(Reading time: 21 - 42 minutes)

ஹா ஹா ... அப்பறம் ?? " - காவியா

" பிரண்ட் உடையது .. அவன் ஊருக்கு போயிருக்கான் ... "

" நண்பன் சொத்துனா நமக்கும் பங்கு இருக்கு கதிர் " என்று சிரித்தாள் காவியா

" அச்சச்சோ .. அப்போ என்னை உன் நண்பனாய் சேர்த்துக்காத தர்ஷினி .. "

" ச்ச்ச ச்ச யு ஆர் நாட் மை பிரண்ட் " என்றவளை ஒரு கணம் ஆழமாய் பார்த்தான் கதிரேசன் ..

" உங்களை தான் நான் குருவாக ஏற்றுக் கொண்டேனே " என்று சொல்லி சிரித்தாள் .. பதிலுக்கு அவனும் சிரித்து வைத்தான் ..

" உங்களை பத்தி சொல்லுங்க கதிர் .... "

" ம்ம்ம் என்ன சொல்ல..... நான் வீட்டுல இரண்டாவது பையன் .. எனக்கு முன்னாடி ஒரு அண்ணா, ஷக்தி.. தங்கச்சி முகில்மதி .. என் பாமிலி சிவகங்கை ல இருக்காங்க .. அத்தை, மாமா, அத்தை பொண்ணுங்க ... ம்ம்ம்ம் அவ்ளோதான் "

" வாவ் .. அத்தை பொண்ணா ??" என்று குறும்புடன் சிரித்தாள் காவியா ..

" ஹே .... நீ பாட்டுக்கு பாரதி ராஜா சார் ஸ்டைலில் கதையை ஓட்டாத .... எல்லாரும் ஒன்னத்தானே வளர்ந்தோம் .,. சோ எனக்கு எந்த ஸ்பெஷல் பீலிங் உம் இல்லை .... வீ ஆர் மோர் தேன் பிரண்ட்ஸ் லெஸ் தேன் லவர்ஸ் .. " என்றான் ..

" ஓகே ஓகே ...... "

" உன்னை பத்தி சொல்லு "

மீண்டும் அவள் முகத்தில் சோகம் பரவியது .. அதற்குள் அவள் வீடும் வந்தது .. அவள் வீடருகில் காரை நிறுத்த போக இரண்டு மூன்று பேர் அவர்களையே பார்ப்பதை போல உணர்ந்தான் கதிர் .. அவனின் கேள்வியான பார்வைக்கு பதில் சொன்னாள் காவியா ..

" நாங்க ரொம்ப வருஷமா இங்க குடி இருக்கோம் கதிர் .. அப்பா அம்மாவை இங்க உள்ளவங்களுக்கு நல்லா தெரியும் .. அவங்க போன பிறகு இங்க உள்ளவங்கதான் என்னை பாசமா பார்த்துக்குறாங்க .. இவங்களை மீறி எனக்கு வீட்டுல எந்த பிரச்னையும் வராது ...குணாவால் அதான் இங்க வர முடியல .. உங்களை பார்த்தது இல்லைல .. அதான் இப்படி பார்க்குறாங்க .. நான் சொல்லிகிறேன் .. நீ போய்ட்டு வாங்க "

" இன்னொரு கேள்வி "

" சொல்லுங்க ...."

" இந்த இடம் கொஞ்சம் வசதி படைச்சவங்க   வீடு மாதிரி இருக்கு .. அப்போ நீங்க ??"

" மாடி வீட்டு ஏழை " மீண்டும் சோகமான அவள் முகத்தை பார்த்தான் ..

" சோ பணத்துகாகத்தான் குணா உங்களை டிஸ்டர்ப் பண்றான் "

" செம்ம ஷார்ப் நீங்க "

" ஹா ஹா "

" காபி ???"

" இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன் .. இன்னைக்கு டைம் ஆச்சு .. "

" சோ நீ கெளம்புன்னு சொல்றிங்க ? " என்று சிரித்தவலை பார்த்து கை உயர்த்தியவன்

" அம்மா தாயே நான் ஒண்ணுமே மீன் பண்ணலம்மா " என்றான்

" ஹா ஹா .. சும்மாதான் .... தேங்க்ஸ் கதிர் ... உங்க உதவியை மறக்க மாட்டேன் ....

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது         "

" ஹா ஹா நன்றி நு மூன்றெழுத்து வார்த்தையே அதிகம்தான் .. இதில் திருக்குறள் வேறயா ?? இட்ஸ் ஓகே தர்ஷினி ... டேக் கேர் "

" ம்ம் பை "

" பை "

( அப்பாடா .. அப்படி இப்படின்னு இவங்க ரெண்டு பேரையும் பேச வெச்சாச்சு ... யாரங்கே புவிக்கு ஒரு கப் ஜூஸ் கொடுங்க ... என்னது ? மதியழகன் சீன் வேணுமா ??? ஓஹோ நிலா மேடம் காய்ச்சல் என்னாச்சுன்னு தெரியனுமா ? அப்போதான் ஜூஸ் தருவிங்களா ?? ரைட்டு .. சரி வாங்க அங்க போவோம் )

" ஹே குட்டிமா .... சீக்கிரம் கண் திற டா .... வெளில தான் நான் ரொம்ப தைரியமா இருக்கேன் .. ஆனா மனதளவில் உடைஞ்சு போய்கிட்டே இருக்கேன் .. சாதாரண காய்ச்சல்னு டாக்டர் சொல்லியும் என்னால் தாங்கிக்கவே முடில டா .... உன் குண்டு குண்டு கண்ணை பார்க்கணும், உன் சிரிப்பினில் குழி விழும் கன்னத்தில் நான் விழனும், கோபத்தில நீ பாம்பு மாதிரி " உவ்வ்வ்வ்வ்வ் , உவ்வ்வ்வ்வ் " நு மூச்சு விடுறதை ரசிக்கனும்னு ஆசையா இருக்கு டா ... கண் திறந்திடு ஹனி " என்று தேன்நிலாவின் கரம் பிடித்துக் கொண்டே பார்வையால் பேசிக் கொண்டிருந்தான் மதியழகன் .. நேரம் செல்ல செல்ல அவளின் காய்ச்சல் குறைந்திருந்தாலும் கண் விழிக்கவில்லை .. அப்போதுதான் வீட்டை கவனித்தான் .. இவ்ளோ நேரம் ஆகியும் மனோ சார் ஐ காணோமே .... ஆன்டி கூட வீட்டில் இல்லையே .. எங்க போயிருப்பாங்க ?? போன் பண்ணி சொல்லிடலாமா ? என்று சிந்திபடியே மனோவிற்கு போன் போட்டான் ..

" ஹெலோ ... "

" ஹெலோ மனோ அங்கிள் "

" ஆமா .. நீங்க ??"

" மதி .. மதியழகன் ... "

" ஓ சொல்லு பா .. எப்படி இருக்க ? "

" நான் நல்ல இருக்கேன் .. நீங்க வீட்டுல இருக்கிங்களா ??"

" அடடே .. இல்லைப்பா .. என் சொந்தத்துல ஒரு கல்யாணம் .. நானும் பாக்யமும் நெல்லூர் வந்திருக்கோம் "

" ஓஹோ "

" என்னாச்சு மதி ??"

" ஒ .. ஒண்ணுமில்ல அங்கிள் ...... சும்மாதான் .. உங்க வீடு பக்கமா வந்தேன் .. அதான் ஆன்டி ஐ யும் பார்த்துட்டு போலாமேன்னு "

" நாங்க வர்ற ஒரு வாரம் ஆகும்பா... நிலா வீட்டுல இருப்பா .. பட் தூங்குறா போல .. போன் பண்ணேன் எடுக்கல .. "

" சரி அங்கிள் நீங்க பார்த்துகோங்க .. எனக்கு இன்னொரு கால் வருது நான் அப்பறமா நான் பேசுறேன் ... சரியா ? "

" ஓகே மதி .... பை "

" பை "

போனை வைத்த மதியழகன் யோசனையுடன் தேன்நிலாவை பார்த்தான் .. உடம்பு சரி இல்லாத நேரம் இவள் இங்க எப்படி இருப்பா ?? நாம மட்டும் தனியா இருந்தாலும் நல்லா இருக்காது .. அம்முவை ( பாட்டி) இங்க கூட்டிட்டு வரலாமா ?? அது அம்முவுக்கு சங்கோஜமா இருந்ததுன்னா ?? சரி ஒன்னு பண்ணலாம் என்று முடிவெடுத்தவன் , தன் முடிவை எண்ணி சிரித்தான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.