(Reading time: 20 - 39 minutes)

 

திரேசன் சென்னைக்கு வேலைக்கு வந்து இங்கு உள்ள வாழ்கை முறைக்கு தன்னை தயார் படுத்தி செட்டல் ஆகா கிட்ட தட்ட 3 மாதங்கள் ஆனது ..கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு  பிறகு ஒரு நாள்தான் அவன் காவியதர்ஷினியைப் பார்த்தான் .. அதன் பிறகு தினம் தினம் அவன் அவளை எங்கேனும் பார்க்க நேர்ந்தது.. முதலில் இது தற்செயலாய் நடக்கிறது என்று நம்பியவன் எதையும் பெரிது படுத்தவில்லை .. ஆனால் அவள் அவனை தொடர்வதை அவனது நண்பர்கள் கண்டுகொண்டனர் ..

" கொடுத்து வெச்சவன் டா நீ .. நாங்கெல்லாம் கண்ணு முன்னாடியே நின்னாலும் எங்களை ஒரு பொண்ணு பார்குதா பாரு ? ", " அவ உனக்கு தெரிஞ்ச பொண்ணா ? ", " மச்சான் உன் நிழல் வந்துட்டா பாருடா " இப்படி தினம் ஒரு கேலி கிண்டல்தான் .. அவள் எப்போதும் தனது பிங்க் பெப்ட் ஸ்கூட்டியில் வருவதால் அவளை பிங்க் பெப்ட் ஸ்கூட்டி பொண்ணு என்று அழைத்து அதையே சுருக்கி பி பி எஸ் பி என்று பெயரும் வைத்தனர் .. சில நாட்கள் அவள் அவனை தொடராமல் இருப்பதும் உண்டு .. ஆனால்  அது நிரந்தரமாய் இருக்காது ..

அவளிடம் பேசி விட நினைப்பான் கதிரேசன்.. ஆனால் அவளின் பார்வையில் நிச்சயம் காதல் இல்லை .. எதையோ பறிகொடுத்துவிட்டு உயிரை தேக்கி வைத்து ஒரு பார்வை பார்ப்பாள் .. என்றாவது அவன் அவளின் பார்வையை எதிர்கொண்டு விட்டாலும் அன்றிரவு அவனுக்கு தூங்கா இரவுதான் .. " தெரியாத பெண்ணை ஏன் தவறாக எண்ண வேண்டும் " என்று நினைத்தவன் ஒதுங்கியே இருந்தான்.

ஆனால் அவளோ வந்துவிட்டாள்... அவன் வேலை செய்யும் அதே இடத்தில் அவனுக்காகவே ! ( இனி என்னென்ன நடக்குமோ? அது போக போகத் தெரியும் )

ன்றிரவு,

" ஹெலோ அண்ணா "

" ம்ம்ம் "

" சாப்டாச்சா அண்ணா ? "

" இங்க இன்னும் டைம் ஆகலை மதி ... மித்ரா எங்க ? "

" இதோ ..ரெண்டு நிமிஷத்துல அண்ணி ரூம்ல இருப்பேன் "

" சரி நான்தான் லைன் ல இருக்கேன்னு சொல்லாத "

" ஓகே அண்ணா "

 மித்ராவின் அறையில்,

அறை கதவிற்கு முதுக காட்டியபடி திரும்பி படுத்திருந்தாள் மித்ரா .. காய்ச்சல் ஒரு புறம், மனக்கவலை ஒரு புறம் என்று ஓய்ந்து போயிருந்தாள் அவள் . புயலில் சிக்கி மண்ணில்  விழுந்த மலர் போல, பொலிவிழந்து, மகிழ்ச்சி என்றால் என்ன? என்று கேட்பது போல இருந்தது அவளின் தோற்றம் .. முகில்மதி கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்...

 " அண்ணி "

" ம்ம் " 

" உங்களுக்கு போன் "

" ப்ச்ச்ச்... என்னால பேச முடியாது மதி "

" இப்படியே படுத்திருந்தா மயக்கமாகவே தான் இருக்கும் அண்ணி .. கொஞ்சம் அக்டிவ் ஆகுங்க "

ஒரு சோக புன்முறுவலை பூத்தவள்,

" நாளைக்கு பார்க்கலாம் " என்றுவிட்டு மீண்டும் திரும்பி படுத்து கொண்டு கண்மூடினாள்.... ஷக்தி சொன்னது போல அந்த போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு அந்த போனை அங்கேயே வைத்துவிட்டு

தான் அங்கிருந்து  நகர்வதை ஷக்திக்கு மறைபொருளாய் தெரிவு படுத்தினாள்...

" சரி நான் வரேன் அண்ணி " அவள் தனக்குத்தான் சொல்கிறாள் என்று எண்ணியவள் " ம்ம் " என்றாள்....

செல்போனை கவனிக்காதவள் " ஷக்தி.... ஷக்தி .. " என்று அரற்றி கொண்டிருந்தாள்.

" மித் ....ர ஆஅ " என்று பொறுமையாய் அழைத்தான் ஷக்தி .. அவனின் குரல் கேட்டதுமே எழுந்து அமர்ந்து இங்கும் அங்கும் பார்த்தாள்.. யாரும் அங்கு இல்லை என்றதும் வாய்விட்டே பேசினாள்..

" ஷக்தி .. நீ என்கிட்ட பேசுற மாதிரி எனக்கு தோணுது டா .. ஏண்டா இப்படி எல்லாம் ? கடைசியில நான் பைத்தியமாகவே ஆகிட்டேனா ? "

அவளின் சோகக்குரல் அவனுக்கு உவப்பாக இருந்தது .. ஏன் இப்படி ஆனாய் ? என்று கேள்வி கேட்டவன் அவளிடம் பேச தொடங்கினான் ..

" ஹா ஹா ஹா .. நீ எப்பவுமே லூசுதானே என் அத்தை பொண்ணே " என்று அவனின் குரலை கேட்டதும் சூரியனின் பார்வை பட்ட பனியாய் கரைந்து விட்டது அவளின் துயரம் .. இங்கும் அங்கும் பார்த்தவள் அப்போதுதான் அந்த போனை பார்த்தாள்...

" அடியே இன்னுமாடி தேடுற ? பக்கத்துல செல்போன் இருக்கு பாரு "

" ஷக்தி மாமா ....... "

" ஆமா ஆமா.. ஷக்தி மாமா தான் .. "

".."

" என்ன ஆச்சு என் அத்தை  பொண்ணுக்கு ? காய்ச்சல் வந்துடுச்சாமே ..கோவை சரளா மாதிரி மழையில் நனைஞ்சயா ? "

" ஒய் நான் உனக்கு கோவை சரளாவா ? "

" பின்ன நீங்க என்ன மழை ஸ்ரேயா வா மேடம் ? "

" பொறாமை பிடிச்சவன் "

" யாரு "

" நீதான் "

" இருக்கட்டும்  "

" சி போடா "

" ஓகே "

" ஆரம்பிச்சுட்டியா ? "

" ஹா ஹா என்னது ? "

" நல்லாதானே பேரரசு படம் ஹீரோ மாதிரி பேசுற அப்பறம் ஏன் டக்குனு மணிரத்தினம் பக்கம் குதிக்கிற ? "

" நீ கூடத்தான் கோவை சரளா மாதிரி இருந்துட்டு திடீர்னு காந்திமதி மாதிரி ஆகிட்ட "

" ஷக்தி நீ என்கிட்ட அடி வாங்க போற "

" ஹா ஹா ... சாப்டியா அம்மு ? "

" ம்ம்ம் சாப்டேன் டா .. உன் அத்தை இதான் சாக்குன்னு எனக்கு பழைய சோறு கஞ்சி வெச்சு தந்துட்டாங்க "

" ஹஹஹஹ உனக்கு அதையும் தராமல் இருக்கணும்டி .... நான் அத்தைகிட்ட சொல்லுறேன் "

" ஏற்கனவே எங்கம்மா அந்த பிளான் ல தான் இருக்காங்க ஷக்தி .. நீ எப்படி இருக்க ? ஐ மிஸ் யு டா "

" ம்ம்ம் சரி மிஸ் பண்ணிக்கோ .... இப்போ முதல் வேலையா உன் செல்போனை எடுத்து சார்ஜ்ல போடு "

" அதென்ன மிஸ் பண்ணிக்கோ ? நீ மிஸ் பண்ணலையா ? அப்போ என் போன் ல சார்ஜ் இருந்தா  என்ன இல்லாட்டின்னா உனக்கென்ன ? நான் போடமாட்டேன் போ " என்றவள் பேசிக்கொண்டே செல்போனை தேடி  சார்ஜில் போட்டாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.