(Reading time: 21 - 42 minutes)

ல்லை ...... உங்களுக்கு போயி ஹீரோ ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்துட்டாரே ரிஷி அண்ணா ..அதை நெனச்சேன் சிரிச்சேன் "

" ரிஷி உங்களுக்கு அண்ணாவா ??? எல்லாம் நேரம் .. இந்த ஒரு வார்த்தையிலேயே என் நண்பனை கிளீன் போல்ட் ஆக்கிட்டிங்க நீங்க "

" அடடே .... இந்த பாராட்டை எல்லாம் நாளைக்கு கூட நான் வாங்கிப்பேன் பாஸ் ... அழுது அழுது ரொம்ப பசிக்கிது இப்போ .. இங்க இருந்து போக ஒரு வழி சொல்லுங்களேன் .. "

அழகாய் சிரித்து குறும்புடன் பேசியவளை புதிதாய் பார்த்தான் கதிர் ... இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவளா இவள் ?? எது இவளை சட்டென மாற்றியது ??? அவனுக்கே தெரியவில்லை அவனின் அருகமையில் தான் அவள் தைரியம் பெற்றாள் என்று ..

" என்ன பார்க்குறிங்க ?? "

" ம்ம்ம்ம்ம் ஒண்ணுமில்லை " என்று தலையை உலுக்கி கொண்டான் .. " இருங்க வரேன் " என்றவன், கீழ் தளத்திற்கு சென்று காவலாளியிடம் ஏதோ பேசிவிட்டு மேலே வந்தான் .. அவர்கள் இருவரும் அங்கிருந்து அந்த குணாவை பார்த்தனர் .. காவலாளி ஏதோ அவனிடம் விசாரிக்க, கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டான் குணா ..

" எப்படிங்க ??"

" ஹா ஹா உண்மையை சொன்னேன் "

" அய்யே ரொம்பதான் "

" ஹா ஹா "

" ப்ளீஸ் சொல்லுங்க கதிர் "

" ஈசி தர்ஷினி, கார்ட் கிட்ட சொல்லி அவன் யாரு என்ன வேணும் ??? எதுக்கு இங்கயே நோட்டம் விடுறான்?? எல்லாரும் எப்பவோ வீட்டுக்கு போயாச்சு ... பாஸ் மட்டும்தான் இருக்கார் ... அவர் உன்னை பார்த்தா, சந்தேகத்தின் பெயரில் போலீஸ்ல பிடிச்சு கொடுக்க கூட சான்ஸ் இருக்கு .. போயிடுன்னு சொல்ல சொன்னேன் .. "

".."

" உங்க அத்தை பையன் பார்க்க இவ்ளோ பெருசா இருக்கான், ஆனா போலிஸ் நு சொன்னதும் ஒடிட்டானே ? "

" ஹா ஹா திருடன் போலிஸ் கு தானே பயப்படுவான் "

" ஓஹோ அப்போ அவன் திருடனா ?"

" அச்சோ ஒரு பேச்சுக்கு சொன்னேன் பாஸ் .... " என்றாள் சலிப்பாய் .. கொஞ்சம் இடைவெளி விட்டு,

" தேங்க்ஸ் கதிர் ... இன்னும் ஒரே ஒரு உதவி வேணும் " என்றாள் ..

" என்ன ??"

" இல்ல நம்ம கம்பனி ஏரியா தாண்டுற வரை என்னோடு வர்றிங்களா ?? ஒரு வேளை அவன் வேற பக்கம் இருந்தா ?? "

அவன் அங்கேயே இருப்பான் என்று கதிருக்கு தோன்றவில்லை தான் .. ஆனால் இப்படி பயப்படும் பெண்ணை விட்டு செல்லவும் மனமில்லை ..

" சரி நானே உங்களை டிராப் பண்ணுறேன் .. "

" நிஜம்மாவா ? "

" ஆமா .... "

" தேங்க்ஸ் ... ஆனா என் ஸ்கூட்டி ??? "

" நான் வேணும்னா என் தலையில வெச்சு தூக்கிட்டு வரவா ?? "

" ஹா ஹா இட்ஸ் ஓகே வேணாம் ... நானே நாளைக்கு வந்து எடுத்துக்குறேன் "

" ...."

" என்ன அப்படி பார்க்கறிங்க ? "

" பார்த்திங்களா ? ஒரு பிரச்சனை தீர்ந்ததும் மூளை எவ்வளவு வேகமா யோசிக்கிதுன்னு ... இது பிரச்சனை இருக்கும்போதும் வேலை செய்யணும் " என்றான் நெற்றி பொட்டை தட்டி கொண்டேன் ..

" அப்போ எனக்கு மூளை வேலை செய்யலைன்னு சொல்றிங்க ? " என்றாள் அவள் சோகமாய்..

" அப்படி இல்லமா .... நீங்க அழறதை விட்டுட்டு கொஞ்சம் யோசிச்சி இருந்தா, நீங்களே கார்ட் அங்கிள் கிட்ட இதபத்தி சொல்லி அவனை விரட்டி இருக்கலாம் ... இல்லையா, பின்பக்க வழியா கிளம்பி இருக்கலாம் ... இப்போ என்கிட்ட கேட்ட மாதிரி மத்தவங்க கிட்ட அப்பவே உதவி கேட்டு இருக்கலாம் .. அப்படி உங்க பிரச்சனையை சொல்ல விருப்பம் இல்லைனாலும் கூட, அவங்களோடு பேசிகிட்டே வீடு திரும்புற மாதிரி அவனை அவாய்ட் பண்ணி இருக்கலாம் .. குணாவை பார்த்தா ரொம்ப தைரியசாலி மாதிரி தெரியல ,.... நீங்க பயப்படுரிங்க .. அதுனாலதான் அவன் பயமுருத்துறான் .. "

" ம்ம்ம்ம்ம் "

" உங்களை குறை சொல்லவோ இல்லை எதையும் சுட்டி காட்டணும்னு சொல்லல ... கண்ணீர் எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லைன்னு சொல்ல வரேன் .. இப்போ ரிஷி சொல்லிட்டு போனான் , அதுனால நானும் ஹெல்ப் பண்ணேன் சரியா போச்சு .. ஒருவேளை ரிஷி மாதிரி ஒரு அண்ணன், கதிர் மாதிரி ஒரு .........."

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க

" கதிர் மாதிரி ஒரு ஜெண்டல்மென் " என்று கொலரை தூக்கி விட்டு கொண்டான் ..

அவள் " வெவ்வெவ்வெவ்வெவ்வெ " என்று அழகாய் சிரித்தாள் ....

" ஆ .. ஆங் .. எங்க விட்டேன் .. ம்ம்ம்ம்.. ஒரு வேலை ரிஷி மாதிரி ஒரு அண்ணன், கதிர் மாதிரி ஒரு ஜெண்டல்மென் இல்லனா என்ன பன்னிருப்பிங்க ?? அதுக்குதான் சொல்லுறேன் .... எப்பவும் அழுதுட்டே இருக்காமல் கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணனும்னு "

" மணியே .... மணியின் ஒளியே .... "

" ஹே என்ன இது ??"

" ஓஹோ இந்த பாட்டு வேணாமா ? அப்போ ஓகே ...... குருவே சரணம் ... குருவே சரணம் " என்று அவனுக்கு பெரிய கும்பிடு போட்டாள் காவியதர்ஷினி ..

" ஹஹஹஹ "

" நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான் கதிர் .... அதை வேத வாக்காய் மதித்து என்னுள் மாற்றங்களை கொண்டு வருகிறேன் சரியா ? " என்று சிரித்தாள் ..

" சரிதானுங்க ..வாங்க போலாம் " என்று போலியாய் பயந்தவன் , அவளை அழைத்து கொண்டு சென்றான் ..

காரில்,

" வாவ் நைஸ் கார் "

" சத்தியமா என்னுடையது இல்லை "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.