(Reading time: 34 - 68 minutes)

 

தே நேரம்,

" ஜானு "

" என்ன சுபி ?"

" அத்தை எங்க? "

" கிச்சன் ல  அபிராமி , சிவகாமி அத்தை கூட இருக்காங்க "

" ம்ம்ம்ம் "

" மாமாவை தேடுறியா? "

" கண்டுபுடிச்சிட்டியா ?"

" அதான் உன் முகத்துலேயே எழுதி ஒட்டி இருக்கே ? "

" ஹேய் என்னடி சொல்லுற ? "

" எதுக்கு இப்போ பதருரே? "

" இல்லடி கொஞ்சம் பயம்மா இருக்கு ...எங்க என் முகத்தை வெச்சு வீட்டு பெரியவங்களுக்கு  எங்க விஷயம் தெரிஞ்சிடுமொனு "

" நல்ல விஷயம் தானே ?"

" ஆனா அதை நாம சொல்றதுக்கு நாலு பேரு பார்த்து போட்டு கொடுக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குல ? "

" சரி பீல் பண்ணாதே "

" அர்ஜுன்  எங்க டி ? "

" இந்த பூஜை ஏற்பாடு பண்றதுல ஜென்ட்ஸ் வேலை எல்லாம் முடிஞ்சதாம் ... அலங்கரிக்குற வேலை எல்லாம் பொண்ணுங்க வேலைன்னு சொல்லிட்டு மாமா பெரியமாமா கூடவும் சின்ன மாமா கூடவும் மாடியில கதை பேசிகிட்டு இருக்காரு"

" ஓஹோ என்னை பார்கிறதை  விட  உன் மாமாவுக்கு அதான் முக்கியமா? கவனிசுகுறேன்... ஆமா பெரிய மாமா யாரு ? சின்ன மாமா யாரு "

" அட மக்கு உன் பெரியப்பா பெரிய மாமா ...அப்பா சின்ன மாமா ...அபிராமி அத்தை தான் அப்படி கூப்பிட சொன்னங்க "

" உனக்கு இதுல சங்கடம் இல்லையேடி "

" ச்ச்ச இல்லடீ சொல்லப்போனா இந்த மாதிரி உறவுகல்லாம் கிடைச்சு  ரொம்ப வர்ஷம் ஆனா மாதிரி இருக்கு ... பானு அத்தை கூட எவ்வளோ சந்தோஷமா இருக்காங்க தெரியுமா? இவ்வளோ நாள் வீட்டுல இருந்தனால தெரில பட் ஹோட்டல் ல உங்க எல்லாரோடும் ஒண்ணா இருக்கவும் எனக்கு எங்க இருந்துதான் இந்த ஏக்கம் வந்திச்சுன்னே தெரில ... உனக்கு தெரியுமா? நாம ஒண்ணா கோகுலஷ்டமி கொண்டாடுரோம்னு சொன்னப்போ நான்தான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் "

படபடக்கும்  பட்டாம்பூச்சியை போல அவள் விழி அசைத்து பேசியதை பார்த்து அசந்து போனாள் சுபத்ரா .....

" நீயும்தான் எவ்வளோ அழகு டி ...என் கண்ணே பட்டுடும் .... ஆமா என் அப்பா உனக்கு மாமன்னா நான் உன்னை அண்ணின்னு கூப்பிடவா? தப்பலாம் மின் பண்ணல...சும்மா அத்தை பொண்ணை அண்ணி முறையில் கூப்பிடுறேன்னு வெச்சுக்கோயேன் "

அந்த சந்தோஷமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாத ஜானகி " ம்ம்ம் சரி " என்றாள்....

சுபத்ரா முதல் முறை " அண்ணி " என்று அழைக்கும்  வேளையில் அங்கு வந்து நின்றாள் வசந்தர மீரா ... புதிதாய் இருந்த ஜானகியை பார்த்து சுபா அண்ணி என்று அழைக்கவும் சர்வமும் அடங்கி பூமியே தலைகீழ் சுழல்வதை போல உணர்ந்தாள்... கால்கள் பின்ன , கண்களில் நீர் கோர்த்து நின்றவளை அப்போதுதான் கவனித்தாள் சுபா ...

" ஹாய் வசந்தரா...வாங்க வாங்க "

" அண்ணி, இவங்க வசந்தரா பக்கத்துல நம்ம வீட்டுலதான் இருக்காங்க... இன்டிரியர் டிசைனர்... ரொம்ப டேலண்டட்...கிருஷ்ணா அண்ணா அடிக்கடி சொல்வாங்க "

சிநேகமாக புன்னகையுடன் கை கூப்பினாள் ஜானகி ...

" நான் ஜானகி...நான் .........." என்று அவள் முடிப்பதற்குள் அபிராமி வந்தார் ....

" அடடே வசு வாம்மா ....ஜானகி உன்னை பானு தேடுறா ...சுபா வசு நீங்க இத்ன்ஹா கோலத்தை முடிச்சிட்டு தோட்டத்துல கிருஷ்ணர் விக்ரகம் கிட்ட வாங்க அலங்கார வேலை இன்னும் இருக்கு " அவரை ஆர்த்து புன்னகைத்து விட்டு கோலத்தை தொடர்ந்தனர் இருவரும்.

வண்ண வண்ண பூக்கள்,

 மின்னும் விளக்குகள்,

 தித்திப்பான பலகாரங்கள்,

 குட்டி குட்டி ராதை மட்டும் கிருஷ்ணர் வேடம் பூண்ட சிறுவர்கள், கண்களை  பறிக்கும் அழகுடன் தேவதைகளாய் ஜானகி, மீரா, சுபத்ரா, காதல் கண்களுடன் அர்ஜுனனும் , ரகுராமும் , மறைந்திருந்தப்படி கிருஷ்ணன்,

 பக்தியுடன் சூர்யா பிரகாஷ் சந்திர பிரகாஷ் தம்பதியர், மன நிறைவுடன் பானு , மற்றும் அனைத்து  அண்டைவீட்டரும் புடை சூழ 

அங்கு மர்மமாய் சிரித்து கொண்டிருந்தான் மாயக்கண்ணன் !

அந்த மதுசூதனனிடம் அவர்கள் வைத்த  கோரிக்கைகள் என்னென்ன? கொஞ்சம் பார்க்கலாமே...

" கிருஷ்ணா, இதனை வருஷம் இந்த குடும்பத்தை ஒரு  குடும்ப தலைவனா நாங்க நல்ல முறையில் நடத்தி வரோம்.. இந்த குடும்பம் எப்பவும்  ஒற்றுமையா இருக்கணும் " - சூர்யா பிரகாஷ் மற்றும் சந்திர பிரகாஷ்

" கிருஷ்ணா நீதான் மாயவனாக இருக்கலாம் .. உன் பெயரை வெச்சதுகாக என் பையனும் அப்படிதான் இருக்கனுமா? என் ரெண்டு பசங்க வாழ்க்கையுமே ரெண்டு திசையில் இருக்கு ... நீதான் நல்ல வழி காட்டனும் ... எங்க சுபா குட்டி கும் அர்ஜுன் மாதிரி அல்லது அர்ஜுனனே வரனா அமையனும் "- அபிராமி

" கண்ணா , என் பொண்ணுக்கு நீ உன் அளவுக்கு குறும்புத்தனத்தை தந்துருக்க கூடாது .... எவ்வளோ திட்டினாலும் மனசுக்குள்ள அவ்வலை பாசம் எனக்கும் இருக்கு ... அவளுக்கு பொறுப்பு வரணும் " - சிவகாமி

" மாதவா, அர்ஜுனனுக்கு சுபி மாதிரி தங்கமான பொண்ணு அமைஞ்சிட்டா ... அதே மாதிரி ஜானகிக்கும் ஒரு நல்ல வழியை காட்டு " - பானு .

" கிருஷ்ணா , இப்போதான் மனசுல கொஞ்சம் சந்தோசம் வந்துருக்கு ..இதாவது எனக்கு நிலைசிருக்கணும் ... இந்த குடும்பம் ஒற்றுமையா இருக்கணும் " - ஜானகி

" கடவுளே, ஜானகி மனசு மாறனும் ... நீதான் எனக்கு உதவனும் .... கிருஷ்ணா நான் மகாபாரதத்துல பார்த்தேன் ... எவ்வளோ  டிராமா போட்டு நல்லது செஞ்சே ..அதே மாதிரி என் லைப் லயும் கொஞ்சம் வெளக்கேத்தி வை பா " - ரகுராம்

" அவ கண்ணுல படாம ஒளிஞ்சிருக்கேன் ... இப்போவாச்சும் அவ என்னை மிஸ் பண்ணனும் கிருஷ்ணா.... நீ எப்படித்தான் ஒரே டைம் அத்தனை கேர்ள்  மனசை இம்ப்ரெஸ் பண்ணே ? எனக்கு  ஒருத்தியை சமாளிக்கவே உயிர் போகுது " - கிருஷ்ணா

" மிஸ்டர் கிருஷ்ணா .,..நான் உங்ககிட்ட எதுவும் கேக்க மாட்டேன்... ஒரு குட்டி பிளாஷ் பேக் மட்டும்  ஞாபகபடுதுறேன்...மகாபாரதத்துல நீங்க அர்ஜுன்- சுபத்ராவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிங்க .... அதோட பார்ட் 2 தான் இந்த ஜென்மம் ... சோ இந்த ஜென்மத்துலயும் என் மச்சான் கிருஷ்ணா ரகு ரூபத்துல வந்து எங்க கல்யாணத்தை நடத்தி வெசிங்கன்னா கொஞ்சம் நல்ல இருக்கும் "- அர்ஜுன்

" கிருஷ்ணா நான் எல்லாரோட மனசும் சந்தோஷத்தோட நடத்தி வைக்கிற மாதிரி நல்ல சூழ்நிலையில என் அர்ஜுனனை கல்யாணம் பண்ணிக்கணும் .. அயோ நோ நோ இது ரெண்டாவது விஷ் ... முதல் விஷ் இந்த பைனல் எக்ஸாம் நல்லா எழுதணும் "- சுபத்ரா

" கண்ணா ... உன் படைப்புல தப்பி பிறந்தவ நான் .... எனக்காக உருகுற கிருஷ்ணா மனசை மாத்து ... நான் வேணும்னா கூடிய சீக்கிரம் போய்டுறேன் .... என் கண்ணனுக்கு கிருஷ்ணா வை காட்டு ப்ளீஸ்....அந்த ஜானகி பொண்ணை சுபா அண்ணின்னு சொல்லுறா ? அப்படின்னா அவளுக்கும் கிருஷ்ணாவுக்கும்? அப்போ நேத்து ஏன் அப்படி பேசணும் ? எனக்கு என்னதான் வேணும் ? அவன் யாரை கல்யாணம் பண்ணா எனக்கென்ன கிருஷ்ணா? தயவு செஞ்சு என் மனசை தெளிய வை  " - மீரா

" சாமி சாமி எல்லாரும் ரொம்ப நேரமா சாமி கும்பிடுறாங்க ...அந்த லட்டுவை சீக்கிரம் கொடுக்க சொல்லுங்க " - சிறுவர்களில் ஒருவன்

இப்படி அனைவரின் வேண்டுதலை கேட்ட கிருஷ்ணாவோ " கடமையை செய் பலனை எதிர்பார்கதே" நு மந்தகாச புன்னகையுடன் நின்றிருந்தார்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.