(Reading time: 21 - 42 minutes)

ப்படியும் அவ கண் திறந்ததும் எனக்கு தர்மடி இருக்கு ... இட்ஸ் ஓகே என் செல்லம்தானே அடிக்க போறா ?? வாங்கிகிட்டா போச்சு ... அதன் பிறகு நொடிகனமும் விரயமாக்காமல் அதிவிரைவாய் செயல்பட்டான் மதியழகன் .. அவளுக்கு தேவையான உடைகளை எடுக்க எத்தனித்தவன் சட்டென ஏதோ யோசனை வர, புன்னகையுடன் ஒரே ஒரு மாற்று உடை மட்டும் எடுத்து கொண்டான்... அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை, செல்போன், சார்ஜர், ஹாஸ்பிட்டலுக்கு அவள் கொண்டு செல்லும் அவளின் கைப்பை இப்படி அவளுக்கு தேவையான அனைத்தையும் தனது காரில் அடுக்கினான் .. அதன் பின் செல்போன் எடுத்தவன் பாட்டியை அழைத்தான் ....

" அம்மு "

" எங்க கண்ணா இருக்க ??"

" தேன்நிலா வீட்டுல "

" அட .. சொல்லவே இல்லை "

" ரொம்ப குதிக்காதே அம்மு .. உன் பேத்திக்கு உடம்பு சரி இல்லை ..

" அச்சோ நிலாவுக்கா ?? "

" பின்ன என்ன உன் கொள்ளு பேத்திக்கா ? அவங்க பிறக்க இன்னும் டைம் இருக்கும் "

" டேய் போடா படவா .. சரி சொல்லு .. என்னாச்சு நிலாவுக்கு ?? இப்ப்போ எப்படி இருக்கு ?"

" அதை எல்லாம் நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ ..... இப்போ என்ன பண்ணுறேன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு உனக்கு தேவையான டிரஸ், மருந்து மாத்திரை எல்லாம் ரெடி பண்ணு .. "

" எதுக்குடா .. வெளிய போறோமா ? "

" ஆமா ... "

" எங்க ??"

" நம்ம மலர் இல்லம் "

" நீயா சொல்லுற ??"

" நான்தான் அம்மு .. நான் இங்க எப்படி நிலாவோடு தங்க முடியும் ? உனக்கும் மத்தவங்க வீட்டுல தங்க பிடிக்காது .. அதான் .. ஒரு வாரம் மூணு பெரும் அங்க இருந்துட்டு வரலாம் .. உனக்கு ஓகே தானே ? "

" ஓகே யாவா ??? ரொம்ப சந்தோசம் கண்ணா எனக்கு ... நான் உடனே கெளம்பி நிக்கிறேன் " என்றேன் பாட்டி சந்தோஷமாகவே போனை வைத்தார் ..

பாட்டியின் மகிழ்ச்சியின் காரணம் அவன் அறியாமல் இல்லை .. அப்படி என்னதான் இருக்கு அந்த வீட்டில் .. ( எவ்வளவு நாளுதான் காதாபாத்திரங்களுக்கு பில்ட் அப் கொடுக்குறது ? வாங்க ஒரு சேஞ்சுக்கு வீட்டை பத்தி சொல்லுறேன் ...... ஜூஸ் எனக்கு இன்னும் வரல .. கவனிச்சுக்குறேன் )

மலர் இல்லம் ....

மதியழகனின் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை மட்டுமே வாரி தந்த இல்லம் .. மதியழகனின் தந்தை வாசு அவரின் மனைவி மலர் காக கட்டிய வீடு அது .. வீடு என்பதை விட குட்டி அரண்மனை எனலாம் . கடற்கரை அருகே, நிறைய பூக்கள் கொண்ட தோட்டத்தின் நடுவே பிரம்மாண்டமாய் அமைந்திருந்தது அந்த வீடு .வீட்டின் முன் புறம் செய்கை நீர் சுனை அமைக்கப் பட்டு இருந்தது .. முழுக்க முழுக்க இயற்கையோடு ஒன்றிய இல்லமாய் கட்டியிருந்தார் அந்த வீட்டை .. மதியழகன் பிறந்ததும், தவழ்ந்ததும், தாயோடு விளையாடியதும், பாட்டியுடன் சிறிது காலம் வாழ்ந்ததும் அந்த வீட்டில்தான் .. இறுதியாய் தனது தந்தையோடு உண்டானே வாக்கு வாதத்தில் குடும்பம் இரண்டாய் பிரிந்துவிட, மலர் இல்லத்திலும் வசிக்க ஆள் இல்லாமல் போனது .. பாட்டி எவ்வளவோ சொல்லியும் அங்கு தங்க மனமில்லை என்றுவிட்டான் மதியழகன் ..

இத்தனை நாட்கள் பணியாட்களை வைத்து அந்த வீட்டை பராமரித்தது மட்டும்தான் அவனது கடமையாய் இருந்தது .. ஆனால் இன்றோ தன்னவளுக்கு வசந்தமான சூழ்நிலையை கொடுப்பதற்காக அந்த இல்லத்தில் காலடி எடுத்து வைக்க முடிவெடுத்தான் மதி ... ஒரு வகையில் தேன்நிலா அவனது வாழ்வில் வந்ததும் அவனது மனமாற்றத்திற்கு காரணம் எனலாம் .. கதிரவன் போல தாகித்தவன், அந்த நிலவின் அண்மையில் குளிர் காய்ந்தான் ..

அனைத்தையும் ஏற்பாடு செய்தவன், அவளை பூமாலையாய் கைகளில் ஏந்தி காரில் அழைத்து சென்றான் .. வழியில் பாட்டியையும் ஏற்றிக் கொண்டார் .. அவரோ தேன்நிலாவை மடியில் படுக்க வைத்து தலை கொத்தி விட்டார் ..

" உண்மையிலேயே என் பேத்தி நிலாதான் மதி .. அவ எழுந்ததும் குரல் தேன் மாதிரி இருக்கானு சொல்லுறேன் ...... "

" ...."

" என்னடா அப்படி பார்க்குற ?"

கண்ணாடி வழியாக பாட்டியை பின்னே பார்த்து காற்றில் முத்தத்தை பறக்க விட்டான் மதி ..

" கலக்குற அம்மு நானும் அதேதான் நெனச்சேன் முதல் தடவை இவளை பார்த்தப்போ " என்றான் ..

( அதன் பிறகு பாட்டி என்ன சொன்னாங்க ? அந்த வீட்டுல நம்ம நிலா மேடம் என்னலாம் பண்ணாங்கன்னு அடுத்தடுத்த எபிசொட் ல சொல்றேன் .... இப்போ நியு யர் ஸ்பெஷல் ..... காலச்சக்கரத்தை முன்னோக்கி நகர்த்தி .. புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு என்ன நடந்துச்சுன்னு ஒரு குட்டி டீசர் ... பார்ப்போம் )

31 டிசம்பர் 2014 இரவு மணி 11.45 ...

( அன்பெழிலன் - முகில்மதி )

" ஏன் இப்படி உம்முன்னு இருக்க ? முகிலா ? "

" நீங்க பண்ண வேலைக்கு வேறென்ன பண்ணுவாங்க எழில் ??

" ஹே ஓவரா பண்ற டீ நீ ... "

" என்னது டீ யா ?"

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அதுக்கு எதுக்கு கண்ணை உருட்டுற ? "

" அர்த்த ராத்திரியில் ஸ்கைப்ல பேசியே ஆகணுமா ? "

" இன்னும் 15 நிமிஷத்துல புது வருஷம் பிறக்க போகுது உலகமே விழிசிருக்கும் நேரம் உனக்கு அர்த்த ராத்திரியா ? அதுவும் நான் என்ன உன் வீட்டுக்கேவா வந்தேன் ?? வெறும் விடியோ கால் தானே ? அதுவும் நான் இப்போ சொல்ல போற விஷ்யதை கேட்ட நீதான் பீல் பண்ணுவ .... அதான் இப்போவே சொல்லிட்டு புது வருஷம் பிறப்பதுக்கு முன்னாடி உன்னை சமாதானப்படுத்தி சிரிக்க வைக்கலாம்னு நெனச்சேன் "

" அப்படி என்ன சொல்ல போறீங்க ஜீ ??"

" நான் சென்னை போறேன்"

" வாட் ????????"

" ஆமா ... நான் சென்னைக்கு போறேன் .. என் வேலை விஷயமா ? "

அவன் சொன்னதுமே முகம் சோர்ந்துவிட்டது அவளுக்கு .. தனது ராசியை நொந்து கொண்டாள் முகில்மதி .. உயிரையே வைத்திருக்கும் தமையன் துபாய் சென்றான்; இளையவனோ சென்னைக்கு சென்று விட்டான் .. இப்போ இவனா ? ஆயாசமாய் இருந்தது .. அடுத்த 10 நிமிடம் அவளை சமாதனம் செய்யும் பணியில் இறங்கினான் எழில் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.