(Reading time: 20 - 39 minutes)

 

" சொன்னது நீ தானா ? அன்று நடந்ததை  கனவாய் மறந்துவிடு என்றவன் அல்லவா நீ ? இன்று என்னை ஏமாற்றப்பட்டவள் என்று எப்படி சொல்லலாம் ? உன்னை நான் எப்படி அந்த மிருகத்துடன் ஒப்பிட முடியும் ? நீயும் அவனும் ஒன்றா ? என்னால் அப்படி நினைக்கவும் இயலுமா ? " அடிபட்ட பார்வையை பார்த்தாள் முகில்மதி ... என்ன வார்த்தை சொல்லி விட்டேன் ?  என்று கடிந்து கொண்டவன்  அவளிடம் மன்னிப்பு கேட்டான் ..

" மன்னிச்சிரு முகிலா .. நீ என்னை புரிஞ்சுக்கலேன்னு ஆதங்கத்துல சொல்லிட்டேன் .. உனக்கு எப்போ நம்மளை பத்தி பேசி முடிவெடுக்கனும்னு தோணுதோ அப்போ பேசலாம் " என்றவன் அங்கிருந்து சென்றே விட்டான் ..

" சென்று விட்டாயா ? என்னிடம் நீ ஏன் மன்னிப்பு கோருகிறாய் ? ஆம், உன் வார்த்தை அம்புத்தான் ஆனால்  அதை எய்தது நீயல்ல நான் தான் ! என் நிராகரிப்பை உன்னால் எப்படி ஏற்க முடியும் ? அதனால் உதிர்த்த வார்தகைதான் அவை ..மற்றப்படி கனவிலும் என்னை காயப்படுத்தாதவன் நீ " என்று தனக்குள்ளேயே பேசிகொண்டவள் வேகமாய் கோவில்  வாசலுக்கு ஓடினாள்.

தே நேரம்,

மித்ராவுடன் பேசிய உரையாடல்களை பேஸ் புக்கில் பார்த்து படித்து கொண்டிருந்தான் ஷக்தி . இரண்டு நாட்களாக அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை .. அவன் அனுப்பிய மெசேஜ் கூட அவள் இன்னும் திறக்கவில்லை.. முதல் நாள் அவளை தேடியவன் " பிசியா இருக்கா போல " என்று இயல்பாய் எடுத்துக் கொண்டான் .. ஆனால் நேரங்கள் வினாடிபோல கரைந்தோட அவளை தேடியது அவன் மனம் .

அவள்  பேசாமல் இருப்பது எந்த விதத்திலும் அவனை பாதிக்கவில்லை என்று எண்ணியவனுக்கு ஏமாற்றம்தான் கிட்டியது .... அவனே அறியாமல், அவன் அனைவரிடத்திலும் கோபமாய் இருந்தான் .. அவனின் பேச்சில்  ஒருவித எரிச்சல் தொனித்தது .. இரண்டாவது நாளான இன்று காலையில், ஷக்தியை அழைத்தார் அவனது மேனேஜர்..

( ஆங்கிலத்தில் பேசிய  உரையாடல் தமிழில்)

" மே ஐ காம் இன் சார் "

" எஸ் "

" சார் கூப்பிட்டு இருந்திங்களா ? "

" ஆமா ... டெக் யுவர் சிட் மிஸ்டர் ஷக்தி "

" என்ன விஷயம் சார் ? "

" என்னாச்சு ஷக்தி ? "

" புரியல சார் ?"

" ஆர் யு அல்ரைட் ? "

" எஸ் "

" நோ .. ஏதோ பிரச்சனை இருக்கு .. உங்களை எனக்கு 4 வருஷமா தெரியும் .. இப்படி நீங்க எல்லாருகிட்டயும் எரிச்சல் பட்டு வேலை செய்யுற நாட்களை விரல் விட்டு எண்ணிடலாம் "

"..."

" இட் குல்ட் பி யுவர் பெர்சனல் . பட் எதுவா இருந்தாலும் ஜஸ்ட் பேஸ் இட் ... இல்லன்னா உங்களுக்கு நிம்மதியே இருக்காது "

" தேங்க்ஸ் சார் ... நான் பார்த்துக்குறேன் "

" நீங்க இன்னைக்கு வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வாங்க "

" சார் ?? "

" இட்ஸ் ஓகே ஷக்தி ..நீங்க மனசு இல்லாமல் ஏனோ தானோன்னு வேலை செய்றதை விட .. ஒரு நாள் லீவ் போட்டு ரிலாக்ஸ்  ஆகிட்டு அதுக்கு பிறகு நல்லா வேலைய பாருங்க "

" தேங்க்ஸ் சார் "

" டெக் கேர் "

தன் பிறகு தனதறைக்கு வந்தவன் பேஸ் புக்கை பார்த்துவிட்டு அவளின் போனுக்கு  அழைக்க " சுவிட்ச் ஆப் " என்ற பதிலே அவனுக்கு கிடைத்தது ... " ச்ச " என்று செல்போனை கட்டிலில் எறிந்தவன், இலக்கில்லாமல் மடிகணினியில் கேம் விளையாடுவது, யாரிடமாவது பேசுவது, படம் பார்ப்பது, இப்படி நேரத்தை கரைக்க துவங்கினான் ..  (சில நிமிடங்கள் தான் ... பின்ன, ஹீரோயின் இப்படி இருக்கும்போது நாங்க ஹீரோவை சும்மா விட்டு விடுவோமா ? ) தன்னிச்சையாய் அந்த பாடலை அவன் உயிர்பிக்க, அந்த பாடல் காட்சிகளை பார்த்து மீண்டும் உடைந்து போனான் ஷக்தி ..

திமு திமு தீம் தீம் தினம்

அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்

உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்

என் அன்பே நீ சென்றால் கூட

வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்

என் அன்பே என் நாட்கள் என்றும் போல

போகும் போகும் போகும் போகும்

என்னுள்ளே என்னுள்ளே 

தன்னாலே காதல் கணம் கொண்டேன் ..

அந்த பாடல் காட்சியை பார்த்துகொண்டு இருந்தான் ஷக்தி ... " ச்ச என்னடா இது ? " என்று எரிச்சல் பட்டு பாடலை திருப்ப போக, கார்த்திக்கின் குரலில் அந்த பாடல் வரிகள் அவனை கட்டித்தான் போட்டது

உள்ளமே உள்ளமே உன்னை காண வந்தேனே

உண்டாகிறாய் துண்டாகிறாய்

உன்னால் காயம் கொண்டேனே

காயத்தை நேசித்தேனே

என்ன சொல்ல நானும் இனி ?

நான் கனவிலும் வாசித்தேனே

என்னுடைய உலகம் தனி ...

" ஆமா என் உலகம் தனி தான் .. என் உணர்வுகள் தனிதான் .. என் காதலும் தனி உலகில்தான் இருக்குது .. இந்த உலகத்துக்கு என் காதலுக்கு இடமில்லாமல் போச்சு.. நானும் எல்லாத்தையும் மிஸ் பண்றேன் தான் .. என் நாடு , என் குடும்பம், மித்ரா .. இருந்தாலும் என்ன செய்ய ? இது என்னுடைய பாதை .. யாருடனும் சேர முடியாத பாதை " என்று நினைத்துகொண்டான் .. ஏதோ யோசனை வந்தவனாய் முகில்மதியை அழைத்தான் ..

தேவேளை முகில்மதி, அன்பெழிலனை தேடி கோவில் வாசலுக்கு ஓடினாள்....கோபத்தில்  சென்றுவிட்டானோ என்று அவள் பதற, அவனோ புன்னகையுடன் அவள் ஸ்கூட்டி  மீது அமர்ந்திருந்தான் .. சுற்றும் முற்றும் பார்க்காமல் அவனது மார்பில் சாய்ந்தால்தான் என்ன ? என்று ஆவல் கொண்டு அவள் அவன் பக்கம் ஓடி வந்த நேரம் அவளது செல்போன் சிணுங்கியது.. திரையில் " அண்ணா " என்றதை பார்த்ததும் பொங்கி வந்த அவளின் காதல் உணர்வுகள் ஒரு நொடியில் வடிந்துவிட்டது . அவள் முக மாற்றத்தை கண்ட எழிலுக்கு கோபம் வரவில்லை .. ஒரு நொடியென்றாலும் கூட அவள் கண்களில் அவன் காதலை கண்டுவிட்டான்  .. அதுவே அவனுக்கு போதுமானதாய் இருந்தது ..

" ஹெலோ மதி "

" அண்ணா .. எப்படி இருக்கீங்க அண்ணா  ? "

" ம்ம்ம் நல்லாருக்கேன் .... உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு ?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.