(Reading time: 21 - 42 minutes)

தே 31 டிசம்பர் இரவு மணி 11.45 

( ஷக்தி - சங்கமித்ரா )

செல்போனில் ஷக்திக்கு 15வது முறை போன் செய்தாள் சங்கமித்ரா ...

" ச்ச ... லைன் ஏ போகல ... எங்க போயி தொலைஞ்ச ஷக்தி???? நான் உன்கிட்டதான் முதலில் பேச ஆசைபடுவேன்னு உனக்கு தெரியாதா ? ஏண்டா என்னை இப்படி அழ வெச்சு பார்குற ?? உன்னுடைய அருகாமையை தவிர வேற என்ன கேட்டுட்டேன் உன்னிடம் ??? ஐ மிஸ் யு டா ... நீ பேசலன்னா எனக்கு புது வருஷமே இல்லைடா ..... ஏன் இப்படி பண்ணுற ? என்னதான் ஆச்சு உனக்கு ??? ஏன்தான் உன் மேல நான் உயிரையே வெச்சிருக்கேனோ ... " கண்ணீருடன் தனதரையில் நடந்து கொண்டிருந்தாள் சங்கமித்ரா ..அவள் ஒளிபரப்பிய காதல் தோல்வி பாடல்கள் ஒரு பாடல் வாரிகள், எரியும் அவள் இதயத்திற்கு எண்ணெய் ஊற்றி கொண்டிருந்தன ..

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது ,... காம்பு எங்கு வாழ்வது ?

காலம் என்னை கேள்வி கேட்குது ,....

கேள்வி இன்று கேலியாகி போனது ......

கண்ணீரை துடைத்து கொண்டு மீண்டும் மடிகணினியை திறந்தாள் .. பேஸ்புக்கிலும் அவனில்லை ..

" ச்ச " என்றவள் எங்கு அங்கேயே இருந்தால் அனைவரும் வந்து புது வருடத்திற்கான வாழ்த்தை சொல்லி விடுவார்களோ என்றஞ்சியவள் கையில் செல்போனுடன் மொட்டை மாடிக்கு சென்றாள் ... மார்கழி மாதம் என்பதால் குளிர்காற்று வேகமாகவே வீசியது ... மீண்டும் மீண்டும் அவனை அழைத்து பார்த்து தோற்று போனாள் .... யாரோ பின்முதுகை தொட

" அவன் விஷ் பண்ணாதவரை நான் யாரு விஷ் பண்றதையும் கேட்கமாட்டேன் " என்று மனதினுள் சொல்லிக்கொண்டே கண்களை இறுக மூடிக் கொண்டு காதை இரு கைகளை பொத்தி மண்டியிட்டு அப்படியே அமர்ந்தாள் மித்ரா ...

அதே 31 டிசம்பர் 2014 இரவு மணி 11.55 ,

(கதிரேசன் - காவியதர்ஷினி )

வீட்டினுள் வந்த தமையனை தேடினான் கதிரேசன் ..

" அதுக்குள்ள அண்ணா எஸ்கேப்பா ? எல்லாம் மித்ராவை பார்க்கத்தான் .. எங்க யாருயுமே காணோம் .. நாமே கால்லிங் பெல்லை அழுத்திடுவோமா ? " என்று அவன் யோசிக்கும்போது, கைகளில் செல்போனுடன் சென்னையில் தன் வீட்டில் அமர்ந்திருந்தாள் காவியதர்ஷினி ..

" புது வருஷம் கூட எனக்கு இன்னொரு நாள்தான் ... நான் மட்டும் ஏன் இப்படி சோகமே உருவாய் நிற்கிறேன் ", "நோ தர்ஷினி இந்த சோக மூஞ்சி உங்களுக்கு நல்லாவே இல்லை " என்று அன்றொரு நாள் கதிரேசன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது .. அவனின் நினைவில் புன்னகை அரும்பாய் மலர்ந்தது .. முதல் விஷ் நாமலே கதிருக்கு பண்ணா என்ன ? எப்படியும் அவரும் சென்னையில் தனியாதானே இருக்கார் ??? " என்று நினைத்தவள் போனை எடுத்தாள் ...

அதே 31 டிசம்பர் 2014 இரவு மணி 11.45

" நிலாம்மா நீதானே எப்பவும் 12 மணிக்கு கேக் கட் பண்ணனும்னு ஆசைபடுவ ? வா டா மா " - மனோ

செல்போனும் கையுமாய் நின்றவள், தனக்கு முதல் வாழ்த்து மதியழகனிடம் இருந்து வரவேண்டும் என காத்திருந்தாள் ...

" இருங்கப்பா " என்றவள் மனதிற்குள் " ச்ச மதியும் பாட்டியும் இருந்தா நல்லா இருக்குமே " என்று நினைத்தாள் .....

டிங் டாங் .... டிங் டாங் .... டிங் டாங் ......... இரவு மணி பன்னிரண்டு ...2014 ஆம் வருடம் முடிந்தே விட்டது .. அதிக நம்பிக்கையையும் புன்னகையையும் முகத்தில் ஏந்தி, அதற்கு பரிசாய் பிரம்மாண்டமான வரவேற்பை உலகெங்கும் பெற்றான் வருடம் 2015 .... ( இப்போ நம்ம ஜோடி என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் )

( அன்பெழிலன் - முகில்மதி )

" ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மை பேபி முகிலா .. உடனே பேபின்னு சொல்றேன்னு முறைக்க கூடாது .. என் கண்ணுக்கு நீ எப்பவும் குழந்தையாத்தான் தெரியுற ... ஆனாலும் உன்மேல லவ் வருது .. இந்த ஆம்பல் ஆம்பல் சாங் ல கூட ஒரு லைன் வரும்

அடடா குமரியின் வளங்கள்

குழந்தையின் குணங்கள் முரண்பாட்டு மூட்டை நீ 

அது நீதான் முகிலா .. உனக்கு இந்த வருஷம் ரொம்ப சந்தோசமா இருக்கும் ஏன்னா நான் உன்கூடவே இருப்பேன் ...புது வருஷம் சோ என்னை திட்டாமல் விஷ் பண்ணு பாப்போம் " என்று மூச்சு விடாமல் பேசி கவிழ்த்தான் அவளை ..

" ஹேப்பி நியு யெர் எழில் .. உங்களுக்கும் இந்த வருஷம் ரொம்ப சந்தோஷமான வருஷமா இருக்கும் ..

" அவ்ளோதானா ? "

" என்ன அவ்ளோதான?

" கிபிட் ஒன்னும் கிடையாதா ? "

" அய்யே கிடையாதே "

" அட போடி ... நீ சரியான போங்கு .. சரி உன் கட்டில் அடில பாரேன் "

" ஏன் "

" பாருமா "

" ஏன்னு சொல்லுங்க "

" ஹான் உன் கட்டிலுக்கடியில் பாம்பு "

" என்னது ? " என்று துள்ளி குதித்து குனிந்து பார்த்தாள் .. அங்கு ஒரு சிகப்பு நிற பெட்டி இருந்தது ..

" என்ன இது எழில் எப்டி இங்கு வந்திச்சு .. "

" அது சீக்ரட் ... உனக்கு என்னுடைய புத்தாண்டு பரிசு "

ஆர்வமாய் திறந்து பார்த்தாள் பிறைநிலவு போல வடிவில் இருந்த மோதிரம் ...

" வாவ் "

" புடிச்சிருக்கா ? "

" ம்ம்ம்ம் ரொம்ப "

" என்ன தானே சொல்ற நீ ?

" ஐயோ போங்க " என்று அழகாய் வெட்க பட்டாள் முகில்மதி "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.