(Reading time: 36 - 72 minutes)

 

" ம்ம் பைன் "

" என்ன திடீர்னு  போன் ? என் ஞாபகம் லாம் வருதா உனக்கு ? "

" டேய் .... அதென்ன நக்கலா கேட்குற ? உங்களை நான் நினைக்காத நாள் இருக்கா ? "

" டைலாக் கு ஒன்னும் பஞ்சம் இல்ல ஷக்தி உனக்கு .. ஆனா வீட்டுக்கு மட்டும் வந்திடாமல் எங்களுக்கு டிமிக்கி காட்டு "

" ஓ காட்... மித்ரா உங்க எல்லாரையும் வாயாடி ஆக்கிட்டா போல "

" ஹா ஹா ,..ஒரு ரெண்டு வார்த்தை பேசுற உன்னையே கொஞ்சம் நல்ல பேச வைச்ச நம்ம அத்தை பொண்ணு, என்னை பேச வைக்க மாட்டாளா ? "

" ம்ம்கும்ம்ம் " - ஷக்தி

" சரி டா .. என்ன விஷயம்னு சொல்லலியே நீ ? "

" நான் இன்னும் 20 டேஸ் ல இந்தியா வரேன் "

" ஹே நிஜம்மாவா ??????" என்று ஆர்வத்தில் சத்தமாய் பேசிய கதிரேசனின் குரல் அந்த அறையை நிரப்பியது ....

" ம்ம்ம் எஸ் "

" சூப்பர் .. லீவ் போட்டியா ? ஒரு வார்த்தை சொல்லியே டா ?..30 டேஸ் நா எக்ஸாக்ட்லி எப்போ ?? நானும் லீவ் போடுறேன் ..எத்தனை நாளு இருப்ப ? உனக்காக ரிசைன் கூட பண்ணிட்டு வந்திடுவேன் .. மிஸ் யு டா .. " என்றான் இளையவன் ஏக்கமாய் ..

" நானும்தான் கதிர் .. எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு ... மித்ரா ஒன் வீக் வர சொன்னா.. பட் நான் ஒன் மாந்த்  அங்கத்தான் இருப்பேன் ... அவகிட்ட சொல்லாதே .... எக்ஸாக்ட்லி நியூ யர் அன்னைக்கு அங்க இருப்பேனடா .. நீயும் வந்திடு ... சஸ்பென்சா இருக்கட்டும் ...முக்கியமா மித்ராவுக்கு தெரியவேணாம் .. அவ கேட்டா நான் ஒரு வாரம் வருவேன் பட் எப்போன்னு தெரியலன்னு சொல்லிடுவேன் "

" அவ கிட்ட வம்பு பண்ணாமல் உனக்கு தூக்கம் வரதே.... மித்ரா கிட்ட அடி வாங்கினாதான் உனக்கு நிம்மதியா? "

" ஹா ஹா .. எல்லாம் உனக்கு தெரிஞ்ச விஷயம்தானே.. அப்பறம் என்ன கேள்வி ?"

" சரிதான்பா.. அப்போ நானும் என் லீவ் கு அப்ளை பண்ணுறேன்.. ரொம்ப சந்தோஷம்டா.. அப்போ அடுத்த வருஷம் புத்தாண்டு, பொங்கல், உன் பிறந்தநாள் எல்லாமே ஒண்ணா கொண்டாடலாமே ... "

" எஸ் எஸ் ... போகி கூட கொண்டாடலாம் கதிர் .. "

" என்னை நெருப்புல போட ப்ளான் போடுறியா ? மவனே ....இப்போவே மித்ரா கிட்ட உன் பிளானை சொல்லிடுவேன் "

" ஐயோ என் உடன் பிறப்பே .. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்வாங்க .. அதை காப்பாத்து "

" சரி சரி கெஞ்சாதே டா எனக்கு சிரிப்பு சிறிபா வருது " என்று தமையுடன் சேர்ந்து சிரித்தவன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு மனநிறைவுடன் போனை வைத்தான் .. அவனுடன் பேசி முடித்த ஷக்தியும் நாள்காட்டியை பார்த்தான் ... " ஹ்ம்ம்ம்ம் இன்னும் 20 நாள் " என்று பெருமூச்சுவிட்டான் ..

ன்றிரவு,

உல்லாசமாய் துள்ளி குதித்து கொண்டு இருந்தாள் மித்ரா.... எல்லாம் அவளின் ஷக்தியிடம் பேசிய மகிழ்ச்சியில்தான் ... வீட்டு தோட்டத்தில் அமர்ந்து ஊஞ்சலாடியவள்,  அவர்கள் போனில் பேசியதை சிரித்துக் கொண்டே அசைப்போட்டாள்...

" ஷக்தி ...மாமா ............"

" சொல்லு "

" ..."

" ஹெலோ இருக்கியா ? "

" போடா .... "

" ஹா ஹா என்னாச்சு ? "

" ஏண்டா படுத்துற ? சொல்லும்மா அத்தை பொண்ணு நு சொன்னா ரெண்டு கிலோ குறைஞ்சா போக போற நீ ? "

" ஆமா குறைஞ்சுத்தான் போவேன் .. அப்பறம் என் அத்தை பொண்ணு ரத்தினம் மனசு கஷ்டப்படுமே "

" டேய் ... யாருடா ரத்தினம் ?? "

" ஹா ஹா நீதாண்டி அம்மு "

" ம்ம்கும்ம்ம் .. எதாச்சும் கடுப்படிச்சுட்டு டக்குனு எப்படித்தான் என்னை சமாதனம் பண்ணுறியோ ? "

" நான் எங்கடி சமாதனம் பண்ணினேன் ?? நீதான் நான்னாலே பாகாய் உருகிடுறியே " என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான் ..

" ஹெலோ ஷக்தி இருக்கியா ? "

" ம்ம்ம் இருக்கேன் .... உனக்கொரு குட் நியுஸ்...கெஸ் பண்ணு பாப்போம்  "

" ஹே எப்போ இந்தியா வர ? கன்பார்ம் ஆச்சா ? "

" அடியே ... குட் நியுஸ் நு சொன்னா ஆமாவா மாமா? என்ன விஷயம் ? ப்ளீஸ் சொல்லுடா ? அப்படின்னு நீ கெஞ்சுவ நானும் கொஞ்சம் கெத்து காட்டாலம்னு பார்த்தா, நீ பாட்டுக்கு என்னையே கேள்வி கேட்குற ? "

" ஹா ஹா ஹா ... என் சந்தோசம் எல்லாமே உன்னை சார்ந்த விஷயமாத்தான் இருக்கும் .. அதுவும் நீயே சொல்ற குட் நியுஸ் நா இதுவாகத்தான் இருக்கும் " என்றாள் அளவில்லா காதலுடன் .. அவளை வேண்டுமென்றே சீண்ட எண்ணியவன்

" இப்படிலாம் பண்ணாதே அம்மு " என்றான்

" என்ன பண்ணினேன் ? "

" ஆமா .. இப்போ நீ இவ்வளோ பாசம் காட்டுற ..அப்பறம் உனக்கு கல்யாணம் ஆனிச்சுனா என்னை மறந்துட்டு மாமியார் வீட்டுக்கு போயிடுவ..நான் என்ன பண்ணுவேன் சொல்லு ? "

" ஷக்தி " என்றவளுக்கு கோபமும் கண்ணீரும் வந்தது

" ஹேய் ஹேய் ..அழுமூஞ்சியா அவதாரம் எடுத்திடாதே தாயே " என்று சிரித்தான் ஷக்தி .. அவனின் சீண்டலில் கோபம் தலைக்கேற கண்ணீர் வந்த வழி தெரியாமல் மறைந்தது ...

" போடா ... இடியட் ... லூசு ... கழுதை ..... உன்னை என்ன பண்ணுறேன் பாரு ,.... எங்க இருந்தாலும் என்னை பார்க்க வந்துதானே  ஆகணும் அப்போ மித்ரா யாருன்னு காட்டுறேன் .. நீ சொன்ன மாதிரியே உன்னை விடுட்டு போறேன் பாரு " என்றாள் விளையாட்டாய் .. ( ஆனால் விளையாட்டு வினையாகுமா ??? )

ஷக்தியோ " ஹே அத்தை பொண்ணு  நான் ஒன்னு சொல்லவா ? " என்றான்

" ம்ம்ம்ம்ம் "

" எனக்கு என்மேல உள்ள நம்பிக்கையை விட .. உன்மேலத்தான் ஜாஸ்த்தி  இருக்கு .. நானே என் வாழ்க்கை போதும்னு முடிவெடுத்தாலும், என் வாக்கையை தொடர ஒரு காரணமாக நீ என்கூடவே இருப்ப... நீ எப்பவும் என்னை விட்டு போக மாட்டே" என்றான் ஆழ்ந்த குரலில் ...

" ஐ லவ் யு ஷக்தி ... ஐ லவ் யு சோ மச் " என்றது அவளின் உள்மனம் ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.