(Reading time: 21 - 42 minutes)

" டேய் என்னடா தூங்காமலே கனவு காணுறே ? " என்று கேட்டது நம்ம கிருஷ்ணா.... ரகு  பதில் சொல்வதற்கு இடம் கொடுக்காமல் அபிராமி பேச தொடங்கினார்  .(இந்த ரகுராமுக்கு மட்டும் எங்க இருந்துதான் கிரேட்  எஸ்கேப் மொமென்ட்ஸ் கிடைக்குமோ தெரில )....

" இன்னைக்கு மூணு பேரும்  எங்க போனீங்க ? மதியம் அப்பா கால் பண்ணாரு..அம்மா பேசணும் பசங்களை கூப்பிடுன்னு சொன்னப்போ யாருமே இங்க இல்ல ... வயசான பாட்டியை பார்க்கத்தான் உன் பசங்களுக்கு டைம் இல்ல அட்லீஸ்ட் போன் ல கூட பேச மாட்டங்களான்னு ஒரே கோவம் .... அவரை சமாளிக்கிறதுகுள்ள எவ்ளோ கஷ்டம் ஆச்சு தெரியுமா? கிருஷ்ணா , நீதான் கொஞ்சம் நல்ல பிள்ளையா இருந்தே ...இப்போ நீயும் இதுங்க கூட சேர்ந்துட்டியா? "

தன் தாயார் சொன்னதை புன்னகையுடன் கேட்ட கிருஷ்ணா " அம்மா நான் எப்போம்மா நல்ல புள்ளையா இருந்தேன் .... ஏதோ கொஞ்ச நாள் மௌன விரதத்துல இருந்த இப்படி ஒரு பட்டம் கொடுத்துடுவிங்களா ? கோச்சடையான்ல நம்ம தலைவர் என்ன சொல்றார் ? "

" என்ன சொல்றார்  ? "

" அதே ரத்தம் அப்படியேதான் இருக்குமாம் ...உங்க காலத்து பழமொழில சொல்லனும்னா தாயை போல பிள்ளை நூலை போல சேலை ... சோ நாங்க ஜாஸ்தியா பேசுறோம் நா அதுக்கு காரணாம் யாரு ? " என்றபடி விஷ்யமமாக சிரித்தான்...

 ஒரு கணம் யோசித்தவர் தன உத்தம புத்திரன் சொன்னதின் பொருள் விளங்கவும் " ஊமை குசும்புடா உனக்கு ....இவ்வளோ நாலு இதெல்லாம் காணோமே? இப்போ என்ன புது உல்லாசம் ? "  என்றார் ...

" புது உல்லாசம் இல்ல அம்மா ...புது "வசந்தம் "நு சொல்லுங்க " என்றபடி தமையனிடமிருந்து முறைப்பை பெற்றுக்கொண்டான் ரகு .... 

" என்னவோ போ  ..... நாளைக்கு எங்கேயும் போகாதிங்கடா ... நாம ஷாப்பிங் போகணும் " என்றார் அபிராமி ...

" வாவ் ...சூப்பர் பெரியம்மா.... பட் என்ன திடீர்னு ஷாப்பிங்  ? "

" அடுத்த வாரம் கோகுலஷ்டமி சுபா "

" வாவ் கோகுல் எப்போ வாரானாம்? "

" அடியே....உனக்கு கோகுலஷ்டமி தெரியாதா? "

" ஐயோ கூல் டவுன் மம்மி ..... ."

" சரி விடு சிவா சின்ன பொண்ணு அவ.... அவளை ஏன் இப்படி முறைக்கிறே ? .... எப்பொதும் போல இந்த வருஷமும் கோகுலஷ்டமி விமரிசையா கொண்டாடனும் "

"அப்படின்னா அக்கம்  பக்கத்துல உள்ளவங்களைலாம் கூப்டுவிங்க தானே அம்மா ? " என்று கேட்ட ரகு கிருஷ்ணாவை பார்க்க , அவனும் ஆவலுடன் அவரின் பதிலை எதிர்பார்த்தான் .....

" கண்டிப்பாடா .... அதுக்குத்தான் சொல்றேன் ..வர்றவங்களுக்கு கிப்ட் மாதிரி எதாச்சும் வாங்கணும்... பூஜைக்கு திங்க்ஸ் வாங்கணும் .... நீங்களும் ஆளுக்கு ஒரு புது டிரஸ் எடுத்துகோங்க ..... "

அவரின் பதிலில் அனைவருமே குஷியாகிவிட, அப்போதுதான் தன் வீட்டுக்குள் நுழைந்த மீராவை கிருஷ்ணன் பார்த்தான் .... அவளும் முதலில்  அவனையே பார்க்க, அவனோ சட்டென முகபாவனையை மாற்றிக்கொண்டு

" சரிம்மா நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன் .... ரகு, சுபா நீங்களும் போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க " என்றுபடி இறுகிய முகத்துடன் கிளம்பினான் ... அவன் பாராமுகத்தை கண்டு மீராவும் சோர்ந்து போனதை கவனித்து ரகு மட்டும் அல்ல .... அதுவரை சந்தோஷமாய் பேசி கொண்டிருந்தவனின் திடீர் மாற்றத்தை கண்ட இரண்டு தாயருமே அவன் பார்வை சென்ற திசையை கண்டுகொண்டனர் .... இதை எப்படி இவ்வளவு நாள் கவனிக்காம விட்டோம் என்று  ஒருவரை ஒருவர் பார்வையால் வினவினார் ....

கிருஷ்ணா , ரகு , சுபா மூவரும் மேலே சென்று விட, அப்போதுதான் கவனித்ததைபோல் மீராவின் பக்கம் திரும்பினர் இருவரும் ....

" வா வசந்தரா " ( கிருஷ்ணா , ரகு இருவரை தவிர யாருக்கும் அவளின் முழு பெயர் தெரியாது )

" சாரி ஆன்டி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ? "

" அப்படிலாம் இல்லம்மா ...நீதான்  இவ்வளோ பக்கத்துல இருந்தும் கூட  வீட்டுக்கு வரவே மாட்டுறியே "

ஒரு புன்னகையை பதிலாய் தந்தவள் " இந்தாங்க ஆன்டி வாடகை பணம் "

" அடடே என்னம்மா சீக்கிரம் தரே? "

" இந்த மாதம் சீக்கிரம் சம்பளம் கிடைச்சது ... அப்பறம் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல நான் வீட்டை காலி பண்ணிடுவேன் ஆன்டி "

" ஏன் மா ? ஏதும் பிரச்சனையா? உன் வேலை எப்படி இருக்கு ? சஞ்சய் கிட்டே நான் ஏதும் பேசணுமா ? "

" ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்ல .... ஒரு மனமாற்றம் தேவை " என சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கிவிட

" நான் வரேன் " என்றாள்.

" ஒரு நிமிஷம் வசு.... இந்தா "

" என்னது ஆன்டி ? "

" குலப் ஜாமுன் ...... நேத்து ச்வீட் பண்ணேன் டா ......அப்போ கிருஷ்ணாதான் உனக்கு பிடிக்கும் நு எடுத்து வைக்க சொன்னான் ..கொடுக்க மறந்துட்டான் போல " என்று சொன்ன சிவகாமி அவளின் முகத்தை ஆராய்ந்தார் ... எதிர்பார்த்தது போலவே அவள் முகம் மலர " தேங்க்ஸ் " என்றபடி அங்கிருந்து சென்றாள்.

" சிவா "

" சொல்லுங்க அக்கா "

" இதை நாம எப்படி கவனிக்காம விட்டோம் "

" பெத்தவங்க கண்ணுக்கு பிள்ளைங்க எப்பவும் குழந்தையாவே தெரியரதுனாலே இருக்கலாம் அக்கா .... நம்ம கிருஷ்ணா முகத்தை பார்த்திங்களா ? இந்த பொண்ணு வந்ததும் டக்குனு மாறிடுச்சு "

" ஆமா ..அவன்தான் வசுவை இங்க அழைச்சிட்டு வந்தான் ... எவ்வளோ வாதாடினான் ஞாபகம் இருக்கா ? அவளுக்கு வேண்டியதெல்லாம் பார்த்து  பார்த்து செஞ்சான் .... அப்பறம் திடீர்னு ரெண்டு பேருமே ஒதுங்கி  போய்ட்ட மாதிரி இருக்கு "

" அக்கா ஒரு வேளை கிருஷ்ணா மனசுல ................"

" அப்படிதான் நானும் நெனைக்கிறேன் "

"ஆனா இந்த பொண்ணு இன்னும் ரெண்டு மூணு மாசத்துல போறேன்னு சொல்றாளே ! "

" ரெண்டு மாசத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா? "

(நிஜம்தான் இன்னும் ரெண்டு மாசத்துல என்னலாம் நடக்குதுன்னு பார்ப்போமே )

ன்றிரவு,

" ஹே அர்ஜுன், கிருஷ்ணா பேசுறேன் "

" தெரியும் பாஸ் சொல்லுங்க "

" பாவி என் நம்பர் ஐ கூட தெரிஞ்சு வெச்சுருக்கியா? "

" ஹீ ஹீ வருங்கால மச்சான் நம்பரை கூட தெரியாம வெசுருக்கியென்னு நாளைக்கு வரலாறு என்னை தப்ப பேச கூடாதுல..?  அப்பறம் கிருஷ்ணா ஒரு விஷயம் சொல்லணுமே "

" சொல்லுடா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.