுவாங்க தெரில  ...இந்த ரகு வேற "

" ஹ்ம்ம் உங்க வீட்டுல தூண் இருக்காடா? "

" ஹான் ?  எதுக்கு ? "

" இல்ல உன் அண்ணா ரெண்டு  பேரும் உன்னை கட்டி வெச்சு உதைக்கனும்ல "

" அய்யயோ அர்ஜுன் ??? "

" ஹே மக்கு  உன் மேல கோபம் உள்ள அண்ணாதான் நீ வீட்டுல மாட்டிக்க கூடாதுன்னு இங்க வைட் பண்றாரா ? "

" ஆமாலே "

" ஆமா  தான் ... ஜானு நீ அந்த நாலுவிதமா பேசுற நாலு பேரை பத்தி யோசிக்காம வா.... அதுவும் சுபி அண்ணா வைட் பண்ணும்போது நீ மட்டும் கார்ல இருந்தா நல்லா இருக்குமா சொல்லு ? "

( சுபி பேரை சொன்னபிறகு அவளுடைய பிரியமான தோழி மறுப்பளா ? இப்படி சுபி பெயரை பயன்படுத்தி இன்னும் என்னென்னலாம் நடக்குதுன்னு பாருங்க )

சுபத்ராவின் வீட்டில்,

" ஹே நில்லுங்க மூணு பேரும் "

" என்னாச்சு அபி ? இன்னைக்கு சீரியல் எதுவும் இல்லையா? ரொம்ப கோவமா இருக்குற மாதிரி தெரியுதே ? " என்றபடி தன் தாயாரை தோளோடு  அணைத்து கொண்டு அருகில் அமர்ந்தான் ரகுராம்..

" அப்படியே ரெண்டு போட்டேன்னா தெரியும் ... எரும மாடு .. என்னை பேரு சொல்லு கூப்பிடுரியா நீ ? உன் அப்பா வரட்டும் ... மூணு பேருக்கும் இருக்கு கச்சேரி ! "

" ரகுவை எதுக்கு திட்டுறிங்க அக்கா ? " என்றபடி கிருஷ்ணனின் அருகில் அமர்ந்தார் சிவகாமி .... அதற்காகவே காத்திருந்தது போல சுபத்ரா அவரின் மடியில் படுத்துக்கொள்ள,

" இவ ஒருத்தி யாரு பக்கத்துல இருந்தாலும் மடியில படுத்துகுறது.... கல்யாணம் பண்ணிட்டு போனதும் உன் மாமியார் மடியில படுத்துக்குவியாடி? " பொய்  கோபத்துடன் மகளை பார்க்க அவளோ அவரின்  கன்னத்தை கில்லி "ஸ்வீட் மம்மி " என்றாள்.... அதற்குள் அங்கே ரகு உரக்க சிரிக்க எல்லோரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர் ... அப்படி எதுக்கு சிரிச்சாரு தெரியுமா?

( மாமியார் மடியில படுத்துக்குவியான்னு கேட்டதும் நம்ம ரகு சார் அதை கற்பனை பண்ணி பார்த்தாரு .... பானு மடியில் சுபா படுத்திருக்க, ஜானகி சாமரம் வீச ... ஓகே ஓகே சாமரம் கிடைக்கலேன்னா பழைய பேப்பர்  எடுத்து வீச .... ஹைலைட் நம்ம அர்ஜுனன் தான் ... நம்ம சுபிகாக அவர் கால் பிடிச்சு விட்டு தாலட்டு பாட அவர் பக்கத்துல நம்ம ரகு உட்கார்ந்து அர்ஜுனன் காதுல பூ வைக்கிற மாதிரி ,,,, இருந்தாலும் ரகு இதெலாம் ஓவர் ...! )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.