(Reading time: 21 - 42 minutes)

(கதிரேசன் - காவியதர்ஷினி )

" ஹெலோ "

" ஹெலோ கதிர் "

" தர்ஷினி ????"

" ஹேப்பி நியு யெர் ..... "

" ஹே உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் "

" என்ன பண்ணுறிங்க ??"

" வீட்டுல இருக்கேன் மா ... நீங்க ? "

" நானும்தான் ... நாளைக்கு என்ன ப்ளான் ? "

" இனிதான் தெரியும் தர்ஷினி .. நீங்கதான் முதலில் விஷ் பண்ணிங்க ..... யாரோ வராங்க இருங்க நான் மறுபடி கூப்பிடுறேன் .,. "

" ஓகே ஓகே "

ஏனோ அவனுக்கு தான் தான் முதலில் வாழ்த்தினோம் என்பதில் அவளுக்கு மகிழ்ச்சி .. ஒரு புன்னகையோடு அருகில் இருந்த கிட்டாரை வாசிக்க ஆரம்பித்தாள் காவியதர்ஷினி ..

( மதியழகன் - தேன்நிலா )

டிங் ... டாங் ..

" நிலா .. யாரோ வந்திருக்காங்க " மனோ கதவை திறக்கும் முன்னே அவரை முந்தி கொண்டு ஓடி சென்றாள் நிலா ... அவள் உள்ளனர்வு சொன்ன செய்தியை கேட்டு துள்ளிக் கொண்டே சென்றவளை ஏமாற்றாமல் வந்து நின்றான் மதியழகன் ..

" மதூ ..............." என்று துல்லியவலை பார்த்து, ரகசிய குரலில்

" ஹேப்பி நியு யெர் ஹனி " என்று சொல்லி கண் சிமிட்டினான் .. அதே நேரம் அவர்கள் வீட்டு போன் அலற பாக்கியம் போன் பேச போய்விட, மனோவும் செல்போனை எடுக்க, மின்னல் வேகத்தில் யாருக்கும் தெரியாமல் அன்று ஹாஸ்பிட்டல் முன்பு முத்தமிடாமல் விட்ட இன்னொரு கன்னத்தில் முத்தமிட்டான் கள்வன் அவன் .. அவளை மயக்கிய தேவதையோ அவன் செய்கையில் மயங்கி சிரித்தாள் ...

" யாரு மா வந்துருக்கா ? " என்றபடி அங்கு வந்தார் மனோ ..

" அடடே வாங்க மதி .. ஹேப்பி நியு யெர் "

" உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் "

( ஷக்தி - சங்கமித்ரா )

கண்களை இறுக மூடி மண்டியிட்டு அமர்ந்தவளின் தோள் தொட்டான் ஷக்தி ..

" ப்ளீஸ் டோன்ட் விஷ் மீ " என்று கத்தினாள் மித்ரா கண்களை திறக்காமல்.... அவனின் பிடி இன்னும் இருக்கமாகா

" ஐயோ சொன்னா கேட்காதா ஷக்தி மாமா தவிர வேற யாரும் எனக்கு முதலில் விஷ் பண்ணாதிங்க " என்று கத்திக் கொண்டே ஓடினாள் மித்ரா.... குளிர் காற்றின் மேகத்தில் அவளின் துப்பட்டாவே கால் விரல் நுனியில் சிக்கி கொள்ள அதை கோபமாய் எடுத்தவளின் கண்முன்னே நின்றான் ஷக்தி ஒரு மந்தகாச புன்னகையுடன் கைகளை கட்டிக் கொண்டு ..

" ஷா.. ஷ ...... ஷக்தி .,......மா ..........மா ????" விழி அகல, காற்றில் குரல் கரைய, கண்ணீர் திரையிட பல்லாயிரம் உணர்வுகளை பிரதிபலித்த முகத்தோடு நின்றவளை காதலாய் பார்த்தான் ஷக்தி .. அவளின் கண்ணீரோ

" இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?" என்று கேட்டது ... அவளின் உயரத்திற்கு லேசாய் குனிதவன் தனது ஆள் காட்டி விரலால் அவளின் கண்ணீரை துடைத்து " அழாதே " என்று செய்கை செய்ய, அதற்குமேல் தாங்க மாட்டேன், என்பது போல அவன் மார்பில் சாய்ந்து அழுது தீர்க்க தொடங்கினாள் மித்ரா ..

அவனுக்குமே அங்கு வாய்பேச வார்த்தைகள் தோற்றுபோக, அவளை ஆரத் தழுவினான் ..

" ஹே மித்ரா .... "

" ....."

" அத்தை பொண்ணு .. இங்கு பாரேன் "

" ..."

" பச்ச் .. ஒரே ஒரு நிமிஷம் நிமிர்ந்து பாருடீ "

" என்ன ??"

" அழுமூஞ்சி .... ஹேப்பி நியு யெர் " என்றான் ...

" உனக்கும் ஹேப்பி நியு யெர் டா மாமா ...... ஷக்தி மாமா " என்று சொல்லி அவனது கேசத்தை கலைத்து சிரித்தாள்

நானும் இந்த காதல் ஜோடிகளுக்கு விடைகொடுத்து உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்துக்களை தெரிவிக்கிறேன் .. வருஷத்துல நல்ல வருஷம் கெட்ட வருஷம்னு எதுவும் இல்லை என்னை பொருத்தவரை .. அதிக வலிகள் நிரம்பிய நாட்களில் கூட நமக்கு சாதகமாய் ஆதரவாய் ஏதாவது ஒரு விஷயமோ அல்லது உறவோ அருகில் இருக்கும் .. அதனால் நல்ல வருடம் அமைய வேண்டும் என்று ஆசைமட்டும் படாமல் ஒருவருக்கொருவர் அழகான நாட்களை கடந்து போவதற்கு உதவி அழகான வருடத்தை உருவாக்குவோம் ... நன்றி _/\_

 தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.