(Reading time: 21 - 42 minutes)

" மாமா சொல்லிடாரு ...என்னை பத்தி மதியம் உங்க ரெண்டு பேருகிட்டேயும் பேசுனதை "

( இந்த அர்ஜுன் இவ்வளோ பெரிய ஓட்டை வாயா ? சுபீ நீ பாவம் போ )

" சோ ? "

" சோ அதுனாலேதான் என் மேல கோபமில்லாமல் பேசுறிங்க ... பரிதாபத்துல அக்கறை காட்டுறிங்க ரைட்டா "

" நீ என்ன லூசா ? "

" ரகு ???? "

" என்னை பேச விடு  ! "

"ம்ம்ம்ம் "

" இத பாரு ஜானகி ... எல்லாருக்கும் லைப் ல கொடுமையான சில வலிகள் இருக்கத்தான் செய்யும் ...  அதுக்காக துவண்டு போறது எவ்வளோ முட்டாள்தனமோ அந்த அளவுக்கு தன்னிரக்கமும் முட்டாள்தனம் .... நான் பாவம் அதுனாலே எல்லாரும் என்னை பாவமாதான் பார்க்குறாங்கன்னு நெனைக்கிறது தவறு. நியூஸ் பேப்பர் படி !  குப்பை  தொட்டில அநாதை குழந்தை, காதல்னு பேருல விபசாரத்துக்கு தள்ளபட்ட பள்ளி மாணவி, தங்களுக்காக கழிவறை வேணும்னு போராடுற திருநங்கைகள் .....அவங்களை நெனைச்சு பாரு ....அவங்க வாழ்க்கை எவ்வளோ கொடுமை ? அந்த அளவுக்கா நீ இறங்கி போய்ட்ட ? கை கால் இல்லாதவன் கூட நடை பிணமா வாழாம சாதிக்கிறான்  .. எல்லாம் இருந்தும் மனதளவுல நீ இப்படி இருக்கலாமா?  "

".................................."

" இதோ பாரு ஜானு ( ஜானகி ஜானு ஆனதை நான் கவனிச்சேன் நீங்க கவனிச்சிங்களா ? ஹீ ஹீ ) ராம் உன்கிட்ட கடைசியா சொன்னதை மறந்திடாதே ... அவர் உன்னோடுதான் வாழ்ந்துட்டு இருக்காரு ...நீ ஒதுங்கி போறது தனியாளாக இல்ல ...உன்னோட ஒரே உயிரா வாழ்ந்துட்டு இருக்குற ராமையும் தான் .... நீ  அவருக்காக வாழுறது  உண்மைன்னா  நீ அவருக்கு புடிச்ச மாதிரி தானே வாழனும் .... நீ இப்படி இருக்குறது எந்த விதத்துல அவருக்கு சந்தோஷத்தை தரும் ? "

".............................."

" சரி விடு .... ரொம்பே மனசை போட்டு குழப்பிக்காதே .... இன்னைக்கு உனக்கு நாள் எவ்வளோ அதிர்ச்சியும் கவலையுமா இருக்கும்னு எனக்கு தெரியும் .... ஒவ்வொரு நாள் முடியும்போதும் எல்லாத்தையும் மறந்துட்டு  தூங்கனும் ... அதே மாதிரி எழும்போது புதுசா பிறந்ததா நெனச்சு எழுந்திரிக்கனும் .......உன் பெர்சனல் விஷயத்துல தலையிடுறேன்னு நெனைச்சாலும் பரவாயில்ல... இனி எல்லாம் அப்படித்தானே ஆஆ  ( வருத்தபடாத வாலிபர் சிவகர்த்திகேயன் ஸ்டைல்ல தன் நீண்ட அறிவுரையை முடித்தான் ரகுராம் ) "

அவன் கடைசியாய் பேசிய தோரனையை கேட்டு மெல்ல புன்னகைத்தாள் ஜானகி ...

" ஓகே ஏதோ 1 இன்ச் புன்னகை வந்துருக்கே அது போதும் ... இப்போ சாங் கேட்டுடு தூங்கு குட் நைட் " என்றபடி நிம்மதியுடன் போனை வைத்தான் ...அவன் சொன்னது போல் இரண்டு நிமிடங்களில் ஒரு பாடலும் அனுப்பி வைத்தான் .

இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே

மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல

மயில் தொகை விரிக்குதே

மழை சாரல் தெளிக்குதே

புல் வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

புல் வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே

புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

(இளங்காத்து வீசுதே ...)

பின்னி பின்னி சின்ன இழையோடும்

நெஞ்சை அல்லும் வண்ண துணி போல

ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு

உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு

அள்ளி அள்ளி தந்து உறவாடும்

அன்னைமடி இந்த நெலம் போல

சிலருக்கு தா ன் மனசு இருக்கு

உலகம் அதில் நிலைச்சு இருக்கு

நேத்து தனிமையில போச்சு , யாரும் துணை இல்லை

யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

(இளங்காத்து வீசுதே ...)

நீண்டநாட்களுக்கு பிறகு அந்த பேதை அமைதியாய் உறங்க, உறக்கம் தொலைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள் வசந்தர மீரா....

" ன் கிருஷ்ணா ? என் மேல இவ்வளோ அன்பு ? உலகத்துல வேற பொண்ணா இல்ல ? எனக்கு கொடுத்து வைக்காத வாழ்கையை எனக்கு தரணும்னு ஏன் காத்திருக்கிரிங்க ? ஒரு பக்கம் அளவு கடந்த காதல் , இன்னொரு பக்கம் பாராமுகம் ... ஒரு கண்ணுல நீர் , மறு கண்ணுல தீ ? ஏன் ? " மனதிற்குள் கேள்வி எழுப்பியபடி அவன் அனுப்பிய குலப் ஜமுனை கண்ணீருடன் சாப்பிட்டு கொண்டிருந்தாள் .. ( உலகத்துலேயே குலப் ஜாமுன் சாப்ட்டு அழுத பொண்ணு நம்ம "நீலாம்பரி " மீராதான் )...

அவள் கண்ணீருடன் அமர்ந்திருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த கிருஷ்ணா , உடனே தோட்டத்துக்கு நடை போட்டார் ... (இப்போ புரியுதா .... அன்னைக்கு தூங்காம இருந்த இன்னொரு ஜோடி கண்கள் யாருடையதுன்னு? ) அடுத்து என்ன பாட்டுதான் ....

" நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

கனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

பூவுக்கு வாய் பூட்டு என் சோகம் நீ மாற்று

என் வாழ்விலே தீபம் ஏற்று "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.