(Reading time: 20 - 39 minutes)

 

" து வந்து "

" அழுதியா ? "

" ம்ம்ம்ம் "

" என்னாச்சு ? "

" மித்ரா அண்ணி "

" அவளுக்கு என்ன? "

" .."

" என்னாச்சு "

"அண்ணிக்கு ரெண்டு நாளா காய்ச்சல் அண்ணா .... "

" என்ன திடீர்னு வெள்ளிகிழமை காலைல நல்லாதானே இருந்தா ? "

" நைட்ல இருந்துதான் பீவர் "

" வீட்டுல எதுவும் பிரச்சனையா ? அவளை யாரும் திட்டுனிங்களா? சித்ரா அத்தை எதாவது ?? "

" இல்ல அண்ணா ... நீங்க இங்க வர்றதா அண்ணி சொன்னாங்க ..எல்லாரும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம் .. திடீர்னுதான் அண்ணிக்கு ரொம்ப காய்ச்சல் .. நேத்து எல்லாம் சரி கண் விழிக்கவே இல்ல .. இப்போ பெட்டெர்  தான் .. ஆனா சரியா பேசல அவங்க "

" நான் மித்ரா கிட்ட பேசணும் .. வீடுக்கு போனதும் எனக்கு போன் பண்ணு "

" அண்ணி மயக்கமா இருக்குன்னு சொல்லி யாரோடும் பேசல அண்ணா "

" ஓகே நான் சொல்ற மாதிரி செய் " ( தமையன் சொல்ல, தங்கை கேட்க ரெண்டு பெரும் சேர்ந்து நம்ம மித்ராவை இயல்பாக மாத்திடுவாங்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்)

" குட் மோர்னிங் நிலா பேபி "

" குட் மோர்னிங் அப்பா .. "

" வேலை முடிஞ்சதா ? எங்க இருக்க ? "

" முடிஞ்சிடுச்சு ..,... இதோ இப்போ கிளம்ப போறேன் .. நீங்க உங்க பாக்கியம் கையால காப்பி குடிச்சாச்சா ?"

" ம்ம்ம் ம்ம்ம் அதெல்லாம் முடிச்சாச்சு .. இன்னைக்கு பாக்கியம் ஸ்பெஷல், சக்கரை பொங்கி ரெடி ஆகிக்கிட்டு இருக்கே "

" வாவ் ..... எனக்கு இப்போவே பசி எடுக்குது அப்பா .. நான் உடனே வர்றேன்  ..."

" ஓகே நிலா செல்லம் .. பட் ரொம்ப நேரம் விழிச்சிருக்காமல் சீக்கிரம் தூங்கிடு மா .,... இவினிங் அப்பா உன்னை ஒரு பார்ட்டி கு கூட்டிட்டு போறேன் "

" பார்ட்டியா ? போங்கப்பா செம்ம போர் .... எல்லாம் உங்க ஏஜ் ல இருப்பாங்க.. நிம்மதியா சைட் அடிக்க கூட முடியாது ... "

" ஹா ஹா ஹா ... எனக்காக வா பேபி... எப்பவும் போல உள்ள பார்ட்டி இல்ல ... யு வில் லைக் இட் .."

" ஹ்ம்ம் பில்ட் அப்புக்கு  ஒன்னும் குறைச்சல் இருக்காது சோமசுந்தரத்தின் மகனுக்கு "

" அட வாலு..இவ்வளவு நாளா உங்க அம்மாவை பேரு  சொல்லி கூப்பிட்ட இப்போ என் அப்பாவை இழுக்கிறியா? "

" ஹா ஹா நான் எங்க அப்பாவையே விட்டு வைக்க மாட்டேன் இதுல உங்க அப்பா எம்மாத்திரம் .. ? " என்று சிரித்து கொண்டாள் தேன்நிலா.

இன்னும் சில நிமிடங்கள் தந்தையிடம் பேசி விட்டு வந்தவளின் காரை பார்த்து அதிர்ந்தாள் . டைரி மில்க் சாக்லேட்களை  இதயவடியில் அடிக்கி  அதுனுள் ஒரு அழகான கடிதம் இருந்தது அவளின் கார் மீது .... " யாரிந்த வேலையை பார்த்தா ? " என்று முனகியவள் அந்த கடிதத்தை திறந்தாள்.

அந்த கடிதத்தில் எதுவுமே இல்லை .. ஆச்சர்யமாய் அதை திருப்பியவளின் கண்ணில் பட்டது அந்த குட்டி கையெழுத்தில்  எழுதப்பட்ட வாசகம் ..

" உன்னிடம் நான் கொண்ட காதலை வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியும் என்றால் இத்தனை வருடங்களில் என்றோ சொல்லி இருப்பேனடி! வார்த்தைகளில் அடங்கிவிடாது உன் மீது நான் கொண்ட நேசம் " - நிலவின் நிழல் !

முதலில் படிக்கும்போது குழம்பியவள் - நிலவின் நிழல் என்ற வார்த்தையை பார்த்தவுடனே புரிந்து கொண்டாள்...

" இது அந்த பைக் குரங்கின் வேலைதான் .. நீ லெட்டெர் கொடுத்தா நான் வாங்கி அப்படியே மயங்கிடுவேனா ? " என்று  கேட்டுகொண்டவள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.... அவன் அங்கு இல்லை என்று உறுதி செய்துகொண்டு கடிதத்தை பத்திரப்படுத்தியவள்  சாக்லெட்  அனைத்தையும் எடுத்தாள்..அதே நேரம் சொல்லி வைத்ததுபோல அங்கு சில சிறுவர் சிறுமியர் வர  அவர்களை அழைத்தாள் தேன்நிலா... அவர்களிடம் முதலில் அவள் சாக்லேட் நீட்ட அனைவரும் கேள்வியுடன் பார்த்தனர் .. அவர்களின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவள், " இன்னைக்கு எனக்கு தெரிஞ்சவங்க பர்த்டே ... சோ சாக்லேட் எடுத்துகோங்க" என்றாள்... சிறுவர்கள் அனைவரும் சாக்லேட்டை எடுத்துகொண்டு அவளுக்கு நன்றியை முத்தத்தால் தந்தனர் .. அவளை சுற்றி நின்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் பேச பாட்டாம்பூச்சிகளுக்கு நடுவில் பூவாய் தெரிந்தாள் தேன்நிலா..அதுவரை மறைந்திருந்த மதியழகன் தன் நண்பர்களிடம் ( அதாங்க நம்ம நிலவை சுற்றி நிற்கும் பட்டாம்பூச்சிகளிடம் ) ஜாடை காட்ட அவர்களில் இருவர் அவளின் கண்களை பொத்தி ஏதோ பேச,  மற்ற சிறுவர்கள் அவளுக்கு முத்தமழை பொழிய , சிறுவர்களோடு சிறுவனாய் அவனும் அவளது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு மறைந்தான் .. ஒரே நொடியில் நடந்தாலும் அவனின் மூச்சு காற்றை அவள் உணர்ந்தால்தான் ..  சட்டென அவர்களின் கைகளை விலக்கியவள் இங்கும் அங்கும் பார்க்க அங்கு பெரியவர்கள் யாரும் இல்லை .. " ஒருவேளை பிரம்மையா இருக்குமோ ?" என்று குழம்பிபோனவளை பார்த்து சிரித்து கொண்டான் மதியழகன்..

" கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி " - சரியாய் சொன்னார் பாரதியார்  என்று எண்ணிக்கொண்டான் மதியழகன் .. ஆனால் கள்வெறி கொண்டவன்  அன்றிரவே அவளின் கண்களில் அகப்படுவான் என்பதை இருவருமே அறியவில்லை !

ல்லாரையும் போன எபிசொட் ல பார்த்தாச்சு .. நம்ம கதிரேசன் மட்டும் விட்டுவைப்பானேன் .. வாங்க அவரையும் பார்ப்போம்.... அந்த ஐ டி கம்பனியில்  கதிரேசன் சேர்ந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.... அவனின் கலகலப்பான பேச்சிலும் திறமையிலும் ஒரு ஆரோக்யமான நம்பகத்தன்மையான நட்பு பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தான் அவன் ..... அதே நாள் அவனது ஆபீசில்,

" டேய் மச்சான் " - ரிஷி

" அட அவசரத்துக்கு பொறந்தவனே .. எனக்கு இருக்குறதே ஒரே ஒரு இதயம் .. அதையும் நீ வெடிக்க வெச்சிடுவ போல .. கொஞ்சம் மெதுவாத்தான் கூப்பிடேண்டா " என்றான் கதிரேசன் தனதறைக்கு அதிரடியாய் வந்த நண்பனை பார்த்து ..

" விடு மச்சி ... இப்போ அதுவா முக்கியம் ? "

" அட பாவி என் ஹார்ட் எனக்கு முக்கியம் இல்லையா ? "

" யாரு இல்லைன்னு சொன்னது .. ஆனா உன் ஹார்ட் இனி உன்கிட்ட இருக்காது "

" என்னடா உளறுற ? "

" அந்த பி பி எஸ் பி இங்கயும் வந்துட்டாடா "

" டேய் நிஜம்மாவா ? எங்க ? "

" அதோ அங்க பாரு " என்று ரிஷி கைகாட்டிய இடத்தை ஜன்னல் வழியாக பார்த்தான் கதிர் .. அவர்களின் தோழி அகிலாவிடம் பேசிகொண்டிருந்தாள் பி பி எஸ் பி என்று கதிரின் நண்பர்களால் அழைக்கப்படும் காவியதர்ஷினி !. பி பி எஸ் பி  என்பது என்ன  அந்த பொண்ணு யாருன்னு சொல்லுறேன் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.