(Reading time: 36 - 72 minutes)

 

" கோவப்படாதே டா "

" ஷ்ஷ்ஷ்ஷ்.... அதெப்படிடா, எனக்கு கோபம் வரும்னு தெரிஞ்சும் நீயே பேசிகிட்டு அப்பறம் 3 நாள் சாப்பாட்டையே பார்க்காத நாய்குட்டி மாதிரி முகத்தை வைச்சுக்குற? "

" ஹா ஹா விடு மச்சான் .. நமக்கென்ன வெட்கமா மானமா சூடா சொரனையா ? "

" டேய் உனக்குன்னு சொல்லு ...நமக்குன்னு சொல்லாதே "

" இவன் ஒருத்தன் ...எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் எடாகொடமா பேசிக்கிட்டு " -ரிஷி

" யாரு நானு ? ம்ம்ம்ம் நேரம்டா..... அந்த பொண்ணை பத்தி வம்பு பேச வந்தது நீயா நானா ? "

" மச்சான் உண்மைய சொல்லு .. உனக்கு அந்த பெண்ணை பத்தி தெரிஞ்சுக்க இண்டரஸ்ட் இல்ல ? "

ஒரு பெருமூச்சுடன் நண்பனின் புறம் திரும்பியவன்,  தீர்க்கமான குரலில் சொன்னான்..

" இருக்கு.. அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சுக்கணும்னு எண்ணம் இருக்கு .. பட் அது நீங்க நெனைக்கிற ரீசன்ல இல்ல ... அவ நிஜம்மாவே என்னைத்தான் தொடர்ந்து வராளா ? அது ஏன் ? அப்படின்னு தெரிஞ்சுக்கணும் .. அண்ட் அதை பத்தி  நீங்க சொல்லி நான்  தெரிஞ்சுக்க விரும்பல .. அவளே என்னைக்காவது சொன்னா நான் தெரிஞ்சுக்குறேன் .. இதுக்கு மேல அவளைப் பத்தி பேச வேணாம் "

" என்னடா திடீர்னு சீரியஸ் ஆகிட்ட? "

" ஈசி டா... உன்னை பத்தி யாரவது பின்னாடி பேசுறாங்கன்னு தெரிஞ்சா உனக்கு எப்படி இருக்கும் ? "

" .... "

" அப்படித்தான் அவளுக்கும் இருக்கும் .. அவ நல்ல பொண்ணோ இல்லையோ , அதை பத்தி பேச நமக்கு உரிமை இல்ல ... ஆபீஸ் கு ஜாய்ன் பண்ணதுமே எல்லாரும் நம்மளை ஒரு மாதிரி அப்ப்ரோச் பண்றாங்கன்னு அவளுக்கு தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படும் அவ மனசு .. "

".... "

" அது மட்டும் இல்ல ........." என்று அவன் முடிப்பதற்குள், அவன் செல்போன் சிணுங்கியது ... திரையில் " ஷக்தி " என்று பெயர் காட்டவும் அது வரை கொதித்து கொண்டு இருந்த இளையவனின் மனம் இளகியது ...

" மச்சான் என் அண்ணன் டா .. நான் பேசிட்டு உன்னை கூப்பிடவா ? " என்று கேட்கவும் ரிஷியும் " சரிடா நான் என் கேபின் கு போறேன் " என்றான் ரிஷி ... ரிஷி அந்த அறையை விட்டு வெளியே வரவும் காவியா அவனை கடந்து போகவும் சரியாய் இருந்தது .. எதிர்பாராத விதமாய் எங்கே அவனை இடித்து விடுவோமோ என்று திரும்பியவள் கீழே விழப்போக, அருகில் இருந்த சுவரில் கை ஊன்றி விழாமல் நின்றாள்...

" காவியா  ஆர் யு ஓகே .? "

" ம்ம்ம்ம் எஸ் அண்ணா தேங்க்ஸ் "

" என்ன சொன்ன ? "

" என்ன ??"

" இல்ல இப்போ என்னை என்னான்னு கூப்பிட்ட? "

" அண்ணான்னு .... சாரி ... மிஸ்டர் ரிஷி "

இந்த இடத்துல நம்ம ரிஷியை பற்றி சொல்லியே ஆகணும் .. ஆறடி உயரம், வட்ட முகம், சுருள் கேசம் , சிரிக்கும் கண்கள் சுருக்கமா சொல்லனும்னா நம்ம மொழி படம் ப்ரித்வி ராஜ்  மாதிரி இருப்பான்.. கூடவே அவனின் இயல்பான விளையாடுத்தனம் பார்பவர்களை நொடி பொழுதில் கவர்ந்து விடுவான் .. அதானாலோ என்னவோ அவனை " அண்ணா " என்று அழைக்க எந்த பெண்ணுக்கும் மனம் வராது... அதை அவன் அறிந்திருந்தாலும் அதை எண்ணி அவன் கர்வம் கொண்டதில்லை ... அப்படி பட்ட சூழ்நிலைகளையே சந்தித்தவன் முதல்முறை ஒரு பெண் " அண்ணா" என்றழைக்கவும் மகிழ்ந்துதான் போனான் ..

" இல்ல காவியா நீங்க என்னை அண்ணான்னே கூப்பிடலாம் "

" அப்போ நீங்களும் என்னை ஒருமையில் கூப்பிடலாமே அண்ணா " என்று அழகாய் சிரித்தாள் காவியதர்ஷினி ... அவளது இதழ்கள் காட்டிய சிரிப்பு அவளது கண்களில் இல்லை.. அதை ரிஷி கவனிக்கவும் இல்லை.. ஒரு வேளை கதிர் இருந்திருந்தால் அவன் கவனித்திருப்பானோ என்னவோ ? !

" நான் ஒன்னு கேட்கவா காவியா ? "

" சொல்லுங்க "

" நீ எதுக்கு இந்த கம்பனில ஜாய்ன் பண்ண ? "

" ஏன் இது நல்ல கம்பனி இல்லையா ? "

" நோ நான் அதை மீன் பண்ணல"

" வேறென்ன மீன் பண்ணுறிங்க ?  உங்க பிரண்ட் காகத்தான் இங்க ஜாய்ன் பன்னிருக்கேனா நு கேட்க வர்ரிங்களா ? "

" காவி ............???"

" எதுக்கு அண்ணா இவ்வளோ ஷாக் .... என்னை நீங்கலாம்  அப்படித்தான் நெனைச்சு வெச்சுருக்கிங்கன்னு எனக்கு தெரியும் ...நீங்க எனக்கு பி பி எஸ் பி நு பெயர் வைச்சிருப்பது கூட தெரியுமே "

" எ..... எ.... எப்படி ?"

" தெரியும்னா தெரியும் அவ்வளவுதான் .. சரி உங்க கேள்விக்கு நானே பதில் சொல்லிடுறேன் "

"..."

" நான் யாருக்காகவும் இந்த கம்பனி வரல .. எனக்கு இந்த பீல்ட் பிடிக்கும் அதான் வேலை தேடினேன் .. என்னுடைய லக்கா இல்லை விதியா தெரியல, நான் ட்ரை பண்ண கம்பனில இதுவும் ஒன்னு .. இங்க வேலை கிடைச்சது .. மத்தப்படி வேற காரணம் இல்ல .. அதை ப்ருவ் பண்ணத்தான் கதிர் சாரை எனக்கு டீம் லீடர்னு  சொன்னதும் வேற டீம் மாத்தி கொடுக்க சொல்லி ரிக்வஸ்ட் பண்ணேன் ... இதெலாம் அவருக்கு ??"

" தெரியாது .. நீ வேற டீம் கேட்ட விஷயம் எனக்கே கொஞ்ச நேரம் முன்னாடித்தான் தெரிய வந்துச்சு .. அதை சொல்லத்தான் வந்தேன் ..பட்  அவன் ........... அவன் பிசியா இருக்கான் "

" ஓகே அண்ணா ... அப்பறமா பேசலாம் " என்று தலையசைத்துவிட்டு தனக்கு கொடுக்கபட்ட கேபினில் அமர்ந்தாள் காவியா .. அக்கம் பக்கம் பார்த்தாள்..யாருமில்லை .... மடைந்திறந்த வெள்ளமாய் கண்ணீர் துளிகள் கன்னங்களை நனைத்தது .... எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியாது .... அவளுக்கு கொடுக்கப்பட்ட கணினியின்  முகத்திரையில் அந்த படத்தை வைத்திருந்தாள்.. அவள்  அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு சிரிக்கும் படம் ..

" என்னை சுத்தி நடக்குறது எல்லாத்துக்குமே நீங்கதான் காரணம் " என்று வாய்விட்டு சொன்னவள்,  மொத்த சோகத்தையும் அழுதே கரைத்தாள்... இன்னொருபுறம் ரிஷியோ அவளைப் பற்றி சிந்தித்தான் ..

 கதிர் சொன்னது உண்மைதான் .. தெரியாத பெண்ணை பற்றி பேசிருக்க கூடாதோ ? அவளிடம் பேசியதிலேயே தெள்ளத் தெளிவாய் ஒன்று தெரிந்தது .. அவள் நேர்மையானவள், யாருக்கும் வளைந்து கொடுக்காதவள் .. இவளையா சில நாட்களாக நண்பனுடன் இணைத்து பேசினோம் ? ஒரு பெண் இப்படி பட்ட பேச்சினை எப்படி தாங்குவாள் ? "மன்னிச்சிரு தங்கச்சி " என்றான் மானசீகமாய்....

தே நேரம் கதிரின் அறையில்,

" ஹெலோ  ஷக்தி"

" கதிர்.. எப்படிடா இருக்க? "

" நான் நல்ல இருக்கேன்.... நீ எப்படி இருக்க? "

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.