(Reading time: 20 - 39 minutes)

 

" ம்ம்ம் ஓகே "

" என்ன ஓகே ? "

" நீ சார்ஜ்ல போடமாட்டேன்னு சொன்னதுக்கு ஓகே "

" எரும .. நீ அடங்கவே மாட்டியா   ? அத்தை பொண்ணு உடம்பு சரி இல்லாம இருக்காளே  அவ மனசு கஷ்டப்பட கூடாதே அதுக்காக போனா போகுதுன்னு  ஒரு ஐ மிஸ் யு சொல்லலாம் ல "

" மிது "

" ம்ம்ம்ம் "

" போன் சார்க்ஜ்ல போட்டியே, யாரு சுவிட்ச் தட்டி விடுவா ? உன் மாமா ஷக்தியா ? "

" ஹே உனக்கெப்படி தெரியும்  ? " என்று சிறுபிள்ளை போல துள்ளினாள் சங்கமித்ரா ..

" ஹா ஹா உன்னை எனக்கு தெரியாதா ? "

அவன் குரலில் இருந்த கனிவா? அல்லது அவன் எடுத்துக்கொண்ட உரிமையா ? ஏதோ ஒன்று அவளை நிம்மதியாக்கியது ..

" மித்ரா"

" ம்ம்ம் "

" உனக்கு என்ன பிரச்சனை ? ஏன் பீவர் வந்திச்சுன்னு எனக்கு தெரியாது .. ஆனா எதுவா இருந்தாலும் இப்படி உடைஞ்சு போகதே ...எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு .. நான் உன்னோடுதான் இருப்பேன் எப்போதும் .. " என்று மனதிற்குள் சொன்னவன்

" நான் இருக்கும்போது இனி இப்படி உடைஞ்சு போகதே " என்று இரத்தின சுருக்கமாய் சொன்னான் ..

 ஷக்தியின் அன்பு பூமிக்குள் இருக்கும் வேர் போல .. பார்ப்பவர் கண்களுக்கு பூக்களும் கனிகளும் தென்பட்டாலும் வேர் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை .,.. அதற்காக வேரே இல்லை என்று பொருள் ஆகுமா ? வேர் தான் உயிரின் ஆதாரம் .. அவன் அன்பும் அப்படியேதான் .. மனதில் அவன் அனைவரையும் வேராக நின்று தாங்கி கொண்டு இருந்தான் .. அப்படிபட்டவனின் அன்பு அவன் வார்த்தையால் வெளிப்படுத்தாத போதே அவளுக்கு புரியும்,...இன்று  அவனோ அதை வார்த்தையாகவே சொல்லிவிட்டான் .. இனி ஒரு கவலை இல்லை என்று அவளின் உள்மனம் சொன்னது .. இப்போதும் அவளுக்கு எதிர்காலம் தெரியாதுதான் ., இப்போதும் அவளுக்கு அவன் மனம் தெரியாதுதான் .. எனினும் இனி தனக்கு கவலையே இல்லை என்பதை போல உணர்ந்தாள் மித்ரா...

" ஷக்தி"

" மித்ரா "

" போடா .. என்னை நல்ல புலம்ப வெச்சு ஒரு செகண்ட் ல சரி பண்ணிடுற நீ "  அவள் சொன்ன வார்த்தையை ஆராயாமல்

" சரி உனக்கு பிடிச்ச ஒரு சாங் டெடிகேட் பண்ணவா ? "

" ஹை எனக்காக நீ பாடப்போறியா ? "

" ஏன் நீ ஓட போறியா ? " என்றான் ஷக்தி ..

மித்ராவிற்கு ஷக்தியை பாட வைத்து கேட்க வேண்டும் என்று ஆசைதான். எனினும் அவனின் கம்பீரமான குரல் பாடல் பாட சரி வராது என்பது ஷக்தியின் எண்ணம் .. அவள் பலமுறை கெஞ்சியும் மிரட்டியும் அவன் பாடியதே இல்லை .. இன்றும் அதேபோல் அவள் கேட்டும் அவன் மறுத்து விட்டான் ..

" அட போடா.. உன்கிட்ட கேட்டேன் பாரு ,.. சரி என்ன பாட்டு ? "

" இரு ப்ளே பண்றேன் " என்றவன் மடிகணினியில் அந்த பாடலை உயிர்ப்பித்தான்..

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே

கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே

தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கிகொள்வேனே

" ஹே போதுமா இல்ல புல் பாட்டு கேட்க போறியா ? "

" ஹா ஹா என்னமோ நீயே பாடுற மாதிரி பில்ட் அப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடா உனக்கு "

" ஆமா யாரோ பீவர் நு சுருண்டு படுத்திருந்தாங்கலாமே யாரும்மா அது ? "

அவன் கேட்டதும்தான் தனக்கு காய்ச்சல் என்பதே அவளுக்கு ஞாபகம் வந்தது... சட்டென நெற்றியில் கை வைத்து பார்த்தாள்...

"  மாமா, எனக்கு பீவர் ஏ காணோம் டா ..எப்படி ? நீதான் ஏதோ மேஜிக் பண்ணிட்ட "

" ஹஹஹஹ அப்படியெல்லாம் இல்ல .. எப்பவும் மனசுக்கும் உடம்புக்கு பெரிய தொடர்பு  இருக்கு "

" சரி அதுக்கு ? "

" அதுக்கு உன் மனசை சந்தோஷமா பார்த்துக்கோ நீயும் நல்லா இருப்ப " என்றான் ..

" என்  மனசே நீதானே " என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள் மித்ரா ...

" இனி பீவர் நா எனக்கு போன் பண்ணு போதும் " என்று சொல்லி நோய் தந்தவனே மருந்தாய் மாறினான் .. அதன் பிறகு  நீண்ட நேரம் பேசிவிட்டு போனை வைத்தான் ஷக்தி .. முகத்தில் புன்னகை மாறாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாள் மித்ரா ..கொஞ்ச நேரம் கழித்து அங்கு வந்த முகில்மதி மித்ராவை ஆசையாய் கட்டிகொண்டாள்...

" அண்ணி"

" தேங்க்ஸ் மதி "

" எதுக்கு அண்ணி ? "

செல்போனை காட்டினாள் மித்ரா...

" நீங்க வேற .. அண்ணி ... அண்ணாதான் இந்த ஐடியாவே தந்தாரு .. அவரேதான் போன் பண்ணி கேட்டாரு உங்களை " என்றதும் மித்ராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

அங்கு ஷக்தியும் அதே  பரவசத்தில்தான் இருந்தான் .. அவளின் புன்னகையில் அவனுக்கு இவ்வளவு பரவசம் இருக்கிறதா ? இருவருமே ஒரே நேரத்தில் அவர்களின் புகைப்படத்தை பார்த்து சிரித்துக் கொண்டனர் ...

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.