(Reading time: 34 - 68 minutes)

 

வள் புதிதாய் நாடகம் தீட்டி நடிக்க ஒப்பந்தம் வாங்கும் முன்பே அவள் நாடகம் தூள் தூளானது ... அவளின் அறையை விட்டு வெளி வந்த கிருஷ்ணன் தனது செல்போனை அங்கேயே தவற விட்டது ஞாபகம் வரவும் இரண்டிரண்டு படிகளாக ஏறி அவள் அறைக்கு விரைய அங்கு அவள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டான் ..கோபத்திற்கு பதிலாக அவனுக்கு சிரிப்புதான் வந்தது... (மக்கு மக்கு ஏண்டி இப்படி சின்னபுள்ளதனமா பிளான் போடுறே ? ) என்று நினைத்தவன் இரண்டே எட்டில் பாய்ந்து வந்து அவளின் கைபேசியை பறித்தான்..

" ஹாய் ஷக்தி திஸ் இஸ் கிருஷ்ணன் ...நான் இத சொல்லியே ஆகணும் உங்க பிரண்ட் அப்படி ஒரு மக்கு ... இதுக்கு முன்னாடி இவ்வளோ ....இவ்வளோ திமிர் பிடிச்ச  அழகிய மக்கி நான் பார்த்ததே இல்ல ... எம்  இன் லவ் வித் ஹேர் " என்று கிட்ட தட்ட நடிகர் சூர்யா குரலில் பேசினான் கிருஷ்ணன் ...

" ஹா ஹா ஹை கிருஷ்ணன் .... நான் ஷக்தி ..மீராவோட பெஸ்ட் பிரண்டு ...பேருக்குத்தான் பிரண்டு ... பட் என் பேச்சை அவ கேக்கவே மாட்டுரா ..இப்போ கூட எப்படி ப்ளான் போட்டா பார்த்திங்க தானே? எனக்கொரு சின்ன ரிக்வஸ்ட் கிருஷ்ணா "

" ம்ம்ம் சொல்லுங்க "

" அவ  பிடிவாதக்காரி முட்டாள்தனமா எது வேணும்னாலும் சொல்லுவா ..அவ பேச்சை நம்பி அவளை விட்டுடாதிங்க "

" நோ வே ஷக்தி ... உயிரே போனாலும் விட மாட்டேன் .... என் உயிர் போகணும்னு நெனச்சா அவளை போக சொல்லுங்க "

(என்ன மாதிரி மிரட்டுறான் இவன்... எதை சொன்னா நான் அடங்குவேன்னு தெரிஞ்சு வெச்சுருக்கான் ... ) என நினைத்தாள் மீரா ..

" நாளைக்கு வீட்டுல கோகுலஷ்டமி பூஜை இருக்கு ...மீராவையும் வர சொல்லுங்க ஷக்தி .... எங்க ரெண்டு வீடுக்கும் ஜாய்ன் ஆகுற மாதிரி ஒரு தோட்டம் இருக்கு அங்கதான்   பூஜை நடக்கும் .... எல்லாரும் அங்க இருக்கும்போது அவ வரலேனா நல்ல இருக்காது ... நாந்தான் பிரச்சனைனா நோ ப்ரொப்லெம் ... நான் அவ கண்ணுலேயே பட மாட்டேன் " என்றவன் போனை அவளிடம் கொடுத்து விட்டு சென்றான். அதற்கு பிறகு மீரா போகாம இருப்பாங்களா என்ன? இதுக்கு மேல அடுத்த சீன் கோகுலஷ்டமி  தான் .... ( ஆனா அது முன்னாடி நம்ம ஷக்தி பத்தி ஒரு ஹிண்ட்..ஒருவேளை இந்த சீரீஸ் நான் வெற்றிகரமா முடிச்சிட்டா என்னுடைய அடுத்த கதை ஹீரோ நம்ம ஷக்தி தான் ... கதைக்கு  தலைப்பு " உண்மை சொன்னால் நேசிப்பாயா ? " ....ஓகே ஓகே இப்போ நாம இந்த கதைக்கு வருவோம் )

கோகுலஷ்டமி.....

நம்ம பெரியவர்கள் பக்தியுடனும் , இளசுங்க எல்லாம் காதல் நினைவுகளுடனும் காத்திருந்த நாள் ... விடியும் விடியாத அந்த காலை பொழுதை புன்னைகையுடன் வரவேற்ற கிருஷ்ணன் ஜன்னல் திரையை விளக்காமலேயே ஜன்னலோரமாய் அவளை தேட , அவன் எதிர்பார்த்தது போல மீறவும் அவன் அறையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னி கம்பிகளில் முகம் புதைத்து தாயை தேடும் குழந்தையை போல் நின்றவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவனுக்கும் ஆசைதான். ஆனால் நிச்சயம் அவள்  அதை ஏற்க மாட்டாள் . தான் இல்லபோது தேடுபவள் இருக்கும்போது விலகி போகிறாள் ... மனதிற்குள்" அவளுக்கென்றே எழுதினார்களா?" என்ற சந்தேகத்தை எழ வைத்தது  ஒரு பாடல்...

தொலைவான போது பக்கமானவள்

பக்கம் வந்த போது தொலைவாவதோ

தொலைவான போது பக்கமானவள்

பக்கம் வந்த போது தொலைவாவதோ

மொழியோடு சொல்லுக்கு  ஊடல் என்னவோ

சிரிங்கார பூவுக்கு சேவை செய்யவோ

உன் கையிலே பூ வலை போடவா

உன் பாதையில் பூ மழை சிந்தவா

பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா

காதலியே...

சிறிது நேரம் அவளையே பார்த்தவன் அவள் கண்களில் இன்று அகப்பட கூடாது என்று முடிவெடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டான்... அதே நேரம் தூக்க கலக்கத்தில் தன் தாயாரிடம் காபி கேட்டுவிட்டு வாசலுக்கு வந்த ரகுராம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்..

அழகிய பச்சை நிற புடவையில், தேவதையாய் மிளிர்ந்த ஜானகி, சுபத்ராவிடம் பேசிக்கொண்டே கோலமிட்டு கொண்டிருந்தாள். அவளின் நீண்ட ஈர கூந்தலை நுனியில் முடித்து வைத்தபோதும்  அது தரை தொட்டு தொட்டு விளையாடுவதை பார்த்தவன் மனதிற்குள் சிலிர்த்துகொண்டான் ... ஹ்ம்ம் இன்னக்கு என் வீட்டு தரை என்ன புண்ணியம் பண்ணதோ? என் தேவைதையின் பாதம் ஏந்தியது மட்டுமில்லை அவள் கூந்தலின் ஸ்பரிசத்தையும் உணர்கிறதே என்றெண்ணி  பேரு மூச்சு விட,

" இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த

என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச

அடி தேக்கு மர காடு பெருசு தான்

சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

அடி தேக்கு மரக் காடு பெருசு தான்

சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது அடி

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்

மனச தாடி என்  மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி

அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி "

" ஹய் சிட்டிவேஷன் சாங் " என்றபடி ரசித்தவன்

" யாருடா இந்த சூப்பர் சிங்கர்"  என்று அதிர்ந்து பார்க்க  கேலி புன்னகையை உதிர்த்தபடி நின்றிருந்தான் கிருஷ்ணன் ...

" அண்ணா "

" ஏன்னா ? "

" இல்ல நீங்க இங்க என்ன பண்ணுரிங்க ? உங்க ஹீரோயின் எங்க? "

"பேச்சை மாத்தாதே டா... அவ வரும்போது வருவா ... நீலாம்பரி லாம் அவ்வளவு சீக்கிரம் என்ட்ரி கொடுப்பாங்களா? நீ முதல்லே ஜொள்ளு விடுறதை நிறுத்து டா ..என் பாசமலர் கஷ்டபட்டு போட்ட கோலத்தை உன் ஜொள்ளுல அழிசிடாதே "

" ஹீ ஹீ " என்று இளித்தபடி அவ்விடத்தை விட்டு சென்றான் ரகுராம்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.