(Reading time: 36 - 72 minutes)

"ச்சி வெயிலில் ஓடி ஆடி திரிஞ்சு வரும்போது அம்மா கையால மோர் குடிச்சா எப்படி இருக்கும் .. அப்படி இருக்கு ஹனி எனக்கு உன் முகத்தை பார்க்கும்போது ... பாட்டி சொன்ன மாதிரி எல்லாத்தையும்  விட்டுட்டு உன் மடியில படுத்து தூங்கனும் போல இருக்குடீ குட்டிமா .. எங்க இருக்க?? " என்று அவன் சொல்லி முடிக்கும் நேரம் தன் தந்தை இருக்கும் அறையென நினைத்து அவனறைக்குள் நுழைந்து அவனின் ஏக்கத்தை தீர்த்தாள் தேன்நிலா !! பாடல் தொடர்ந்தது

நீ வந்ததும் மழை வந்தது

 நெஞ்செங்கும்  ஆனந்தம் ,

நீ பேசினால் என் சோலையில்

 என்றென்றும்  பூ வாசம் ,

என் காதல் நிலா  என்று வாசல் வரும் ,

அந்த நாள் வந்துதான் , என்னில் சுவாசம் வரும் ,

என் அன்பே - - , என் அன்பே - -

" என் காதல் நிலா என்று வாசல் வரும் ? அந்த நாள் வந்துதான் என்னில் சுவாசம் வரும்  " அந்த பாடல்வரி ஒலிக்கையில் தன் உயிரையே பார்வையில் தேக்கி வைத்து அவளிடம் யாசகம் கேட்டு நின்றான் மதி .. ஏனோ அவளுக்குமே அவனை பார்த்தா அதிர்ச்சி ஒரு புறம், அந்த பாடல் ஒரு புறம் அவனின் பார்வை ஒரு புறமென இம்சித்தது..

சேர்த்து வைத்த கோபங்கள் " என்னை மறந்துவிட்டாயா ? " என்றது ..

அந்த மௌனத்தை மதியே கலைத்தான் ..

" ஹே ஹனி.... வா வா வா ... எப்படி என்னை கண்டுபிடிச்ச ? "

" நீ என்ன அமெரிக்கா வா ? நான் கொலம்பஸ???"

 " ஹா ஹா .. அங்கிளை தேடி தப்பா வந்துட்டியா ? " என்று நொடிபொழுதில்  கண்டுபிடித்துவிட்டான் மதி

"  அப்பாவை உங்களுக்கு தெரியுமா ? "

" உன்னை தெரிஞ்ச பிறகு, உன்னை சம்மந்தபட்ட எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன் டா "

" ஷட் அப் மிஸ்டர் மதியழகன் "

" வாவ் என் பேரை தெரிஞ்சுகிட்ட போல"

" ஏன் நேம் ப்ளேட் உன் டெபல் மேலதானே இருக்கு .. அப்பறம் என்ன ? "

" சரி ...கூல்... இப்போ என்மேல என்ன கோபம் உனக்கு? நான் என்ன பண்ணேன்?? "

" நீ என்ன பண்ணணு உனக்கு தெரியாதா ?" என்றவள் கன்னத்தில் விரல் வைத்து காட்டினாள்...

அதுதான் சாக்கென அவள் அருகில் வந்தவன்

" கன்னத்துல என்னடா காட்டு " என்றபடி அவளை தொட வந்தான் ..

" ஜஸ்ட் ஸ்டாப் இட் மிஸ்டர் மதியழகன் .. உங்க பணக்கார புத்திய என்கிட்ட காட்டாதிங்க ...." இடியென அவள் சொன்னதில் அங்கேயே நின்றான் மதி ..

" நம்ம முதல் சந்திப்புல ஏதோ விளையாட்டுக்கு அப்படி பேசுனிங்கனு விட்டுட்டேன் .. ஆனா இன்னைக்கு நீங்க நடந்துகிட்டது ரொம்ப அதிகப்படி .. எந்த உரிமையில என்னை நெருங்கி வரிங்க ? பணம் படைச்சவருன்னு நான் அமைதியா இருப்பேன்னு நெனைச்சிங்களா ? அதென்னா  ஒரு பெண்ணோட மனசுக்கு முன்னுரிமை தராமல் நடந்துகிறது ? ஹொவ் டெர் யு ? " என்று அவள் ஏகவசனத்தில் பேச கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார் மனோ ..

" ஹே பேபி.. என்ன பொண்ணு மா நீ .. நான்  முதல்ல இருந்து நிலா நிலான்னு கூப்பிடுறேன் .. நீ என்னடான்னா திரும்பி பார்க்காமல் இங்க வந்துட்டியே ?? "

" சாரி மதியழகன் ... இவ என் பொண்ணுதான் தேன்நிலா "

" ஓ இட்ஸ் ஓகே சார் " என்றவன் மருந்துக்கும் அவள் புறம் திரும்பவில்லை .. அவளேதான் " போ " என்றாள் ஆனால் அவளின் மனமோ " முட்டாள்" என்று வசைப்பாடியது ..

முதலில் கொஞ்சம் திணறித்தான் போனான் மதியழகன் .. கண்களை மூடி கேசத்தை அழுந்த கோதியவன், அவளின் வார்த்தைகளை அசைப்போட்டான் ..

" பணக்காரத்திமிர்......... எந்த உரிமையில் வர்ரிங்க ??? பணம் படைத்தவன் ...... அதென்னா  ஒரு பெண்ணோட மனசுக்கு முன்னுரிமை தராமல் நடந்துகிறது " எங்கோ அவனுக்கு பொரித்தட்டியது .. அவள் மனம் அறியாமல் அவளுக்கு முத்தமிட்டது தவறுதானே?? என் காதல் என்னுடைய எண்ணம் என்றால் அவளுக்கும் காதலில் முழு உரிமை இருக்கிறதே ... எனக்கு பிடித்தவள் என்று நான் உரிமை எடுத்து கொண்டதும் தவறுதானோ ? ஆனா ராட்சசி இப்படி மயக்கி தொலைச்ச நான் மட்டும் என்ன பண்ணுவேன் ? நான் மனுஷன் இல்லையா ?? பணக்கார திமிர் ?? ஏன் இந்த கோபம் .. அப்போ அவளுக்கும் என்னை மாதிரி  பணம் பிடிக்கலைன்னு தானே அர்த்தம் ... அவளும் இந்த வசதிகளை விரும்பலேன்னு தானே அர்த்தம் .. அட என் செல்லமே .. எனக்கும்தாண்டி  இதுல இஸ்டம் இல்ல ..... வா நாம லவ் பண்ணி ஓடி போலாம் " என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் , மீண்டும் இயல்பானான் .. ஜன்னல் வழியே கீழே அவள் இருக்கிறாளா என்று பார்த்தவனை ஏமாற்றாமல் அங்கு நின்றாள் நிலா ..

" இன்னும் என்ன செய்யுறா இவ இங்க ? " என்று யோசித்துக்கொண்டே மின்னல் வேகத்தில் கீழே வந்தான் ..

" எப்பவும் எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்க முடியாது பா.. "

" ரிலாக்ஸ் பேபி .. வண்டி ஸ்டார்ட் ஆகலன்னா நான் என்ன பண்ணுவேன் ? "

நிஜம்தான் ...! ஏனோ அவளுக்கு அவள் மீதே கோபம் வந்தது .,.அதை காட்டத் தெரியாமல் தன் தந்தையை அதற்கு பலியாக்கி கொண்டிருந்தாள்... அவன் கண்ணுல பொய் இல்லை .. என்னை அடிமை படுத்தவும் நினைக்கல .. அவனை அறைஞ்சிருந்த கூட மறந்திருப்பானோ இல்லையோ , இப்படி வார்த்தைய கொட்டிட்டேனே... அவன் முகமே சோர்ந்து போச்சு .. ச்ச ... என்று அவள் காலை உதைத்துக் கொண்டு கைகட்டி நிற்கவும் மதி வரவும் சரியாய் இருந்தது . ஏதோ உறுத்த, அவன் புறம் அவள் திரும்ப, இயல்பாய் சிரித்தான் மதியழகன் ...

" என்னாச்சு மனோ சார் ? "

" கார் ஸ்டார்ட் ஆகல பா "

" இவ்ளோ தானே நான் ட்ரோப் பண்றேன் "

" எது உன் பைக்லையா ? " என்று மனதிற்குள் கேட்ட நிலா, மூணு பெரும் ட்ரிபல்ஸ் அடிச்ச எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணினாள்... ( இந்த ரணகலத்துளையும் ஒரு கிளுகிளுப்பா ? )

" உங்களுக்கெதுக்கு சிரமம் .. "

" சிரமம் தான் " "

"??"

" இப்படி நீங்க வாங்கன்னு பேசினா சிரமம் தான் .. சும்மா உங்க வீட்டு பையன் மாதிரி இயல்பாக பேசலாமே "

" சரிதான் மதி ... "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.