(Reading time: 14 - 28 minutes)

 

" போடா நானே பீலிங்க்ஸ் ல இருக்கேன் " - சிவகார்த்திகேயன்

" என்ன ...என்ன பீலிங் கு ???" என்று அனைவரும் கோரஸ் பாட

" இல்ல.... உலகத்துல எந்த மூலையில் பிறந்தவனாக இருந்தாலும் கல்யாணம் ஆகி ஹனிமூன் போகணும்னா ஊட்டிக்கு வருவான் ... ஆனா ஊட்டியில பிறந்து வளர்ந்த நம்ம ஆகாஷ் எங்கடா போவான் ? எங்க போவான் ? " என்று சிவாஜி கணேசன் சாரின் குரலில் அவன் சொல்ல

" ஹோ " என அனைவரும் குரல் கொடுத்தனர் .....

"டேய் நீ சிவாஜி சார் ஸ்டைல பாடாமல் .... உன் ஸ்டைல்ல எங்களுக்காக பாடேன் " என்றான் ஆகாஷ்...

" யு மீன்  கார்த்திக் ஸ்டைல் ? யாரு வேணும் உனக்கு? விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக்கா? இல்ல அலைபாயுதே கார்த்திக்கா ? "

அவனின் குறும்பு பேச்சில் பழைய காலேஜ் டேய்ஸ் நினைவுகள் வர

" ஹான் நவரச நாயகன் கார்த்திக் " என்றாள் நித்யா ...

" என்  குஷ்பூ இல்லாமல் நான் பாடுவதா ? " என்று கார்த்திக் இப்போது நவரச நாயகனின் குரலில் பேச

" ஆமா நித்து...நீயும் அவனும் பாடி கேட்டு ரொம்ப நாள் ஆச்சு எனக்காக பாடேன் " என்றான் ஆகாஷ் ..மனதிற்குள் சந்தோஷமாய் இருந்தாலும் , வெளியில் முகத்தை கடுகடுவென வைத்துகொண்டு அவனை பின்தொடர்ந்தாள் நித்யா .... கார்த்திக்கின் உற்சாகமும், அருகாமையும் அவளை நிகழ்காலத்தை மறக்க செய்து, கடந்த காலத்துக்கு கொண்டு வந்தது ... கார்த்திக்கும் அவளை சீண்டுவதர்ககவே அந்த பாடலை பாட ஆரம்பித்தான் ... ஆனால் போக போக இருவருமே பாடலில் இலயித்து பாடினர் என்றுதான் சொல்ல வேண்டும் ...

கார்த்தி: ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்

உன்ன தாக்குது தேக்குது பூக்குது ஆசைதான்

பிறக்குது சபலம் சபலம்... கொடுப்பது சுலபம் சுலபம்

நீண்ட நாட்களின் இடைவேளைக்கு பின் அவனின் குரலை மிக அருகில் கேட்டவளின் காதல் மனம், பழைய காயங்களை நினைத்து பார்த்தது....

கார்த்தி: மன காயங்கள் ஆராதோ காதலால்தான்

ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்

ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வைதான்

இருவரின் எண்ணங்களும் பின்னோக்கி சென்றன ... கார்த்திக் செய்யும் குறும்புத்தனத்தை  ரசித்து அவள் அவனை " போக்கிரி " என்று அழைப்பதும் ஞாபகம் வந்தது .. இருவரின் பார்வையும் ஒன்றாய் சந்திக்க கார்த்தி பாடலை தொடர்ந்தான்..

கார்த்தி : கல்லூரி காலத்தில நட்டு வைத்த காதல் விதை

காயாகி கனிந்து வரும் காலம் உள்ள காலம் வரை ..

அதே வரிகளில் ஆகாஷும்  சுப்ரியாவை பார்த்தான் ... அவரலை பொருத்தவரை இது அவர்களுக்கான பாடல்.. கார்த்தியின் பார்வையின் மின்னலை எதிர்கொண்டவள் உல்லாசமாய் பாடினாள்

நித்தி : கல்யாண பந்தலுக்கு காத்திருக்கும் வாழை இது

கண்ணா உன் கை அணைக்க பூத்திருக்கும் தாழை இது

" பூத்திருக்கும் " என்று அவள் பாட, அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் ஆசையில் பாடினான்

கார்த்தி : சிங்கார மேனி தான் சொக்க வெள்ளி பால்குடம்

நித்தி :     சிந்தாமல் நீ இதை அள்ளுகிற நாள் வரும்

கார்த்தி : எப்போது ஆரம்பம் அந்தபுர நாடகம் ?

" உன்னால்தானே  இவ்வளவு தாமதம் " என்று செல்லமாய் அவனை திட்டியவள் அவனை பார்த்து கொண்டே பாடினாள்...

நித்தி : ஏன் இந்த தாமதம் ? என்ன சொல்ல காரணம் ?

அவளின் கேள்வியில் அழகாய் சிரித்தவன், ஆத்மார்த்தமாக, பாடினான்

கார்த்தி : காத்திரு கண்ணே கோடி நாட்டலாம் ஹோய்

நித்தி : காதலே வெல்லும் என காட்டலாம் ஹோய்

கண்ணில் நீர் திரையிட ஆனந்தமாய் அவனை கண்டு புன்னகைத்தாள் நித்யா ..... அவனின் கரம் அவளின் கண்ணீர் துடைக்க முன்னேற, அவளே அதை துடைத்து விட்டு " அக்கம் பக்கம் பார்" என சமிக்ஞை செய்தாள்..வேண்டுமென்றே அவன் இரண்டடி தூரமாய் போக, அவள் தொடர்ந்து பாடினாள்...

நித்தி : என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான்

இல்லாமல் தனித்திருந்தால் அம்பு பட்ட பைங்கிளிதான்

அவள் புறம் திரும்பினான் கார்த்தி ...

கார்த்தி : எப்போதும் என் மனது உன்னை சுற்றி கோலமிடும்

தன்னந்தனி என்றிருந்தால்  தத்தளித்து ஓலமிடும்

நித்தி : என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச்சரம்

எந்நாளில் கைவரும் உன்னுடைய மோதிரம் ?

அவனது இடது கை மோதிரவிரலில் அவள் மாட்டிய மோதிரம் இன்னும் இருந்தது ....

கார்த்தி : என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்

பார்த்தாலும் தீருமோ? உன் அழகு நூதனம் ?

நித்தி : காதலால் கூவும் ஒரு பூங்குயில் ஹோய்

அவனருகில் நின்று அவள் பாட

கார்த்தி : பூங்குயில் மேவும் இள ஆண்குயில் ஹோய்

இருவருமே இணைந்து பாடி பாடலை முடித்தனர் .. கேட்பவர்களுக்கு பெய்த இசைமழை தரிசாக இருந்த அவர்களின் காதல் உள்ளத்தை ஈரமாக்கியது ...சண்டை, சமாதனம், ஊடல் , கோபம், கண்ணாமூச்சி இனியும் தேவை இல்லை என்று தோன்றியது இருவருக்குமே..ஒரு வேகத்துடன் கார்த்தியின்  கரம் பிடித்த நித்யா தன் தாய் லக்க்ஷ்மியின் முன் நின்றாள்....

" ன்னடி ? "

" அம்மா "

" சொல்லு "

" நான் உங்க பொண்ணா பேச வரல ... கார்த்தி யுடைய பழைய உயிர்த்தோழி நித்தி யா வந்திருக்கேன் "

" சரீ " என்று கேள்வியுடன் பார்த்தவருக்கு சிரிப்புதான் வந்தது

" உங்க பொண்ணை என் நண்பனுக்கு கட்டி தருவிங்களா ? " என்று அவள் கேட்கவும் கார்த்தியும் லக்ஷ்மி அம்மாவும் சிரித்தனர் ... கார்த்தி நித்தியின் தாயின் தோளில் கை போட்டு

" பதில் சொல்லுங்க அத்தை ..என் தோழி கேள்வி கேட்குறா பாருங்க " என்றான் ....

நித்யா புரியாமல் பார்க்க

" முடியாது நித்தி .. என் மக்கு பொண்ணு நித்யாவை கட்டி கொடுக்க முடியாது "

" ஏன் ?? "

" இன்னுமா புரில ? "

" .. "

" மக்கு பொண்ணே..உங்களை சேர்த்து வைக்கத்தான் நான் சிவாவுக்கு கல்யாண பத்திரிகை அனுப்பினேன்... என் ஒரே பொண்ணை எத்தனை தடவை ஒரே பையனுக்கு நான் கொடுக்குறது ? " என்று அவர் கேட்க ஆனந்தத்தில்  அவரை கட்டியணைத்து முத்தமிட்டாள் நித்தி ... கார்த்தி ஒரு புறம் நித்தி ஒரு புறம், என்று இருவரும்  அவரை அணைத்து நிற்க, கேள்வியுடன் அனைவரும் பார்க்க

(மிச்ச கதையை அடுத்த எபிசொட் சொல்றேன்... மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள் .. அடுத்த எபிசொட் விறுவிறுப்பாக நிறைய கதைகளுடன் வரும் ...பாய் ) 

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.