(Reading time: 34 - 68 minutes)

 

ரு வழியாக பூஜை முடிந்து விட, அதற்காகவே காத்திருந்த சிறுவர்கள்  இனிப்பு பண்டங்கள் உண்டபடி இங்கேயும்  அங்கேயும் ஓடி கொண்டிருந்தனர் ... அவர்களுடன் சிறுமியைபோல் ஓடி பிடித்து விளையாடிய ஜானகியை வாஞ்சையுடன் பார்த்தான் ரகுராம் ...

சரி யாராவது பாடுங்க என கூட்டத்தில் ஒருவர் சொல்ல

" அக்கா நீங்க பாடுங்களேன் " என்றார் சிவகாமி.... அதே நேரம்  அதுவரை மறைந்திருந்த கிருஷ்ணன் ரகுராமிற்கும் ஜானுவிக்கும் இடையில் நிற்க  மீராவின் கண்களில் முதல்  முறை பொறாமை தீ எரிந்தது ...அதை கண்டுகொண்ட அபிராமி பாட ஆரம்பித்தார்.

பிருந்தாவனமும் நந்தகுமாரரும்

 யாவருக்கும் பொது செல்வமன்றோ ?

ஏனோ ராதா இந்த பொறாமை ?

யார்தான் அழகால் மாயங்காதவரோ

பிருந்தாவனமும் நந்தகுமாரரும்

 யாவருக்கும் பொது செல்வமன்றோ ?

ஏனோ ராதா இந்த பொறாமை ?

யார்தான் அழகால் மாயங்காதவரோ

அவர் அதன் பின் ஜானு நீ பாடும்மா எனவும் , ஒரு நிமிடம் யோசித்தவள்

கோகுலத்து கண்ணா கண்ணா

சீதை இவள் தானா

மானுமில்லை ராமனுமில்லை

கோகுலத்தில் நானா

சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

ராவணின் நெஞ்சில் காமமில்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

பாடிமுடித்த ஜானகி சுபாவை பாட சொல்ல, அவளை விழுங்கி விடுவதை போல் பார்த்து  கொண்டிருந்த அர்ஜுனனை பார்த்து விஷமமாய் சிரித்தவள்

தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

என்று பாடினாள்.... அடுத்து சிவகாமி வசந்தராவை பாட சொல்ல, தனக்கும் அதற்கும் சம்மதமே இல்லாதவன் போல கிருஷ்ணன் எங்கேயோ வெறித்தப்படி  அவள் பாடலுக்காக காத்திருந்தான்.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்

எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்

பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்

ஆற்றங் கரையதனில் முன்னமொரு நாள் எனை

அழைத்து தனியிடத்தில் பேசியதெல்லாம்

தூற்றி நகர்முரசு சாற்றுவேனென்று

சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்

என்று பாடினாள்... அவள் பாடலில் இழையோடிய துயரை கண்டுகொண்டவன் கிருஷ்ணாவும் பதிலுக்கு பாட தொடங்கினான்

ராதா காதல் வராதா

ராதா காதல் வரதா

நவநீதன் கீதம் போதை தராதா?

ராஜ லீலைகள் தொடராதா?

இப்படி அனைவரும் தங்களுக்கு பிடித்த " கண்ணன் அல்லது கிருஷ்ணன் " என்ற வார்த்தையில் தொடங்கிய பாடல்களை பாட

இறுதியில் பெண்கள் மூவரும்  (ஜானகி, மீரா, சுபத்ரா )

" அலைபாயுதே கண்ணா " என்ற பாடலை காதல் பக்தி விரகம் என்று ம்மொன்று உணர்வுகளும் கலந்து பாடினார்கள்.

ன்றிரவு,

(ஜானகி- ரகுராம் )

" ஹெலோ "

" ஜானு நான் ரகு பேசறேன் "

" சொல்லுங்க ரகு "

" இல்ல வீடு வந்து சேர்ந்துட்டியானு கேக்கதான் "

" ம்ம்ம்கும் மணி 11 ஆகபோகுது இப்போதான் நாங்க வீட்டுக்கு கெளம்புனதே ஞாபகம் வந்திச்சா ? நல்ல நண்பர் எனக்கு வைச்சிருக்கிங்க போங்க " என்று அலுத்துகொண்டாள் ஜானகி.

" அதுவா இன்னைக்கு ஒரு அழுமூஞ்சி  பூஜையில பிரமாதமா பாடினா ... அதை நெனச்சேன் ... அப்படியே மெய்  மறந்துட்டேன் "

" வெவ்வெவ்வெவ்வெவ்வெவ்வெ ...... உங்க ஞாபக மறதியை சமாளிக்க இப்படி ஒரு ஐஸா ? இருந்தாலும் பரவாயில்ல பொலைசுக்குவிங்க ! "

" நீ சொன்ன சரிதான் தாயே ...சரி லேட்டாச்சு  சாங் கேட்டுடு தூங்கு "

"அய்யயோ நீங்க பாட போறிங்களா ? "

" ஏன் நீ ஓட போறியா?"

" ஹா ஹா ஆமா "

" நான் பாட வேண்டிய நேரம் பாடுவேன்... இப்போதைக்கு எஸ் பி பி பாடுவார் ..ஓகே யா ... குட் நைட் மா"

" ம்ம்ம் குட் நைட் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.