(Reading time: 34 - 68 minutes)

 

ந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம் ,

சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்

புயல் மையம் கொண்டால் , மலை மண்ணில் உண்டு ,

எந்த தீமை குள்ளும் ? சிறு நன்மை உண்டு , - - .

வெற்றியை போலவே , ஒரு தோல்வியும் நல்லதடி ,

வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி ,

குற்றஞ் சொல்லாமல் , ஒரு சுற்றம் இல்லையடி ,

இலையும் புன்னகையால் , நீ இருட்டுக்கு வெள்ளையடி ,

தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் ,

நாகரிகம் பிறந்ததடி ,

தவறுகள் குற்றம் அல்ல , சரிவுகள் வீழ்ச்சி அல்ல ,

பாடம் படி பவள கொடி ,

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை ,

உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் , நாளை துன்பம் இல்லை

(அர்ஜுன் - சுபத்ரா )

" ஒய் இளவரசி தூங்கிட்டியா? "

" ஐயோ இல்ல அர்ஜுன் ரொம்ப வேலை இருக்கு "

"அப்படி என்ன வேலை என் இளவரசிக்கு ? "

" யுவராஜர் விட்ட ஜொள்ளுல வீட்டுல வெள்ளம் ...அதை கிளின் பண்ணனும் "

" அடிபாவி நான் எங்கடி ஜொள்ளு விட்டேன் ... ஏதேதோ சும்மா உன்னை பார்த்தேன் "

" என்னாது சும்மாவா? "

"ஆமா பின்ன என்னவாம் "

" ஹ்ம்ம்ம்ம் பார்வையா அது ? காந்தம் இழுக்குற மாதிரி "

" ஆஹான் அப்படியா ? அதுக்கொரு சாங் பாடவா? "

"ம்ம்ம்ம் "

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்

பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்

சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

" அர்ஜுன் "

" இதே பீல் ல  நான் ஒரு பழைய பாட்டு பாடவா? "

" பாடுங்க இளவரசி "

" இன்னும் பார்த்துகொண்டிருந்தாள் என்னாவது

இந்த பார்வைக்கு தானா? பெண்ணானது ?

நான் கேட்டதை தருவாய் இன்றாவது "

" இன்னும் கேட்டுகொண்டிருந்தால் என்னாவது

இந்த கேள்விக்கு தானா பெண்ணானது ?

நெஞ்ச கோட்டையை திறப்பாய் இன்றாவது  "

"அர்ஜுன் உங்களுக்கும் இந்த சாங் பிடிக்குமா ?"

" ஹே என்ன பாட்டுடி பாடி வைக்கிறே?"

" ம்ம்ம் நல்ல பாட்டுதானே அர்ஜுன்? "

" அதை நீ பக்கத்துல இருந்திருந்தா சொல்லி இருப்பேன் "

" ஏன்  "

" அதே பாட்டுல சில லைன்ஸ் பாடவா ? "

"ம்ம்ம்ம்"

" செண்பக பூவில் வண்டு விழுந்து

தேன் குடித்தாடுதல் போலே

 சேர்ப்பதை சேர்த்து பார்ப்பதை பார்த்து

வாழ்ந்திட துடிப்பதினாலே

இனி பிரிவதில்லை உன்னை விடுவதில்லை  "

"ம்ம்ம்ம்ம் "

"இப்போ புரியுதா? "

"அர்ஜுன் நாளைக்கு மண்டே "

" இருக்கட்டும் "

" எனக்கு காலேஜ் இருக்கு "

" இருக்கட்டும் "

" நான் படிக்கணும்  "

"படி..சோ ? "

"படிக்கிற பொண்ணு மனசை கெடுக்காதிங்க...பை ...குட் நைட்"

" ஹா ஹா ..எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் ...ஓடு ஓடு ... குட் நைட் "

(கிருஷ்ணா-மீரா )

" மீரா மீரா "

" சத்தமா எதுக்கு கூப்பிடுரிங்க  ? யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க ? "

" ஏன் என்னையே விழுன்குற மாதிரி  பார்த்து பாடும்போது உனக்கு இது தெரியாதா? "

" நான் யாருக்காகவும் பாடல ....இங்க எதுக்கு வந்திங்க ? உங்க ஜானகியை வழி அனுப்பினதும் என் ஞாபகம் வந்துடுச்சா ? பேருலதான் கிருஷ்ணனா குணத்துலயுமா ? "

" நீ ரொம்பே அதிகம் பேசுற மீரா ... இவ்வளோ கோபம் வருதே ..அது ஏன் வருதுன்னு யோசிச்சியா? முதல்ல உன் மனசை புரிஞ்சுக்கோ அதுகப்பரும் என்னை பத்தி முடிவெடுக்கலாம் ...ஒருத்தி வேணாம்னு சொல்லிட்டா உடனே  இன்னொருத்தியை பார்க்குற ரகம் நு நெனைச்சியா என்னை? ரகுராம்தான் ஜானகியை விரும்புறான் போதுமா ? ..... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற? உன்கிட்ட பேசவே புடிக்கல போ ! " என்று கோபத்துடன் அவன் சென்று விட .....அப்படியே ஸ்தம்பித்து  அமர்ந்து விட்டாள் மீரா.... அவள் கேவல் அடங்காமல் இருக்க அவளை தேற்றும் விதமாக அவள் தலை மீது அந்த  கரம் வருட ...............

( அது  யாருடைய  கரம் நு அடுத்தட எபிசொட் சொல்றேன் ..... இந்த கதையை பார்த்திங்கன்னா இதுவரை அப்பா அம்மா மூலமா கதையில எந்த பிரச்னையும் இல்ல ... சில பேரு கதையை படிச்சிட்டு இவ்வளோ ஈசி கோயிங் அண்ணா அம்மா அப்பா எல்லாம் நம்ம பூவி கதையில மட்டும்தான் இருப்பாங்கனு நினைக்கிறிங்க ....

அதுக்கு ரெண்டு ரீசன் இருக்கு ... முதல் ரீசன், நான் பார்த்த ஒரு டிவி ஷோ லே ஆர்  ரஹ்மான் சார் சொல்லுவாரு  " பாடல் என்பது ரொம்ப ஸ்பெஷல்... எந்த சோகத்துல இருக்குரவரையும் சந்தோசம் ஆக்குற ஷக்தி பாடலுக்கு இருக்கு சோ அது 3 நிமிஷ பாடலாக இருந்தாலும் உணர்ந்து சின்சியரா பாடுங்கன்னு ".

என்னை பொருத்தவரை பாடல் மாதிரித்தான் கதையும் ... பொதுவாக பொழுது போக்குக்காக, மனசு சரி இல்லாதவங்க அல்லது ஒரு மாறுதலை எதிர்பார்க்கிறவங்க தான் அதிகம் கதைகள் படிப்பாங்க ...சோ அப்படி படிக்கிறவங்களுக்கு கதை சந்தோஷத்தை தரனும் என்ற நல்லெண்ணம் ....

இரண்டாவது சின்சியராக லவ் பண்ணிட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரியுரவங்க மேல இருக்குற இயல்பான இரக்க குணம்..சில பேரு விளையாடு தனமா காதலிப்பாங்க ஆனா சேர்ந்திருப்பாங்க...சிலபேரு சின்சியரா விரும்புவாங்க பிரிஞ்சிடுவாங்க ... இவங்களை நினைத்தால் கஷ்டமா இருக்கும் மனசுக்கு ...அதுனாலேதான் நம்ம கதைகளில் ஜோடிகளை பிரிப்பதில்லை...

சரி அடுத்து நம்ம மீராவுக்கு ஆறுதல் சொன்னது யாரு ? ஜானகி - ரகுராமின் அடுத்த சந்திப்பு எப்போது  ? சுபத்ரா வீட்டுல பேரன்ட்ஸ் இனி என்ன பண்ணுவாங்கனு அது எபிசொட் பார்ப்போம் ..நன்றி )

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.