(Reading time: 36 - 72 minutes)

 

" ல்லை " என தலையசைத்தார் பாட்டி ..

" பிறகென்ன ? "

" எங்கடா போன நீ ? "

" நிலாவை பார்க்க போறேன்னு சொன்னேனே பாட்டி "

" அதுக்காக இப்படி வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் தூங்கி உடனே எழுந்து ஓடணுமா ? உன்னை பத்தி உனக்கு அக்கறையே இல்லடா "

" என்மேல அக்கறை காட்டத் தான் நீ இருக்கியே " என்றவன், அவரை அமர வைத்துவிட்டு காய்கறிகளை நறுக்கித் தந்தான் .. அவன் சொன்ன விதத்தில் மீண்டும் பாட்டியின் விழிகளை மறைத்தது கண்ணீர்த்துளிகள்..

" பச்ச் .. இப்போ என்னாச்சுன்னு  அழற ? "

"  அழாம என்ன பண்ணுறது ? எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு இருக்க .. அப்பன் ஆத்தாவை விட்டுட்டு என்னோட இருக்கறதுல எனக்கு சந்தோஷம்தான் .. ஆனா நீ இப்படி உன்னை பத்தி கவனிக்காம இருந்தா, என் சுயநலத்துக்காக உன்னை நான் கெடுக்குற மாதிரி ஆகிடும் "

" சீரியல் எதாச்சும் பார்த்தியா அம்மு ?? "

" டேய் .. !!!! "

" பின்ன என்ன ? எதுக்கு இப்போ அழற ? இதென்ன புதுசா நடக்குதா ? நானும் நீயும் அவங்களை விட்டுட்டு சென்னை வந்து ஒரு வர்ஷம் மேல ஆகப்போகுது ... இந்த வாழ்கை முறையை நான்தானே தேடிக்கிட்டேன்.. சரியோ தப்போ இதை நான் நிம்மதியா வாழுறேன் .. வேளாவேளைக்கு சாப்பிட்டு நல்ல தூங்குறது தான் வாழ்க்கைனா, கும்பகர்ணனைத் தவிர வேற யாரும் நிம்மதியான வாழ்கையே வாழல"

" அதானே உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா ? "

" தெரியுதுல .. அப்பறம் ஏன் வாய் கொடுக்குற நீ ? "

" உன் அப்பா போன் பண்ணான் "

" என்னவாம் ? அவர் கம்பனி பத்தின டிடைல் எல்லாம் நான் இமெயில் பண்ணிட்டேனே "

" டேய் ஒரு அப்பனுக்கு மகன்கிட்ட கம்பனியை தவிர பேச வேற எதுவும் இருக்கிறதா ? பணம் தான் அவன் தேவையா ? "

" அது போன வருஷம், இனி இந்த ஊருல இருக்க முடியாது .. நாங்க சிங்கப்பூர் போறோம்னு உன்னை அம்போன்னு விட்டுட்டு  போனாரே அப்போ அவருக்கு தெரியாதாமாம் ?? "

" ஏதோ அப்போ அவனுக்கு அவ்ளோ யோசிக்கத் தோணல கெளம்பிட்டான் .. ஆனா இப்போ அவன் வரான் வரான்னு சொல்லியும்  நீதான் வேணாம்னு தடை போட்டு வெச்சிருக்கியே  ? "

" இது பாரு அம்மு, பாசம் அன்பு இதெலாம் தானா வரணும்.. ஒருத்தர் சொல்லியோ இல்ல அடிபட்டோ வரக்கூடாது .. இத்தனை வருஷம் நீ வளர்த்த வளர்ப்பில் வராத அன்பு அவர் வளர்த்த பையன் நான் பிரிஞ்சு போனதும் தானே வந்திச்சு ? அதுல எப்படி உண்மை இருக்கும்னு சொல்லுற ? "

தன் பேரனின் அன்பில் நெகிழ்வதா  இல்லை பிரிந்த குடும்பத்தை  சேர்ப்பதா ? என்று புரியாமல் இருந்தார் பாட்டி .. அதுவே அவருக்கு கோபம் மூட்ட ,

" ஆமா, இப்போ எனக்காக நீ அவங்களை தூக்கி எரியலையா ? உனக்கும் அவனுக்கும் என்னடா வித்தியாசம் ?" என்றார் கோபமாய் .. கையில் இருந்த கத்தியை கீழே வைத்தவன் மேஜையில் ஒரு கை , பாட்டி அமர்ந்த நாற்காலியில் ஒரு கை வைத்து அவரை கூர்ந்து பார்த்தார் ...

சட்டென சிரித்தவன்

" ஓஹோ கோபப்படுறியாக்கும்? ஹா ஹா ... எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய் அம்மு " என்றான் .. சிறிது இடைவெளி விட்டு

" இது பாரு அம்மு .. நான் ஒன்னும் உன் புள்ள மாதிரி கல் நெஞ்சுக்காரன் இல்ல ... அவசரத்துல அவர் எடுத்த முடிவு எவ்ளோ தப்புன்னு பிரிவின் மூலம் புரிய  வைக்கிறேன் .. முழுசா உதறிடனும்னு நெனச்சா, இங்க இருக்குற அவர் கம்பனி  பொறுப்பை எல்லாம் நான் எடுத்துருக்கவே மாட்டேன் "

"  அதுக்கும் தானே சம்பளம் வாங்கிக்கற நீ ? "

" அது என் spark FM  காக ... ஒரு அப்பாவா என் சொந்த வேலைக்கு அவர் பணம் தரலாம்தான் .. ஆனா எனக்கு அதுல இஸ்டம் இல்ல .. அதுனாலத்தான் கம்பனி நிர்வாகத்தை ஒரு வேலை மாதிரி  செஞ்சு அதுல வர்ற சம்பளத்துல என்னுடைய  spark fm உருவாக்கினேன் "

" ஒரு பக்கம் மதியழகனா, உன் அப்பா தொழிலை பார்குற , முதலாளிய இருக்க, இன்னொரு பக்கம் அழகன்னு RJ  வேலை பண்ணுற ... உன்னோடு வேலை பண்ணுறவங்களுக்கே தெரியாது நீதான் அந்த ரேடியோ ஸ்டேஷன் நடத்துரன்னு... எதுக்கு டா கண்ணா இப்படி ஓடிகிட்டே இருக்க ?? "

" அதான் நீயே சொன்னியே கண்ணான்னுl... அவர் எந்த காலத்துல ஒரு இடத்தில் நின்றிருக்கார்?? "

"..."

" சரி சரி முறைக்காத .......... பாட்டி இது உழைக்கிற காலம் .. நல்ல உழைக்கிறேன் ... எனக்கு இதில்  கஷ்டம் இல்லையே..ஒரு பக்கம் மதியழகனாய் சீரியசா என் வேலையை கவனிக்கிறேன்.. எனக்கே ஒரு ப்ரேக் வேணும்னு தோணும்போது டக்குனு அழகனாய் மாறி ரேடியோ ல பேசறேன்.. எனக்கு ரெண்டுமே பிடிச்சிருக்கு பாட்டி .. . அதுவும் இப்போ என் தேவதையை வேற பார்த்துட்டேன் "

தேவதை என்றதும் பாட்டியின் முகத்திலும் அப்படி ஒரு பிரகாசம்

" மகராசி .. அவ வந்துதான் உன் வாழ்க்கை மாறணும்னு இருக்கோ என்னமோ ? "

" ஹா ஹா அவ என்னை மாத்துறாளா இல்ல அப்படியே ஏற்றுகிட்டு  காதலிக்கிறாளான்னு போக போக பார்ப்போம் " என்று சிரித்தவன்

" என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்கத் தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ" என்று பாடிக் கொண்டே நடந்தான் ..

சட்டென நின்றவன்

" அம்மு இன்னைக்கு நைட் ஒரு குட்டி பார்ட்டி  இருக்கு ... எல்லாம் உங்க புள்ள கம்பனி விஷயமாகத்தான்.. சோ மாறுவேடம் பூண்டு  அங்கேயே தங்கிட்டு காலைல தான் வருவேன் .. ஒழுங்கா சாப்பிட்டுடு  தூங்கனும் ... போர் அடிச்சா  ஷாந்து குட்டி கூட பேசிட்டு இருங்க ..நான் வர்ஷு அக்காகிட்ட  சொல்லிட்டு" போறேன் என்றான்..

ஒரு பெருமூச்சுடன் தலையசைத்து வைத்தார் பெரியவர் .. இப்போதைக்கு  அவரால் முடிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டார் அம்மு பாட்டி ..

( இவங்க அன்றைய இரவை எதிர்நோக்கி காத்திருக்க, அந்த கேப்ல நாம நம்ம கதிரின் ஆபீஸ் கு போவோம் )

" ம்ப முடியவில்லை வில்லை வில்லை ... " - ரிஷி

" ஷாபா... எவண்டா உனக்கு ரிஷின்னு பேரு வெச்சது ? இடியமீன் நு வைச்சிருக்கலாம் ல ..... எப்போ பார்த்தாலும் ரூம்குள்ள வரேன்னு சொல்லி பெரிய தீவிரவாதமே பண்ணுற நீ " -கதிர்

" மச்சான் என்னத்தான் இருந்தாலும் என் அப்பாவை டா போட்டு பேசாதடா ... அவர் என்னை பெற்று வளர்த்த தியாகி அல்லவா? " என்றான் ரிஷி நாடகபாணியில்...

" அதென்னமோ ரைட்டுதான் .. சரி உன்னாலே என்ன நம்ப முடியல ? "

" எல்லாம் நம்ம பி பி எஸ் பி தான் " என்றவுடன் நண்பனின் முகத்தில் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த கதிரின் முகத்தில் கோபம் பரவியது .. சட்டென முகத்தை திருப்பிக்கொண்டு பார்வையின் கணினியின் மீது பதித்தான் ...

" மச்சான் "

" ம்ம்ம்ம்ம் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.